Pages

Wednesday, September 18, 2013

63 நாயன்மார்கள் II -2

                             32:சாக்கிய நாயனார்           

திருச்சங்கமங்கை என்னும் நகரத்தில் தகவுடைய வேளாண் மரபில் உதித்தவர் சாக்கிய நாயனார். இவர் எல்லா உயிர்களிடத்தும் அன்பும், அருளும் ஒருங்கே அமையப் பெற்றவராய்த் திகழ்ந்தார்.சிவனாரிடத்தும் அவரது அடியார்களிடத்தும் பேரன்புமிக்க இப்பெருந் தலைவர் பிறவித் துன்பத்தில் நின்றும் தம்மை விடுவித்துக் கொள்ள மனங் கொண்டார். அதற்கென நன்னெறி நூல்களைக் கற்றறிய எண்ணினார்.காஞ்சிபுரத்திலுள்ள, சாக்கியர்களைக் கண்டு தன் எண்ணத்தைச் செயல்படுத்த முனைந்தார். அடிகளார் காஞ்சிபுரத்திலுள்ள சாக்கியர்களுடன் பழகினார். நூல்கள் பல ஆராய்ந்தார். ஆனால் நாயனாரால் நல்ல வகையான நெறியைக் காண முடியவில்லை. அதனால் அடிகளார் மேலும் பற்பல சமய நூல்களைக் கற்கலானார். இறுதியாக சைவ சமய நூல்களையும் கற்றார். அதன் பிறகு அடிகளார் பிறவிப் பெருங்கடலைக் கடக்க சிவநெறியே சாலச் சிறந்த வழி என்ற ஒப்பற்ற உண்மையைக் கற்றுத் தெரிந்துகொண்டார்! அதனால் அவர் உள்ளத் தெளிவு பெற்றார். மன்னிய சீர்ச் சங்கரன் தாள்தனைப் பணிந்து தூய சிவத்தைச் சித்தத்திலிருத்தி சிந்தை குளிர்ந்தார். சாக்கியர் கோலத்திலே இருந்தமையால் தம்மைப் பிறர் அறியா வண்ணம் சிவநாமத்தை அகத்திலேயே எண்ணி ஒழுகிய சாக்கிய நாயனார் பிறர் அறியாத வண்ணம் சிவலிங்க பூசையும் நடத்தி வந்தார். தினமும் சிவலிங்க தரிசன வழிபாட்டிற்குப் பிறகு தான் உண்பது என்ற உயர்ந்த பழக்கத்தையும் மேற்கொண்டிருந்தார். ஒருநாள் நாயனார் பரந்த நிலவெளி வழியாகச் சென்று கொண்டிருக்கும்பொழுது சிவலிங்க உருவம் ஒன்று வழிபாடு எதுவும் இன்றிக் கிடப்பதைக் கண்டு உள்ளமும் உடலும் உருகினார். இத்திருத்தொண்டர் சிவலிங்கத்தைத் தூய நீராட்டி, நறுமலர் இட்டு, பூசித்து மகிழத் திருவுள்ளம் கொண்டார். ஆனால் அந்த இடத்தில் நீரேது? மலரேது? நல்ல மனம் மட்டும்தானே இருந்தது! சாக்கிய நாயனார் அன்பின் பெருக்கால் அருகே கிடந்த சிறு கல்லை எடுத்து ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியபடியே சிவலிங்கத்தின் மீது போட்டார். அன்பினால் எதற்கும் கட்டுண்ட இறைவன், சாக்கிய நாயனார் எறிந்ததை அன்புக் குழவியின் தளிர்க்கரம் பற்றித் தழுவுவது போன்ற இன்பப் பெருக்காக எண்ணினார்.

இல்லாவிடில் சாக்கிய நாயனார் எறிந்த கல் கயிலையில் தேவியுடன் கொலு வீற்றிருக்கும் எம்பெருமானின் திருவடித் தாள்களில் பொன் மலரென விழுமா என்ன? சாக்கிய நாயனாரின் அன்பு உள்ளத்தைக் கண்டு அரனார் ஆனந்தம் கொண்டு சாக்கிய நாயனாருக்கு அருள்புரியத் திருவுள்ளம் கொண்டார். சாக்கிய நாயனார், அன்று முழுவதும் சிவலிங்க தரிசனத்தை எண்ணி எண்ணி எல்லையில்லா மகிழ்வு பூண்டார். மறுநாளும் சிவலிங்க வழிபாட்டிற்காக அவ்விடத்தை வந்து அடைந்தார்! சிவலிங்கத்தைக் கண்டு, உவகை பூண்டார். அன்பினால் கல்லெறிந்து வழிபட்ட செயலை எண்ணினார். தமக்கு இத்தகைய மனப் பக்குவத்தைத் தந்தருளியது எம்பெருமானின் திருவருட் செயலே என்று உணர்ந்தார். சாக்கியர் வேடத்தில் இருக்கும் நான் மலரால் சிவனாரை வழிபடுவதைப் பிறர் காணில் ஏசுவர். ஆனால், கல்லால் எறிவதை எவராகிலும் காண்கின், வெறுப்பின் மிகுதியால்தான் இவ்வாறு செய்கிறார் என்று எண்ணுவர். இதுவும் அரனாரின் அருள் மொழியே அன்றி, வேறொன்றுமில்லை என்று தமக்குள் எண்ணிப் பெருமிதம் கொண்டார். ஈசனைக் கல்லெறிந்து வழிபட்டு தமது இல்லத்திற்குச் சென்று உண்ணலானார். இவ்வாறு சிவலிங்க வழிபாட்டைத் தவறாமல் தினந்தோறும் நடத்தி வந்தார்.ஒருநாள் சாக்கிய நாயனார் அரனார் மீது கொண்டுள்ள பக்திப் பெருக்கால் சிவலிங்க வழிபாட்டைச் சற்று மறந்த நிலையில் திருவமுது செய்ய அமர்ந்து விட்டார். சட்டென்று எம்பெருமான் நினைவு கொண்ட சாக்கிய நாயனார் உள்ளம் பதறிப் போனார். எம்பெருமானே! இதென்ன சோதனை! எவ்வளவு தவறான செயலைப் புரிந்துவிட்டேன்! அண்ணலே ஏழையின் பிழை பொறுத்தருள்வீரே! என்று புலம்பி உள்ளம் உருகினார். எழுந்தோடினார்! பரந்த நிலவெளியை அடைந்து சிவலிங்கப் பெருமான் மீது அன்பு மேலிட கல் ஒன்றை எடுத்து ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதி எறிந்தார். அப்பொழுது சாக்கிய நாயனாரின் அன்பிற்குக் கட்டுப்பட்ட எம்பெருமான் உமாதேவியாருடன் விடையின் மீது எழுந்தருளினார். சாக்கிய நாயனார் கரம் குவித்து நிலந்தனில் வீழ்ந்து பணிந்து, எம்பெருமானை வணங்கினார். இறைவன் சாக்கிய நாயனாருக்குப் பிறவாப் பேரின்பத்தைக் கொடுத்தருளினார்.

---------------------------------------------------------------------------------------------------------
33:சிறப்புலி நாயனார்

“சீர் கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்”

பொன் கொழிக்கும் பொன்னி வளநாட்டிலே திருவாக்கூர் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள தூயமலர்ச்சோலை, சுடர் தொடு மாடங்களிலும் மாமழை முழக்கம் தாழ மறையொலி முழக்கம் ஓங்கும். அகிற்புகையும், வேள்விச்சாலையிலிருந்து எழும் ஓமப்புகையும் விண்ணும், மண்ணும் பரவும். எம்பெருமானின் திருநாமம் எந்நேரமும் ஒலிக்கும். இத்தகைய மேன்மை மிக்கத் திருவாக்கூர் தலத்தில் நான்மறை ஓதும் அந்தணர் மரபிலே சிறப்புலியார் என்னும் நாமமுடைய சிவனடியார் அவதரித்தார். இவர் இளமை முதற்கொண்டே திருசடைப் பெருமானிடத்தும், திருவெண்ணீற்றன்பர்களிடத்தும் எல்லையில்லாப் பேரன்பு கொண்டிருந்தார். தினந்தோறும் திருவைந்தெழுத்தினை முக்காலமும் நியமமாக ஓதி முத்தீயினை வளர்த்து ஆனேறும் பெருமானை வழிபட்டு வந்தார். இவர் எண்ணற்ற வேள்விகளை சிவாகம முறைப்படி நடத்தி வந்தார். அத்தோடு சிறப்புலி நாயனார் விருந்தோம்பல் இலக்கணமறிந்து சிவனடியார்களை அமுது செய்வித்து அகம் குளிர்ந்தார். இவர் காட்டி வந்த ஈடு இணையற்ற அன்பினாலும் நெறி தவறாத அறத்தினாலும் பிறரால் தொழுவதற்குரியவரானார். இவ்வாறு கொன்றை வேணியர்க்குத் திருத்தொண்டுகள் பல புரிந்து வந்த இச்சிவனருட் செல்வர், நீண்ட காலம் நிலவுலகில் வாழ்ந்தார். எம்பெருமானின் திருவடி நிழலை அடைந்து வாழும் நிலையான பேரருளினைப் பெற்றுப் புகழுற்றார்.

ஆளும் அங்கணருக்கு அன்பர் அணைந்த போது அடியில் தாழ்ந்து
மூளும் ஆதரவு பொங்க முன்பு நின்று இனிய கூறி,
நாளும் நல் அமுதம் ஊட்டி, நயந்தன எல்லாம் நல்கி
நீளும் இன்பத்து உள் தங்கி நிதிமழை மாரி போன்றார்.

ஆளும்....தாழ்ந்து - உலகங்களெல்லாவற்றையும் ஆளுகின்ற அங்கணராகிய சிவபெருமானுடைய அன்பர்கள் வந்தணைந்தபோது அவர்களடியில் வீழ்ந்து பணிந்து; மூளும்....தங்கி - மூண்டெழுகின்ற அன்பு மேன்மேற் பொங்க, அவர்கள் திருமுன்பு நின்று இனிய மொழிகளைக் கூறி, நாள்தோறும் நல்ல உணவு ஊட்டி, அவர்கள் விரும்பிய வெல்லாவற்றையும் கொடுத்து அதனால் மேன்மேலும் பெருகிவளர்கின்ற இன்பத்துள்ளே வாழ்ந்து; நிதிமழை மாரி போன்றார் - நிதியை மழைபோலச் சொரிகின்ற மேகம் போன்றிருந்தனர்.

அன்பர்களை நாடோறும் உபசரித்து வழிபட்டமையால் இன்பம் பெருகிவரும்; அந்த இன்பத்துள்ளே திளைத்து
வாழ்ந்தனர்.

------------------------------------------------------------------------------------------------
                                                    34:சிறுத்தொண்ட நாயனார்
“சிவனது திருவடிகளில் அன்புடன் கூடிய ஒழுக்கமாகும்”

திருச்செங்காட்டங்குடி நீர் வளமும், நில வளமும் நிறைந்த ஒரு சிறந்த நகரம். அந்நகரிலே எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் கோவிலுக்கு கணபதீச்சுரம் என்று பெயர். அந்நகரிலே மாமாத்திரர் என்னும் குலம் உயர்ந்து விளங்கியது. அக்குலத்தைச் சேர்ந்தவர்கள் அரசர் குலத்திற்குப் படைத்தளபதியாகவும், அமைச்சராகவும் பணியாற்றி வந்தனர். இப்பேர்ப்பட்ட உயர்ந்த பெருங்குடியில் பரஞ்சோதியார் என்னும் நாமமுடைய தொண்டர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் பல்லவ மன்னனிடம் படைத் தலைவராகப் பணியாற்றி வந்தார். வாள் வலிமையும், தோள் வலிமையும் கொண்டிருந்த அவர் படைக்கல பயிற்சியில் பேராற்றல் பெற்று விளங்கினார். எண்ணற்ற போர்களில் மன்னனுக்கு ஈடில்லா மாபெரும் வெற்றியை வாங்கிக் கொடுத்தார். இவ்வாறு வீரமிக்கவராய் வாழ்ந்த பரஞ்சோதியார் பக்தி மிக்கவராகவும் இருந்தார். எந்நேரமும் சிவ நாமத்தைச் சிந்தையிலே கொண்டு ஒழுகி வந்தார். அத்தோடு இவர் சிவனடியார்களைச் சிரம்தாழ்த்தி வரவேற்று உபசரித்து உண்பிக்கும் உயர்ந்த பண்பினையும் பெற்றிருந்தார். அடியவர் முன்பு அன்பின் மிகுதியால் தம்மைச் சிறியவராக்கிக்கொண்டு அடக்க ஒடுக்கத்துடன் உள்ளம் உருக உயர் தொண்டாற்றுவதால் இவரைச் சிறுத் தொண்டர் என்று அனைவரும் அழைக்கலாயினர். ஒருமுறை பரஞ்சோதியார் பெரும்படையைத் திரட்டிக் கொண்டு வடநாடு சென்றார். வாதாபியை வென்றார். பாரெல்லாம் பல்லவன் புகழ் பேச வெற்றி முரசம் திக்கெட்டும் முழங்க தென்புலம் திரும்பி வந்தார்.

பரஞ்சோதியாரின் வீரத்தைப் பார்த்த பல்லவன் பெருமகிழ்ச்சிப் பூண்டான். அவையறிய அவரது வீரத்தையும், தீரத்தையும் வானளாவப் போற்றிப் புகழ்ந்தான். விருதுகள் பல வழங்கினான் மன்னன். ஒருநாள் அமைச்சர்கள் பரஞ்சோதியாரின் வெற்றிக்கான முக்கிய காரணத்தை விளக்கும் பொருட்டு மன்னனிடம் சென்றனர். மன்னவா! பரஞ்சோதியார் இறைவனின் திருவடிக் கமலங்களிலே நிறைந்த பக்தியுடையவர். இறைவனின் சக்திக்கும் பரஞ்சோதியாரின் பக்தியுமே இவரது வெற்றிக்குக் காரணம்! இத்தகைய சிவத்தொண்டு மிக்க நம் தளபதியை பகையரசர்கள் வெல்வது என்பது எவ்வாறு சாத்தியமாகும் என்று கூறினார். அமைச்சர்கள் கூறியதைக் கேட்ட மன்னவன் திகைப்படைந்தான். பரஞ்சோதியாரின் சிவபக்தியை எண்ணி எண்ணி சிந்தை குளிர்ந்தான். அதே சமயத்தில் வேதனையும் அடைந்தான். தான் அறியாமல், கடவுளுக்கு ஏதோ பெரும் பிழை செய்துவிட்டதாக எண்ணி மனம் வாடினான் மன்னன். தெய்வத்தைப் போல் போற்றி வழிபடுவதற்குரிய திருத்தொண்டரை போர்முனைக்கு அனுப்பியது மிகப்பெரிய தவறு என்பதையும் உணர்ந்தான். தனக்குள் கலக்கமுற்றான். மன்னன் சித்தம் தடுமாறினான். போர்க்களத்தில் எதிர்பாராமல் இச்சிவனடியார்க்கு ஏதாகிலும் தீங்கு ஏறபட்டிருந்தால் அஃது தமக்கு எத்ததைய பெரும் பழியை ஏற்படுத்தியிருக்கும் என்பதை எண்ணி எண்ணிப் புலம்பினான்.

மன்னன் ஒரு முடிவிற்கு வந்தான். பரஞ்சோதியாரைத் தளபதி என்று எண்ணவில்லை. தொழுதற்குரிய பெரும் பேறு பெற்ற மகான் என்றே கருதினான். அரசன் அவசர அவசரமாக பரஞ்சோதியாரை வரவழைத்தான். பரஞ்சோதியார் அரசரின் கட்டளை கேட்டு அரண்மனைக்கு வந்தார். அரசன் பணிவுடன் அருந்தவத்தினரே! தங்களது மகிமையை உணராமல் தங்களைப் போருக்கு அனுப்பி பல தொல்லைகள் கொடுத்ததற்குப் பொறுத்தருள வேண்டும். இந்த எளியேனுக்காக தாங்கள் எல்லையில்லா இன்னல்களைப் பல காலம் அனுபவித்தீர்கள். இனியும் தாங்கள் எமக்கு ஏவல் புரிதல் ஆகாது. அருள் புரிதல் வேண்டும். தாங்கள் சித்தம் போல் சிவனார் அடிபோற்றி தாங்கள் விரும்பியவாறு சிவநெறியில் சிவத்தொண்டுகள் பல புரிந்து ஒழுகுவீர்களாக என்று இறைஞ்சி நின்றான். மன்னனின் மொழி கேட்ட பரஞ்சோதியார் திடுக்கிட்டார். செய்வதறியாது சிலையாக நின்றார். அவருக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. முடிவில் மன்னனின் ஆணையை சிரமேற்கொண்டார். நடப்பது யாவும் இறைவனின் அருட் செயலே என்று மனதிலே உறுதி பூண்டார். மன்னன் பரஞ்சோதியாருக்கு நிறையப் பொன்னும் பொருளும் வழங்கினான். பரஞ்சோதியார் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார். மன்னன் அவரை ராஜ மரியாதையுடன் ஊருக்கு அனுப்பி வைத்தான். பல்லவ மன்னனிடமிருந்து பொன்னும் பொருளும் பெற்ற பரஞ்சோதியார் அவற்றை ஆலய திருப்பணிக்கும், அடியார்களைப் பேணுவதற்கும் செலவு செய்து வரலானார். அல்லும் பகலும் பக்தி மார்க்கத்தில் வாழத் தொடங்கிய பரஞ்சோதியார் நற்குடியிற் பிறந்த திருவெண்காட்டு நங்கை என்னும் பெயருடைய மங்கை நல்லாளை மணம் புரிந்துகொண்டார்.

அவரது மனைவியாரும் அவரைப் போலவே சிவனாரிடத்தும், அவரது அடியார்களிடத்தும் நல்ல பக்தியும், அன்புடையவராகவும் இருந்தார். பரஞ்சோதியார் அவ்வம்மையாரோடு இல்லறத்தை முறைப்படி நடத்தத் தொடங்கினார். குறள்வழி வாழும் இவ்வில்லறத்தார் இன்பத்தின் முழுப் பயனையும் பெற்றுக் கருத்தொருமித்த காதலர்களாக வாழ்ந்து வந்தனர். பரஞ்சோதியாரும் அவரது மனைவியாரும் தொண்டர்களை அன்போடு வரவேற்று அமுதளித்து விருந்தினர் முன்னுண்டு தாங்கள் பின் உண்ணும் முறை அறிந்து ஒழுகினர். சிவத்தொண்டர்கள் மனங்குளிர அவர்கள் விரும்பியவாறே எது கேட்டாலும் இல்லையெனாது அளித்து அமுதூட்டி மகிழ்ந்தனர். இத்தகைய நல்ல இல்லத்தாருக்கு சிவபெருமானின் அருளாள் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அக்குழந்தைக்குச் சீராளன் எனப் பெயர் சூட்டி மகிழ்ந்தனர் பெற்றோர்கள். இவ்வாறு வாழ்ந்து வந்த சிறுத்தொண்டரின் பெருமையையும், பக்தியையும் உலகோர்க்கு உணர்த்தத் திருவுள்ளம் கொண்டார் சிவபெருமான். அன்று ஒருநாள் சீராளன் பள்ளிக்கச் சென்றிருந்தான். பெற்றோர்கள் விருந்தினரை எதிர்பார்த்து வாயிலிலே நின்றுகொண்டிருந்தனர். நெடுநேரமாகியும் விருந்துண்ண ஒரு சிவனடியார் கூட வராதது கண்டு கவலை மிகக்கொண்ட சிறுத்தொண்டர் விருந்தினரைத் தேடி வெளியே சென்றார். சிறுத்தொண்டரின் மனைவி கவலையோடு உள்ளே சென்று சிவநாமத்தை ஜபிக்கத் தொடங்கினாள். அதுசமயம் சிவபெருமான் பைரவ சந்நியாசியாக வேடம் பூண்டு பரஞ்சோதியார் இல்லத்திற்கு வந்து சேர்ந்தார். எம்பெருமான் வெளியே நின்றபடியே சிவனடியார்களுக்குத் திருவமுது செய்விக்கும் சிறுத்தொண்டர் வீட்டில் இருக்கிறாரா? என்று கேட்டார்.

அடியாரின் குரலைக் கேட்டு மனைக்குள் இருந்த சந்தன நங்கை என்னும் பணிப்பெண் வெளியே ஓடிவந்து, சிறுத்தொண்டர் எங்கு போயிருக்கிறார் என்பதை விளக்கி விட்டு அகத்து வந்து அமருமாறு பணிவன்போடு கேட்டுக் கொண்டாள். பணிப்பெண் மொழிந்ததைக் கேட்ட இறைவன் அப்படியாயின் பெண்கள் தனித்து இருக்கும் இடத்தில் யாம் தங்குவதில்லை என்று கூறினார். இறைவன் மொழிந்ததைக் கேட்டு உள்ளிருந்து ஓடிவந்த சிறத்தொண்டரின் மனைவி சுவாமி! சற்று பொறுங்கள். என் நாதன் எப்படியும் இப்பொழுது வருவார் என்று கூறினாள். அதற்கும் அவ்வடியார் இயைந்து கொடுக்கவில்லை. அதுகண்டு அம்மையார் மீண்டும் சுவாமி ! தொண்டர்களுக்கு அமுது செய்விக்காமல் நாங்கள் உண்பதில்லை. நாடோறும் ஆயிரக்கணக்கான அடியார்கள் அமுதுண்ணும் மனையில் இன்று இதுவரைத் திருத்தொண்டர் ஒருவர் கூட வந்தாரில்லை. அது கருதியே என் நாயகன் அடியார்களைத் தேடிச் சென்றுள்ளார். அவர் எப்படியும் இப்பொழுது வந்துவிடுவார். என் ஐயன் வந்ததும் தங்களது அருட் தோற்றத்தைக் கண்டால் மட்டில்லா மகிழ்ச்சி கொள்வார். அதனால் சுவாமி எங்ஙனமாகிலும் அருள்கூர்ந்து மனைக்குள் எழுந்தருளல் வேண்டும் என்று விண்ணப்பித்தாள். அம்மையார் விண்ணப்பத்தை பைரவர் ஏற்றுக்கொள்ளவில்லை. வடபுலத்திலிருந்து யாம் புறப்பட்டு வந்தது தொண்டரைக் காண்பதற்காகத்தான். அவரின்றி யாம் மனைக்குள் தங்குவதாக இல்லை. எதற்கும் யாம் கோயிலுள்ள ஆத்தி மரத்தின் கீழே காத்திருக்கிறோம். அவர் வந்தால் எம் அடையாளங்களைக் கூறி அனுப்பி வையுங்கள் என்று சொல்லிவிட்டு வேகமாகச் சென்றார் சிவபெருமான்! சிவத்தொண்டரின் மனைவியோ வேதனையோடு உள்ளே சென்றாள்.

பைரவர் சென்ற சற்று நேரத்திற்கெல்லாம் சிவனடியார்கள் யாரையும் காணாமல், வாட்டத்தோடு மனையிற் புகுந்தார் சிறுத்தொண்டர். கணவரின் கவலை தோய்ந்த முகத்தைக் கண்டு மனைவியார் பைரவரின் திருக்கோலத்தைக் கணவருக்கு நன்றாக விளக்கிக் கூறி அன்னார் ஆத்தி மரத்தடியே அமர்ந்திருப்பார் என்பதையும் இயம்பினாள். அதுகேட்டு சிறுத்தொண்டர் உள்ளமும் உடலும் பூரித்துப் போனார். உயர்ந்தேன் என்று மகிழ்ச்சிப் பெருக்கோடு சற்றும் தாமதியாமல் ஆலயத்திற்கு விரைந்தார். ஆத்தி மரத்தடியே வீற்றிருக்கும் அருள் வடிவான பற்றற்ற துறவியின் ஒப்பற்ற அடிதனைப் போற்றி வணங்கி நின்றார். சிறுத்தொண்டரை ஏற இறங்கப் பார்த்த பைரவர் - நீ தான் பெருமை பெற்ற சிறுத்தொண்டரோ என்று கேட்டார். சிறுத்தொண்டர் முகம் மலர, தொண்டரைக் காக்க வந்த தவமிக்க எந்தையே! உலகில் எதற்கும் எத்தகைய தகுதியும் இல்லாத இச்சிறியோனை அந்தி வண்ணர் அடிபோற்றும் அன்பர்கள் இப்பெயரால் அழைப்பதுண்டு. இவ்வடியேனுக்கு அத்தகுதியிருப்பதாகத் தெரியவில்லை. சுவாமி! இனிமேல் சற்றும் தாமதியாமல் இந்த ஏழையின் இல்லத்திற்கு எழுந்தருளி அமுது செய்து அருள வேண்டும் என்று மிக்க பணிவன்போடு வேண்டி நின்றார். அருந் தவத்தீர்! ஐயம் ஒன்றுமில்லை. எமக்குத் தேவையான உணவை வழங்குதல் என்பது உம்மால் ஆகாத காரியம் ஆயிற்றே. ஐயன் இங்ஙனம் எண்ணுதல் ஆகாது. சுவாமி! திருவாய் மலர்ந்து அருளுங்கள். திருவாக்கின்படியே, அமுது செய்விக்கின்றேன். அப்படியா சிறுதொண்டரே! மிக்க மகிழ்ச்சி. நாம் ஆறு மாதத்திற்கு ஒருமுறைதான் உண்போம். பசுவை வதைத்துதான் உண்பது வழக்கம். அக்காலம் இன்றுதான் வந்தது. உம்மால் அத்தகைய பசுவின் மாமிச உணவைச் சமைத்து அமுது செய்ய முடியுமா என்றுதான் சிந்திக்கிறேன்.

சுவாமி! சாலவும் நன்று! இந்த எளியேனுக்கு இதுவா ஒரு பெரிய காரியம். என்னிடம் மூவகை ஆநிரைகள் உண்டு. ஐயன் எழுந்தருளி எத்தகைய ஆநிரை வேண்டுமென்று பணிகின்றீர்களோ, அதனையே பக்குவமாகச் சமைத்து அளிக்கத் தவறேன். பசுவென்றால், நீர் எண்ணுவதுபோல் விலங்கினத்தைப் பற்றி நாம் கூறவில்லை. யாம் குறிப்பிடுவது பசு, ஐந்தாண்டு பிராயமுள்ள இளம் ஆண் பிள்ளையைத்தான்! அந்த ஆண் பிள்ளைக்கு அங்கங்களில் எவ்வித பழுதும் இருக்கக்கூடாது ! அந்த ஆண் பிள்ளையையும், யாம் கூறுவது போன்ற பக்குவத்தில் கறி சமைத்தல் வேண்டும். ஒரு குடிக்கு ஒரு மகனாய்ப் பிறந்துள்ள அப்பாலகனின் உடலைத் தாயார் பிடிக்கத் தந்தையார் அரிந்து, அதனைச் சமைத்தல் வேண்டும். அப்பொழுது மனையிலுள்ளோர் எவரும் வருந்தக்கூடாது. ஒரேபோல் அனைவருமே சந்தோஷத்துடனேயே இருத்தல் வேண்டும். ஐயனின் ஆணை இதுவாயின் அங்ஙனமே அமுது அளிக்கிறோம். நன்று! நீவிர் உடனே சென்று விருந்திற்கான ஏற்பாட்டை முடித்துவிட்டு அமுதுண்ண வேண்டிய தருணத்திற்கு அழைத்துச் செல்லும். அதுவரை யாம் இங்கேயே காத்திருப்போம்! சீக்கிரம் ஆகட்டும். நான் மிகவும் பசித்திருக்கிறேன் என்று பைரவர் கூறினார். சிறுத்தொண்டர் அவரிடம் விடை பெற்றுக்கொண்டு தமது மாளிகையை விரைவாக வந்து அடைந்தார். பெருமனைக் கிழத்தியிடம் பைரவர் பகர்ந்ததை அப்படியே ஒன்றுவிடாமல் விவரமாகக் கூறினார். அவர் மொழிந்தது கேட்டு மனைவியார் எம்பெருமான் அருளியவாறு ஒரு குடிக்கு ஒரு மகனை எங்கு சென்று தேடுவோம் என்றாள். சிறுத்தொண்டர் நற்குண நங்கையே ! நாம் பெற்ற அருந்தவப் புதல்வனையே அதன் பொருட்டு அழைப்போம் என்றார்.

அம்மையாரும், அவரது மொழிக்கு இயைந்தாள். ஆசானிடம் கல்வி பயிலச் சென்றிருக்கும் நமது அன்புச் செல்வனை அழைத்து வாருங்கள் என்று கூறினாள். சிறுத்தொண்டர் பெருமகிழ்ச்சியுடன் பள்ளிக்குச் சென்று மகனை அழைத்துக்கொண்டு மனைக்கு மகிழ்ச்சியுடன் வந்து சேர்ந்தார். எம்பெருமான் உண்மையான சீராளனை மறைத்து மாயச் சீராளனை அவர்களிடம் அனுப்பியதனை அவர்கள் எங்ஙனம் அறிய இயலும். சீராளனை எதிர்பார்த்து, வீட்டுத் திண்ணையோரமாக நின்று கொண்டிருந்த திருவெண்காட்டு நங்கையார், எதிர் சென்று பொன்னிற வண்ணப் பெருமேனியனாகிய மகனை வாரி அணைத்து உச்சி மோந்தவாறு உள்ளே அழைத்துச் சென்றாள். ஒன்றுபட்ட மனமுடைய கணவனும், மனைவியும் சேர்ந்து தெய்வத் தன்மை பொருந்திய சீராளப் பெருமானைச் சீரோடு அரிந்து, பாலோடு, பசுந்தேனோடு, பச்சைக் காய்கறிகளோடு சேர்த்து பக்குவமாகச் சமைப்பதில் முனைந்தனர். உடனே அடிகளார் பைரவச் சங்கரரை அழைத்துவர ஆத்தி மரத்தடிக்குப் புறப்பட்டார். திருவெண்காட்டு நங்கையாரும், சந்தான தாதியாரும் வீட்டைத் தூப தீபத்தாலும் நிறை குடங்களாலும் அலங்காரம் செய்தனர். நன்றாக வீட்டை கோமய நீரால் மெழுகினர். மாக்கோலமிட்டனர். வண்ண மலர்களைப் பரப்பினர். ஆங்காங்கே மலர் மாலைகளும், முத்து மாலைகளும் தோரணங்களும் அழகுறத் தொங்க விட்டனர். விருந்தினரைப் பேணும் பேராற்றல் பெற்ற அடியார் ஆராக் காதலுடன் நமச்சிவாய மந்திரத்தை நினைத்தவாறு பக்திப் பெருக்குடன் ஆத்தி மரத்திற்கு வந்து பைரவரை அழைத்துக்கொண்டு தமது திருமனையை அடைந்தார். பைரவரை வரவேற்று உபசரிக்க ஆவலோடு நின்று கொண்டிருந்த திருவெண்காட்டு நங்கையார், பைரவரது திருவடிக் கமலங்களில் நறு மலரைக் கொட்டிக் குவித்து கும்பிட்டு அழைத்துக்கொண்டு மனையுள் புகுந்தார்.

மலர் பரப்பிய ஆசனத்தில் அவரை அமரச் செய்தார். அம்மையார் நீர்வார்க்க, அடிகளார் பாதத்தை விளக்கினார். திருவடிகளுக்குச் சந்தனம் தடவி மலரால் அர்ச்சித்து, தூப தீபம் காட்டிப் பாத பூஜை செய்த நன்னீரைச் சென்னி மீதும் மனைவியார் சிர மீதும் வீடு முழுவதும் தெளித்தார். இருவரும் அமுது படைக்க ஐயனின் கட்டளையை எதிர்பார்த்து நின்றனர். அதற்கு ஏற்ப அடிகளார் திருவாய் மலர்ந்து, எல்லாக் காய்கறிகளையும் ஒருங்கே படைத்தாக வேண்டும் என்றார். அடியாரின் விருப்பப்படியே அமுது படைத்தனர். அப்பொழுது பைரவர், எல்லா உறுப்புக்களையும் படைத்தீர்களோ? என்று கேட்க, திருவெண்காட்டு நங்கையார், தலை இறைச்சியை மட்டும் அமுதுக்கு உதவாதென்று சமைக்கவில்லை என்று கூறினாள். அதற்கும் இறைவன் அதனையே யாம் உண்போம் என்றார். சந்தன நங்கையார், நான் அதனைச் சமைத்துப் பக்குவம் செய்து வைத்துள்ளேன் என்றவாறு உள்ளே சென்று தலையிறைச்சியைக் கொண்டு வந்தாள். அம்மையாரும், நாயனாரும் சந்தன தாதியாரின் திறத்தினையும்,பேராற்றலையும், தக்க சமயத்தில் தங்களைக் காத்த நிலையையும் எண்ணி உள்ளுக்குள் மகிழ்ந்தனர். அம்மையார் அவ்விறைச்சியையும் அடியவருக்கு படைத்தாள். சிறுத்தொண்டர், அன்போடு அடியாரை நோக்கி சுவாமி! அமுது செய்து அருளலாமே! என்று வணங்கி நின்றார். இறைவன் மேலும் சோதிக்கலானார். அடியார்கள் எவரையாவது அழைத்து வாரும். யாம், தனித்து உண்பதில்லை என்றார். அடியவரின் இம்மொழி கேட்டு சிறுத்தொண்டர் மனம் வருந்தினார். வேதனை மேலிட அடியார்களை எங்ஙனம் தேடி பிடிப்பது ? என்ற கலக்கத்துடன் வெளியே சென்றார். இருமருங்கும் நோக்கி அடியார்கள் எவரையும் காணாமல் மனச்சோர்வுடன், பைரவர் முன் ஏக்கமுடன் வந்து நின்றார்.

சுவாமி! எம்மைப் பொறுத்தருள்க. சிவனடியார்களை எங்கு தேடியும் காணவில்லை. அடியவர்களை போலவே அடியேனும் திருவெண்ணீறு அணிந்துள்ளேன் என்று பணிவன்போடு பகர்ந்தார் திருத்தொண்டர். அப்படியா? நன்று! வருந்தாதீர். நீரும் ஒரு சிவனடியார்தானே! தாராளமாக நீரே எம்முடன் இருந்து உண்ணலாம் என்று ஆணையிட்டார் பைரவர். அம்மையாரை நோக்கி, இருவருக்கும் பக்கத்தில் ஓர் இலை இட்டு, எமக்குப் படைத்தாற் போலவே இறைச்சியும், அன்னமும் படையும் என்று மொழிந்தார். திருவெண்காட்டம்மையாரும், பரமன் பணித்த படியே படைத்தாள். சிறுத்தொண்டர் அமுதுண்ண அமர்ந்தார். தாம் உணவு உண்டபின் தான் அடியார் உண்ணுவார் என்னும் கருத்திற்கு ஏற்ப சிறுத்தொண்டர் உணவில் கையை வைத்தவாறு உண்ண புகுந்தார். பைரவருக்கு கோபம் மேலிட்டது. அவரைத் தடுத்தார். உண்பதற்கு உமக்கு என்ன அவசரம் ; ஆறு மாத காலமாக பட்டினியாக இருக்கிறேன் நான். தினந் தவறாமல் உண்ணும் உமக்குப் பசி அதிகமோ? நன்று! நன்று! உம்முடன் யாம் உண்பதாக இல்லை. நம்முடன் உண்ண உமக்கு மகனிருந்தால் அழைத்து வாரும்! என்று ஆணையிட்டார். எம்பெருமான் மொழிந்தது கேட்ட நாயனார் இடியேறுண்ட நாகம்போல் நடுங்கினார். ஐயனே! அவன் இப்பொழுது உதவான் என்றார். சிறுத்தொண்டரே! அவன் வந்தால்தான் நாம் உண்போம். அவனைப் போய் எப்படியாவது தேடி அழைத்து வாரும் என்று திருவாய் மலர்ந்தருளினார். சிறுத்தொண்டர், சிவபெருமானை மனதில் எண்ணியபடியே தமது அன்பிற்கினிய மனைவியாருடன் வெளியே வந்தார். இருவரும் செய்வதறியாது திகைத்தனர். அடியவருக்கு அமுது அளிக்க தங்களுக்கு ஏற்பட்ட பெரும் தடையை எண்ணிக் கலங்கினர். சிறுத்தொண்டர் நமச்சிவாய மந்திரச் சக்தியால் வாய்விட்டு, சீராளா! வருக!! என்று அழைத்து விட்டார். அம்மையாரும், கண்ணே! மணியே ! சீராளா வாராய்! சிவனடியார் நாம் உய்யும் நிலைபெற உடன் இருந்து திருவமுது செய்ய உன்னையும் அழைக்கின்றார் வா மகனே! வா! என்று உரக்க அழைத்தாள். அப்பொழுது எல்லாம் வல்ல இறைவனின் திருவருளால் சீராளன் பள்ளிச் சென்று திரும்பி வரும் பிள்ளையைப்போல் சதங்கை ஒலிக்க ஓடிவந்தான்.

பெற்றோர்கள் ஒன்றும் புரியாமல் திகைத்தனர். எம்பெருமான் பைரவராக வந்து மாயம் புரிவதை அவர்கள் எவ்வாறு அறிய இயலும்! அம்மையார் மகனை வாரித் தழுவி மகிழ்ந்து உச்சிமோந்து கணவரிடம் கொடுத்தாள். சிறுத்தொண்டரும் அழகு மைந்தனை அன்போடு அணைத்துப் பேருவகை பூண்டார். சிறுத்தொண்டருக்கும், அவரது மனைவியாருக்கும் ஏற்பட்ட வியப்பிற்கு எல்லையே இல்லை. சீராளனை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். அங்கு பைரவரைக் காணோம். உணவை நோக்கினார். கலத்தில் கறிகளில்லை. இல்லத்தில் பேரொளி பிறந்தது. கயிலை மலை மீது களிநடனம் புரியும் மாதொரு பங்கன் மலைமகளுடன் வெள்ளி விடையின்மேல் அருட்காட்சி தந்தார். பூதகணங்களும், தேவர்களும், முனிவர்களும், விஞ்சையர்கள் முதலியோர்களும் புடைசூழ்ந்து வேதகானம் எழுப்பினர். சிறுத்தொண்ட நாயனாரும் திருவெண்காட்டு நங்கையும், சீராளனும், சந்தன தாதியும் சிரமீது கரம் உயர்த்தி சிவநாம மந்திரத்தை ஓதினர்; நிலத்தில் வீழ்ந்து வணங்கினர். ஆனந்தக் கண்ணீர் வடித்து நின்றனர். தேவர்கள் மலர் மாரி பொழிந்தனர். அன்பே சிவம் என்று கருத்தில் கொண்டு, சிவபோதை நிலையில் நின்று, அருந்தவப் புதல்வனையே, அடியார் மனதிற்கேற்ப அரிந்து விருந்து செய்ய இயைந்த சிறுத்தொண்ட நாயனாருக்கும், திருவெண்காட்டு நங்கையாருக்கும், சந்தனத் தாதியாருக்கும், தம்மை அரியும்போது சிவநாமத்தை நினைத்து புன்முறுவல் பூத்த சீராளத் தேவனுக்கும், எவருக்குமே கிட்டாத பெரும் பேற்றை அளித்தார் எம்பெருமான். திருசடைநாதரின் பொற்கழல் பாதத்தின் கீழ் சிறுத்தொண்டரும், உமையம்மையார் திருவடியின் கீழ் திருவெண்காட்டு நங்கையும், சந்தனத் தாதியும், வெற்றிவேல் முருகனின் செஞ்சேவடியின் கீழ் சீராளத் தேவனும் அமர்ந்து இன்புற்றிருக்கும் சிவலோகப் பிராப்தியை அந்நால்வர்க்கும் அளித்து அருள் செய்தார் அம்பலத்திலே ஆடுகின்ற ஆனந்தக் கூத்தன்.

----------------------------------------------------------------------------------------------------------
                                                      35:சுந்தரமூர்த்தி நாயனார்
திருமுனைப்பாடி நாட்டைச் சேர்ந்த திருநாவலூரில் ஆதி சைவ குலத்தில் சுந்தரர் பிறந்தார். இவரது தந்தையார் சடையனார் தாயார் இசைஞானியார். மணப்பருவம் அடைந்தபோது சுந்தரருக்குத் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. மணநாளன்று முதியவர் ஒருவர் வடிவில் அங்குவந்த இறைவன் சுந்தரருடைய பாட்டனார் எழுதிக் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட ஒரு ஓலையைக் காட்டிச் சுந்தரரும் அவர் வழித்தோன்றல்களும் தனக்கு அடிமை என்றார். திருமணம் தடைப்படஇ சுந்தரரை அழைத்துக்கொண்டு கோயிலுள் நுழைந்த வயோதிபர் திடீரென மறைந்தாராம். இறைவனே வந்து தன்னைத் தடுத்தாட் கொண்டதை உணர்ந்த சுந்தரர் “பித்தா பிறை சூடி” என்ற தனது முதல் தேவாரப் பதிகத்தைப் பாடித் துதித்தார். பின்னர் இறை தொண்டில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

சிவத் தலங்கள் தோறும் சென்று தேவாரப் பதிகங்கள் பாடி இறவனைப் பணிந்தார். இறைவன் பால் இவர் கொண்டிருந்த பக்தி “சக மார்க்கம்” என்று சொல்லப்படுகின்ற தோழமை வழியைச் சார்ந்தது. இறைவனைத் தனது தோழனாகக் கருதித் தனக்குத் தேவையானவற்றை எல்லாம் கேட்டுப் பெற்றுக்கொண்டாராம். “நீள நினைந்தடியேன்” என்று தொடங்கும் அவர் பாடிய தேவாரப் பதிகம் மூலம்இ குண்டலூரில் தான் பெற்ற நெல்லை தனது ஊர் கொண்டு சேர்க்க இறைவனிடம் உதவி கேட்பதைக் காணலாம்.

இறைவனுடைய உதவி பெற்றே பரவையார்இ சங்கிலியார் என்ற இரு பெண்களை மணம் புரிந்ததாகக் கூறப்படுகிறது. அரசரான சேரமான் பெருமாள் இவருக்கு நண்பராயிருந்தார். தனது 18 ஆவது வயதில் இவர் சிவனடி சேர்ந்ததாகக் கருதப்படுகின்றது.

இவர் வாழ்ந்தது கி. பி. எட்டாம் நூற்றாண்டளவிலாகும். இவர் பாடிய தேவாரங்கள் 7 ஆம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன. இவர் இயற்றிய திருத்தொண்டத் தொகை என்னும் நூலில் 63 நாயன்மார் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

அற்புதங்கள்
செங்கற்களைப் பொன்னாகப் பெற்றுக் கொண்டது
சிவபெருமான் கொடுத்தருளிய பன்னீராயிரம் பொன்னை விருத்தாச்சலத்தில் உள்ள ஆற்றிலே போட்டு திருவாரூர்க் குளத்தில் எடுத்தது.
காவிரியாறு பிரிந்து வழிவிடச் செய்தது.
முதலை விழுங்கிய பிராமணப்பெண்ணை அம்முதலையின் வாயின்று அழைத்துக் கொடுத்தது.
வெள்ளை யானையில் ஏறி திருக்கைலாசத்திற்கு எழுந்தருளியது.

------------------------------------------------------------------------------------------------------
                                                      36:செருத்துணை நாயனார்

"பூசைனைக்குரிய பொருள் புனிதமானது"
அறம் வழுவாத நெறியினைக் கொண்ட பழங்குடி பெருமக்கள் வாழும் சீரும், செல்வமும் ஒருங்கே அமையப் பெற்றது தஞ்சாவூர். இத்தலத்தில் வீரமிகும் வேளாண் மரபில் செருத்துணை நாயனார் என்னும் சிவத்தொண்டர் வந்தார். இவரது தூய வெண்ணீற்று உள்ளத்தில் எழுகின்ற உணர்வுகளை எல்லாம் எம்பெருமான் பாதகமலங்களின் மீது செலுத்தினார். ஆராக்காதலுடன் சிவனடியார்களுக்கு அரும்பணியாற்றி வந்தார். அடியார்களைக் காப்பதில் பணிவோடு மிக்கத் துணிவையும் பெற்றிருந்தார். அடியார்களுக்கு யாராகிலும் அறிந்தோ அறியாமலோ அபச்சாரம் ஏதாகிலும் செய்தால் உடனே அவர்களைக் கண்டிப்பார்; இல்லாவிடில் தண்டிப்பார். ஆலயத்துள் நடைபெறும் இறைவழிபாடு எவ்வித இடையூறுமின்றி நடைபெற அரும் பாடுபட்டார். அடியார்களின் நலனுக்காகத் தம் <உடல்பொருள் ஆவி மூன்றையும் தியாகம் செய்யவும் துணிந்த நெஞ்சுரம் படைத்தவர். இச்சிவனடியார் திருவாரூர்த்த தியாகேசப் பெருமானுக்கு இடையறாது எத்தனையோ வழிகளில் அருந்தொண்டாற்றி வந்தார்.

ஒருமுறை ஆலயத்து மண்டபத்தில் அமர்ந்து செருத்துணை நாயனார், பகவானுக்காக பூ தொடுத்துக் கொண்டிருந்த தருணத்தில் எதிர்பாராமல் ஒரு சம்பவம் நடந்தது. ஆலய வழிபாட்டிற்காக வந்திருந்த பல்லவப் பேரரசன் காடவர்கோன் கழற்சிங்கனுடைய பட்டத்து ராணி மண்டபத்தருகே கிடந்த பூவை எடுத்து முகர்ந்து பார்த்தாள். அம்மண்டபத்தருகே அமர்ந்து பூத்தொடுத்துக் கொண்டிருந்த செருத்துணை நாயனார் அரசியாரின் செயலைக் கவனித்துச் சினங்கொண்டார். அரசியாயிற்றே என்றுகூடப் பார்க்காமல் அரனாரின் அர்ச்சனைக்குரிய மலர்களை முகர்ந்து பார்த்த குற்றத்திற்காக பட்டத்துப் பெருந்தேவியாரின் கார்குழலைப் பற்றி இழுத்துக் கீழே தள்ளினார். வாளால் மூக்கை சீவிவிட்டார். அங்கு வந்த அரசரிடம் அஞ்சாமல் நடந்தவற்றைப் பற்றி உரைத்து தமது செயலின் திறத்தினை விளக்கினார். ஆண்டவன் மீது அடியார் காட்டும் பக்தியைக் கண்டு அரசன் தலைவணங்கினான். ஆண்டவர் அடியார்களின் பக்திக்குத் தலைவணங்கி, அரசர்க்கும், அரசிக்கும், அடியார்க்கும் அருள் செய்தார். இவ்வாறு வால்மீகிநாதரின் தூய திருவடிகளுக்கு இடையறாது திருத்தொண்டுகள் பல புரிந்து வந்த செருத்துணை நாயனார் எம்பெருமானின் திருவடி நீழலில் ஒன்றினார்.

"செங்கண் விடையார் திருமுன்றில் விழுந்த திருப்பள்ளித் தாமம்
அங்கண் எடுத்து மோந்த அதற்கு அரசன் உரிமைப் பெருந்தேவி
துங்க மணி மூக்கு அரிந்த செருத் துணையார் தூய கழல் இறைஞ்சி
எங்கும் நிகழ்ந்த புகழ்த்துணையார் உரிமை அடிமை எடுத்து உரைப்பாம்"

செங்கண்.....அதற்கு - சிவந்த கண்ணையுடைய இடபத்தினையுடைய இறைவரது திருமுற்றத்தில் விழுந்த திருப்பள்ளித்தாமத்தினை அங்கு எடுத்து மோந்ததற்காக; அரசருரிமைப் பெருந்தேவி.....இறைஞ்சி - அரசரது பட்டத்து உரிமையுடைய பெருந்தேவியாரது பெருமையுடைய அழகிய மூக்கினை அரிந்த செருத்துணையாரது தூய்மையுடைய கழல்களை வணங்கி, (அத்துணை கொண்டு); எங்கும்...உரைப்பாம்

திருச்சிற்றம்பலம்


-------------------------------------------------------------------------------
                                 37.சோமாசிமாற நாயனார்
                         “அன்பராம் சோமாசி மாறனுக்கும் அடியேன்"

No photo description available.
அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான மாற நாயனார், சோழ நாட்டில் திருவம்பர் (அம்பர்) எனும் தலத்தில் வாழ்ந்தவர். இவரது காலம் கி.பி. 9ஆம் நூற்றாண்டு. வேதநாயகனாம் சிவனாரை வேள்விகளில் சிறந்த சோம வேள்வியால் வழிபட்ட அடியவர். ஆதலால், இவரை சோமாசிமாற நாயனார் எனப் போற்றுவர். 

இமைப் பொழுதும் ஈசனை மறவாமல் வாழ்ந்த மாற நாயனாருக்கு வெகு நாட்களாக ஓர் ஆசை. யாகத் தீயில் தாம் சமர்ப்பிக்கும் பழம், வஸ்திரம், பொன் முதலான நிவேதனப் பொருட்களை, சிவனாரே நேரில் வந்து பெற வேண்டும் என்று விரும்பினார் அவர். சிவபெருமானின் அன்புக்குப் பாத்திரமான சுந்தரமூர்த்தி நாயனாரின் நட்பு கிடைத்தால், தனது விருப்பம் நிறைவேறும் என்று எண்ணினார் மாற நாயனார்.

சரி... சுந்தரமூர்த்தி நாயனாரின் நட்பைப் பெறுவது எப்படி? சுந்தரமூர்த்தி நாயனாருக்கு தூதுவளைக் கீரை என்றால் மிகவும் விருப்பம். தினமும் அந்தக் கீரையைப் பறித்து வந்து சுந்தரருக்கு அளித்து, அதன் மூலம் நட்பை வளர்ப்பது என்று முடிவு செய்தார்.

அதன்படி நாள்தோறும் ஆற்றுக்கு நீராடப் போகும் மாற நாயனார் ஆற்றில் நீந்தி அக்கரைக்குச் செல்வார். அங்கு வளர்ந்திருக்கும் தூதுவளைக் கீரையைப் பறித்து வந்து சுத்தப்படுத்தி, சுந்தரருக்குக் கொடுத்து வந்தார். நாளடைவில் சுந்தரரது அன்புக்குப் பாத்திரமானார் சோமாசிமாற நாயனார்.

ஒரு நாள், சுந்தரரிடம் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார் மாற நாயனார். 'நிச்சயம் உமது விருப்பம் நிறைவேறும்!' என்று அருளிய சுந்தரர் அதுகுறித்து இறைவனிடம் விண்ணப்பித்தார்.

சுந்தரரது கோரிக்கையை இறைவன் மறுப்பாரா?! அவரது விண்ணப்பத்தை ஏற்று மாற நாயனாரது விருப்பத்தை நிறைவேற்றுவதாக அருளினார். கூடவே ஒரு நிபந்தனையும் விதித்தார் இறைவன். 'வேள்வியில் எனது பாகத்தைப் பெற எந்த ரூபத்திலும் வருவேன்' என்றார் ஸ்ரீதியாகேச பெருமான்.

ஒரு சுபமுகூர்த்த திருநாள்... வேத விற்பன்னர்கள் சூழ வேள்வி நடத்திக் கொண்டிருந்தார் சோமாசிமாற நாயனார். 'வேள்வியில் இறைவனும் கலந்து கொள்ளப் போகிறார்!' என்ற செய்தி அறிந்து, பொதுமக்களும் அங்கு திரளாகக் கூடியிருந்தனர். இறைவன் என்று வருவார்... எப்போது வருவார் என்று அறிந்து கொள்ள அனைவரும் ஆவலாக இருந்தனர்.

அப்போது, நான்கு நாய்களைக் கையில் பிடித்தபடி புலையன் ஒருவன் வேள்விச் சாலைக்குள் நுழைந்தான். மகன்கள் இருவர் மற்றும் 'கள்' குடத்தை சுமந்து வரும் மனைவி சகிதம் உள்ளே நுழைந்த புலையனைக் கண்ட வேதியர்கள் சிதறி ஓடினர்.

'யாகம் தடைபடுமோ' என்று கலங்கிய சோமாசிமாற நாயனார், விக்னங்கள் அகற்றும் விநாயகரை கண் மூடி பிரார்த்திக்க... வந்திருப்பது இறைவனே என்பதை அவருக்குக் குறிப்பால் உணர்த்தினார் விநாயகர். இதனால் பெரிதும் மகிழ்ந்த சோமாசிமாற நாயனார், புலையனை வணங்கி வரவேற்றதுடன், அவிர்பாகத்தையும் அவனுக்கு அளித்தார்.

மறு கணம் அந்த அதிசயம் நிகழ்ந்தது. புலையன் பிடித்திருந்த நான்கு நாய்களும் நான்கு வேதங்களாக மாற... சிவனாரும் பார்வதிதேவியும் இடப வாகனத்தில் அமர்ந்தபடி சோமாசிமாற நாயனாருக்குக் காட்சி தந்தனர். இந்தச் சம்பவம் திருவாரூருக்கு அருகில் உள்ள திருமாகாளம் என்ற தலத்தில் நிகழ்ந்தது என்பர்.
திருச்சிற்றம்பலம்.

--------------------------------------------------------------------------
                                    38:தண்டியடிகள் நாயனார்
                                  “நாட்டமிகு தண்டிக்கும் அடியேன்”
No photo description available.

சோழ நாட்டிலே தலைசிறந்து விளங்கும் திருவாரூர் என்னும் தலத்தில் தண்யடிகள் என்னும் சிவனருட் செல்வர் வாழ்ந்து வந்தார். இவர் பிறவியிலேயே கண் பார்வை இழந்தவர். புறக்கண் அற்ற இத்தொண்டர் அகக் கண்களால் திருவாரூர்த் தியாகேசப் பெருமானின் திருத்தாளினைக் கண்டு எந்நேரமும் இடையறாமல் வணங்கி வழிபட்டு வந்தார். இவர் காலத்தில் திருவாரூரில் சமணர்கள் ஆதிக்கம் சற்று பரவியிருந்தது. அதனால் சமணர்கள் சைவத் தொண்டர்களுக்குப் பற்பல வழிகளில் இன்னல்களை விளைவித்தனர். தண்டியடிகள் நீராடும் கமலாலய திருக்குளத்திற்கு பக்கத்தில் சமணர்கள் பல மடங்களைக் கட்டிக்கொண்டு தங்கள் மதப் பிரசாரத்தை நடத்தி வரலாயினர். சமணர்கள் குலத்தை மண் மூடிவிடுவார்களோ என்று வேதனைப்பட்டு குளத்தின் பரப்பையும், ஆழத்தையும் பெரிதுபடுத்தி தம்மால் இயன்றளவு திருப்பணியைச் செய்ய எண்ணினார் அடிகளார். கண்ணற்ற அடிகளார் இறைவனின் அருளால் குளத்தின் நடுவிலும், குளத்தைச் சுற்றிலும் அடையாள முளைகள் நட்டுக் கயிறும் கட்டினார். மண்ணை வெட்டி வெட்டி கூடையில் எடுத்துக் கொண்டு கயிற்றை அடையாளமாகப் பிடித்துக்கொண்டு வந்து கொட்டுவார். நாயனாரின் நல்லெண்ணத்தைப் புரிந்துகொள்ள சக்தியற்ற சமணர்கள் அவருக்கு இடையூறுகள் பல விளைவிக்கத் தொடங்கினர். சமணர்கள் நாயனாரை அணுகி இவ்வாறு நீங்கள் மண்ணைத் தோண்டுவதால் இக் குளத்திலுள்ள சிறு ஜீவராசிகள் எல்லாம் இறந்துபோக நேரிடும்.

உமது செயல் அறத்திற்குப் புறம்பானது என்றனர். அவர்கள் பேச்சைக் கேட்டு தமக்குள் சிரித்துக் கொண்ட தண்டியடிகள், கல்லிலுள்ள தேரைக்கும், கருப்பை உயிருக்கும் நல்லுணர்வு தந்து காக்கும் ஈசனுக்கு, இந்த ஜீவராசிகளை எப்படிக் காக்க வேண்டும் என்பது தெரியும். திருசடையானுக்கு நான் செய்யும் இப்பணியால் சிறு ஜீவராசிகளுக்கு மட்டுமல்ல; உங்களுக்கும் எவ்வித தீங்கும் நேராது என்றார். சமணர்கள், உம்மைக் குருடன் என்றுதான் எண்ணினோம். காது மந்தம் போல் இருக்கிறது! இல்லாவிட்டால் நாங்கள் உயிர்கள் இறக்கும் என்று சொல்லி எடுத்து விளக்கும் உண்மையை புரிந்துகொள்ள முடியாமல் போகுமா என்ன? என்று சொல்லிக் கேலியாகச் சிரித்தனர். திரிபுரத்தை எரித்த விரிசடைக் கடவுளின் திருவடியைப் போற்றித் தினமும் நான் அகக் கண்களால் கண்டு களிக்கிறேன். அவனது திருநாமத்தை நாவால் சொல்கிறேன். ஆலயத்தில் ஒலிக்கின்ற வேத முழக்கத்தை காதால் கேட்கிறேன். ஒப்பில்லா அப்பனின் அருளையும், அன்பையும் ஐம்பொறிகளாலும் அனுபவித்து ஆனந்திக்கிறேன். நீங்கள்தான் கண்ணிருந்தும் குருடர்கள் - காதிருந்தும் செவிடர்கள் - நாவிருந்தும் ஊமைகள், என்றார் அடிகள். சமணர்கள் எள்ளி நகையாடினர். தண்டியடிகளுக்கு வெறுப்பும் கோபமும் ஏற்பட்டது. அவர் அவர்களைச் சோதிக்கும் பொருட்டு, அது போகட்டும். எனக்கொரு ஐயம்! நான் எம்பெருமானுடைய திருவருளினால் கண் ஒளி பெற்று நீங்கள் அனைவரும் ஒளி இழந்தீர்களானால் என்ன செய்வீர்கள்? என்று கேட்டார். அங்ஙனம், நீர் கண் பெற்று நாங்கள் கண்ணை இழக்க நேர்ந்தால் நாங்கள் இந்த ஊரிலேயே இருக்கமாட்டோம்.

ஊரைவிட்டே ஓடிவிடுகிறோம் என்று ஆத்திரம் மேலிடக் கூறினர்! சமணர்கள் சினம் பொங்க அவரது கரத்திலிருந்த மண்வெட்டியையும், கூடையையும், முளைகளையும் பிடுங்கி எறிந்தனர். கயிற்றினை அறுத்து எறிந்தனர். சமணர்களின் இத்தகைய தீச் செயல்களால் மனம் நொந்துபோன தண்டியடிகள் கவலையோடு எம்பெருமானிடம் தமது துயரத்தைப் போக்க அருள் புரியுமாறு பிரார்த்தித்தவாறு துயின்றார். அன்றிரவு இறைவன் நாயனாரின் கனவிலே எழுந்தருளி, அன்பனே அஞ்சற்க! மனம் கலங்காதே! யாம் உம்மைக் காப்போம்! உம்மைப் பழித்தது எம்மை பழித்தது போலவே! எமக்கு நீவிர் செய்யும் திருத்தொண்டு இடையறாது நடக்க உமது கண்களுக்கு ஒளி தந்து சமணர்களை ஒளி இழக்கச் செய்வோம் என்று திருவாய் மலர்ந்தார். இறைவன், அரசர் கனவிலும் காட்சி அளித்து - மன்னா ! எமது திருத்தொண்டன் குளத்திலே திருப்பணி செய்கிறான். நீ அவனிடத்திலே சென்று அவனது கருத்தை நிறைவேற்றுவாயாக! அவனது நல்ல திருப்பணிக்கு சதா இடையூறுகளைச் செய்யும் சமணர்களைக் கண்டித்து என் அன்பனுக்கு நியாயம் வழங்குவாய் என்று பணித்தார். பொழுது புலர்ந்ததும் சோழவேந்தன் எம்பெருமானின் கட்டளையை நிறைவேற்றப் புறப்பட்டான். மன்னன் திருக்குளம் வந்தான். தண்டியடிகள் தட்டு தடுமாறிக் கொண்டு திருக்குளத் திருப்பணி செய்வதைக் கண்டான்.

மன்னன் அடிகளாரை வணங்கினான். கனவில் செஞ்சடையான் மொழிந்ததைக் கூறினான். தண்டியடிகளும், சமணர்கள் தமக்கு அளித்த இடையூறுகளை ஒன்றுவிடாமல் மன்னனிடம் எடுத்து விளக்கி நியாயம் வேண்டினார். மன்னன் சமணர்களை அழைத்து வரக் கட்டளையிட்டான். சமணர்களும் வந்தனர். மன்னனிடம் சமணர்கள் தண்டியடிகளிடம் தாங்கள் சவால்விட்டு சினத்துடன் செப்பியதைப் பற்றிக் கூறினர். தண்டியடிகள் ஒளி பெற்றால், நாங்கள் ஊரை விட்டு ஓடுவது உறுதி என்று சமணர்கள் கூறியதைக் கேட்ட மன்னன் அடிகளாரையும், சமணர்களையும் தமது அமைச்சர்களையும், அவை ஆலோசகர்களையும் கலந்து ஓர் முடிவிற்கு வந்தான். மன்னன், தவநெறிமிக்க தண்டியடிகளை பார்த்து, அருந்தவத்தீர்! நீர் எம்மிடம் மொழிந்ததுபோல் எம்பெருமான் திருவருளினால் கண்பார்வை பெற்று காட்டுவீராகுக! என்று பயபக்தியுடன் கேட்டான். நாயனார் திருக்குளத்தில் இறங்கினார். மண்ணுற வீழ்ந்து கண்ணுதற் கடவுளை உள்ளக் கண்களால் கண்டு துதித்தார். ஐயனே! நான் தங்களுக்கு அடிமை என்பதை உலகறியச் செய்ய எனக்கு கண் ஒளி தந்து அருள்காட்டும் என்று பிரார்த்தித்தார். ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியவாறு, கையிரண்டையும் தலைமீது கூப்பியவாறு நீரில் மூழ்கினார் அடிகளார். இறைவன் திருவருளால் நீரிடை மூழ்கிய நாயனார் கண் ஒளி பெற்று எழுந்தார். தண்டியடிகள் கண் பெற்றதும் புளகாங்கிதம் மேலிட பூங்கோயில் திருக்கோபுரத்தைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

கரம் தூக்கித் தொழுதார். அரசனை வணங்கினார். மன்னன் கரங்குவித்து சிரம் தாழ்த்தி நாயனாரை வணங்கினான். அதே சமயத்தில், சமணர்கள் கண் ஒளியை இழந்தனர். அனைவரும் குருடர்களாக நின்று தவித்தனர். நீதி வழுவாமல் ஆட்சிபுரியும் அரசன் அவர்களை நோக்கி, நீங்கள் கூறியபடி ஒருவர்கூட திருவாரூரில் இல்லாமல் அனைவரும் ஓடிப் போய்விடுங்கள் என்றார். அமைச்சர்களிடம், சமணர்களைத் துரத்த ஏற்பாடு செய்யுங்கள் என்றும் கட்டளையிட்டார். தண்டியடிகள் குளத்தைப் பார்த்து மகிழ்ந்தவாறு பூங்கோயிலை அடைந்து எம்பெருமானைக் கண்குளிர - மனம் குளிர கண்டு களித்துப் பேரின்பக் கூத்தாடினார். தண்டியடிகள் தாம் செய்து கொண்டிருந்த திருப்பணியைத் தொடர்ந்து செய்யத் தொடங்கினார். அரசன் அவருக்கு வேண்டிய அத்தனை உதவிகளையும் செய்து கௌரவித்தான். அரனார் புரிந்த அருளில் தண்டியடிகள் தாம் எண்ணியபடியே திருக்குளத்தை மிகமிகப் பெரிதாகக் கட்டி முடித்தார். அடிகளாரின் அறப்பணியை அரசரும் மக்களும் கொண்டாடி பெருமிதம் பூண்டனர். நாயனார் நெடுநாள் பூவுலகில் பக்தியுடன் வாழ்ந்து நீடுபுகழ் பெற்று திருசடையான் திருவடி நிழலை அடைந்து பேரின்ப நிலையை எய்தினார்.

கண்ணின் மணிக ளவையின்றிக்
கயிறு தடவிக் குளந்தொட்ட
எண்ணில் பெருமைத் திருத்தொண்டர்
பாத மிறைஞ்சி யிடர்நீங்கி
விண்ணில் வாழ்வார் தாம்வேண்டப்
புரங்கள் வெகுண்டார் வேற்காட்டூர்
உண்ணி லாவும் புகழ்த்தொண்டர் மூர்க்கர் செய்கை யுரைக்கின்றாம்.

"கண்ணின் மணிகளாய ஒளியின்றிக் கயிற்றைத் தடவிக் கொண்டே ஏறியும் இழிந்தும் பொருந்திய திருத்தொண்டாற் றிய தண்டியடிகளின் திருவடிகளை வணங்கித் துன்பங்கள் பலவும் நீங்கப்பெற்று, வானில் வாழும் தேவர்கள் வேண்ட முப்புரங்களையும் எரித்த பெருமான் விரும்பி உறையும் திருவேற்காட்டில் வாழும் நிலவிய புகழுடைய தொண்டர் மூர்க்க நாயனாரது செயலினை இனி எடுத்து மொழிவாம். தண்டியடிகள் நாயனார் புராணம் முற்றிற்று."

திருச்சிற்றம்பலம்
------------------------------------------------------------------------
                             39:
திருக்குறிப்புத் தொண்ட நாயனார்
No photo description available.
உமாதேவியார், முப்பத்திரெண்டு அறங்களையும் புரிந்து சிவபெருமானை வழிபட்ட பெருமைமிக்க காஞ்சி என்னும் திருத்தலத்திலே ஏகாலியர் மரபிலே தோன்றிய சிவத் தொண்டர்தான் திருக்குறிப்பு்த தொண்டர்! சிவனடியார்களின், குறிப்பறிந்து தொண்டாற்றும் ஆற்றல் மிக்கவராகையால் இவர் இச்சிறப்புப் பெயர் பெற்றார். அடியார் ஆடையின் மாசுகழப்பதாலே தம்முடைய பிறப்பின் மாசு கழியும் என்ற தத்துவத்தை உணர்ந்த இப்பெரியார், தொண்டர்களின் துணிகளை துவைத்துக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டார். அடியார்களின் பக்தியையும், புகழையும், அன்பையும் உலகறியச் செய்யும் இ‌றைவன் திருக்குறிப்புத் தொண்டரின் பெருமையையும் உலகறியச் செய்யத் திருவுள்ளம் கொண்டார். ஒருநாள் இறைவன் கந்தல் உடுத்துக்கொண்டு மேனியிலே திருநீறு விளங்க, திருக்குறிப்புத் தொண்டர் இல்லத்திற்கு எழுந்தருளினார். அப்பொழுது குளிர்காலம்! குளிரினால் நடுங்கிக் கொண்டே வந்தார் எம்பெருமான்! அடியாரின் வருகையைக் கண்ட தொண்டர் விரைந்து சென்று அடியாரின் அடிபணிந்து அவரை வரவேற்று அமரச் செய்தார். மெலி்ந்த உடல் ! திருவெண்ணீற்று பிரகாசம் ! அழுக்கடைந்த கந்தல் துணி !

இவற்றைக் கண்டு மனம் வருந்தினார் திருக்குறிப்புத் தொண்டர். அடியாரை நோக்கி, ஐய‌‌னே! தங்‌கள் திருமேனி சொல்ல முடியாத அளவிற்கு இளைத்திருப்பதற்கு யாது காரணமோ ? என்று வினவினார் இறைவன் குறுந‌கை புரிந்தார். அதன் பொருளைப் புரிந்துகொள்ள முடியாத திருக்குறிப்புத் தொண்டர் தேவரீர் எம் இல்லத்திலே எழுந்தருளியது எமது பாக்கியம்தான். மேலும் எனக்குப் புண்ணியம் தரக்கூடியது அடியாரின் ஆடையைச் சுத்தம் செய்து தருவதற்கு எமக்கு ஐயன் இடும் கட்டளைதான். அதனால் தங்கள் ஆடையை என்னிடம் தாருங்கள். தங்கள் மேனியில் உள்ள திருநீறு போல் சுத்தமாக வெளுத்துத் தருகிறேன் என்று பணிவோடு கேட்டார். அன்பின் அமுதமொழி கேட்டு சிவனார் பெரும் அதிர்ச்சி அடைந்தவர் போல் பாவ‌னை செய்தார். ஐயையோ ! இக்கந்‌தலை உம்மிடம் கொடுத்துவிட்டு யாம் என்ன செய்வது ? தாங்க முடியாத இந்தக் குளிர் காலத்தில் இத்துணியையும் வெளுப்பதற்காக உம்மிடம் கொடுத்துவிட்டால் என் பாடு திண்டாட்டம்தான் என்றார். திருக்குறிப்புத் தொண்டர் முகத்தில் வேதனை படர்ந்தது ! தொண்டர் கவலையும், கலக்கமும் மேலிட மீண்டும் தேவரீர் அங்ஙனம் இயம்பலாகாது என்றார். சங்கரர் சற்று நேரம் சிந்திப்பவர் போல் பாவனை செய்தார். மாலை மயங்குவதற்குள் துவைத்துச் சுத்தமாக உலர்த்தி எம்மிடம் சேர்ப்பிக்க வேண்டும்.

அந்தி நீங்குவதற்குள் தங்கள் துணியைச் சுத்தமாக வெளுத்துக்கொண்டு வந்து தருகிறேன். அப்படி என்றால் நன்று! ஏனென்றால் இது குளிர் காலம். எம்மால் குளிரைச் சற்று கூடப் பொறுக்க முடியாது. தொண்டரைச் சோதிக்க வந்த அம்பலவாணர், கந்தல் துணியைக் கொடுத்தார். அவரும் கந்தலைக் கண்களில் ஒற்றிக்கொண்டு நீர்த்துறை நோக்கி களிப்போடு புறப்பட்டார். நீர்த்துறையை அடைந்த தொண்டர், ஆடையைத் துவைக்கத் தொ‌டங்கினார். இறைவர் வருணனுக்குக் கட்டளையிட்டார். உடனே வருண பகவான் பூலோகத்திற்குப் புறப்பட்டார். அனல் சூழ்‌ந்த வானம், திடீ‌ரென்று கார் மேகங்களால் மூழ்கியது ! எங்கும் கும்மிருட்டு கவ்வக் கொண்டது. தொண்டரின் இதயத்திலும் இருள் சூழ்ந்தது. கண் கலங்கினார். மழை பயங்கரமாகப் பெய்யத் தொடங்கியது. இடியும் மின்னலும் ஒன்றொடொன்று கலந்து பயங்கரமாக மாறியது! பேய் மழை அடிக்கத் ‌‌தொடங்கியது. தொண்டரோ செய்வதறியாது திகைத்தார். மழை நின்றுவிடும் என்று எண்ணி ஏமாந்தார். மழை நின்றபாடில்லை. பொழுது மட்டும் போய்க் கொண்டே இருந்தது. கங்கையை பெருக்க விட்டவன் இப்பொழுது வரு‌ணனைப் பெருக விட்டான். அடியார் இடி சாய்ந்த மரம் போல் நிலை தளர்ந்தார்.

அவர் உடல் மழையாலோ அன்றிக் குளிராலோ நடுங்கவில்லை; அடியார் மீது கொண்டுள்ள பக்தியாலும், பாசத்தால் ஏற்பட்டுள்ள பயத்தாலும் நடுங்கியது. அவரது கண்களில் நீர் மல்கியது. மனம் துடிதுடித்துப் புலம்பினார். ஐயோ! ஏழை நான் என் செய்வேன் ? ‌தொண்டருக்குச் செய்யும் திருப்பணியில் இப்படியொரு பேரிடி வீழ்ந்து விட்டதே! மழை ஆரம்பித்தபோது வீட்டிற்குச் சென்று காற்றாட உலர்த்தியிருந்தால் கூட இந்நேரம் உலர்ந்திருக்குமோ ! அவ்வாறு செய்யாமல் மழை நின்றுவிடும், நின்றுவிடும் என்று காலந் தாழ்த்தி இப்பொழுது ஈரத்துணியோடு நிற்கிறேன் ! என் அய்யனுக்கு என்ன பதில் கூறுவேன்? பாவம் அவர் இந்நேரம் குளிரால் நடுநடுங்கிக் கொண்டிருப்பாரே! தள்ளாத வயதி்ல் அப் பெரியவருக்கு இந்த அளவிற்கு பொல்லாத கொடுமையைச் செய்த பாவியாகி விட்டேனே! வெளுத்துத் தருகிறேன் என்று வீரம் பேசிய நான், வெறும் வீணாகி விட்டேனே ! அடியார்க்குத் துரோகியாக மாறிய பின்னும் இந்தப் பாவி உயிரை வைத்துக் கொண்டு உலகில் வாழ்வதா ? ஆகாது, ஆகவே ஆகாது! திருக்குறிப்புத் ‌தொண்டர், துணி துவைக்கும் கருங்கல்லை நோக்கினார்.

தம் தலையைப் பாறையில் மோதி உடைத்துக் கொள்ளப் போனார். அதற்குமேல் அன்புத் தொண்டனைச் சோதனை செய்து புண்படுத்த விரும்பவில்லை ‌எம்பெருமான் ! தொண்டரைக் காக்க திருவுள்ளம் பற்றினார். நாயனார் தலை, கல்லில் மோதிச் சிதையுறுவதற்குள் எம்பெருமானின் மலர்க்கை பாறையினின்றும் வெளிப்பட்டு அவரது சிரத்தைத் தாங்கிக் காத்தது. அருட்கரம் ஒன்று தம் தலையைத் தடுத்தது கண்டு திருக்குறிப்புத் தொண்டர் திகைத்தார். அப்‌பொழுது வானத்திலே பேரொளி பிறந்தது. உமையாளுடன் விடையின் மீது காட்சியளித்தார் சிவபெருமான் ! திருக்குறிப்புத் தொண்டர் கீழே விழுந்து எழுந்து அரனாரை வணங்கினார். எம்பெருமான், அடியவரைத் திருமுகம் மலர நோக்கி, மூ்ன்று உலகத்திற்கும் உம்முடைய பெருமையையும், புகழையும் வெளிப்படுத்தினோம். இனிமேல் கயிலைக்கு வந்து எம்முடனே இருப்பீராக என்று பேரருள் பாலித்தார். திருக்குறிப்புத் தொண்ட நாயனார் பல காலம் உலகில் வாழ்ந்து, திருத்தொண்டுகள் பல செய்தார். இறுதியில் இறைவன் மலரடி அணைந்து மகிழும் பேரின்பத்தைப் பெற்றார், திருக்குறிப்புத் தொண்ட நாயனார்.

திருச்சிற்றம்பலம்
--------------------------------------------------------------------
40:திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
No photo description available.
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், தமிழ்நாட்டில், சைவ சமயத்தவர்களால் நாயன்மார்கள் என அழைக்கப்படும் அறுபத்து மூவருள் முதல் வைத்து எண்ணப்படும் நால்வருள் ஒருவராவார். இவர் கி.பி. ஏழாம் நூற்றாண்டில், சீர்காழி என்னும் ஊரில், பிராமணக் குடும்பத்திற் பிறந்தார். இவரது தந்தையார் சிவபாதவிருதயர், தாயார் இசைஞானியார்.
இவர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்தபோது, தந்தையாருடன் கோயிலுக்குச் சென்றதாகவும், அங்கே குழந்தையைக் கரையில் அமரவிட்டுக் குளிக்கச் சென்ற தந்தையார், சிறிது நேரம் நீருள் மூழ்கியிருந்த சமயம், தந்தையைக் காணாத குழந்தை அம்மையே அப்பா என்று கூவி அழுததாகவும், அப்போது உமாதேவியார், சிவபெருமானுடன் இவர் முன் காட்சி கொடுத்து ஞானப்பாலூட்டியதாகவும் சொல்லப்படுகிறது. குளித்துவிட்டு வெளியே வந்த தந்தையார், பிள்ளையின் வாயிலிருந்து பால் வடிவதைக் கவனித்து, அது குறித்துக் கேட்கவே கோயிலிலுள்ள இறைவனைச் சுட்டிக்காட்டித் “தோடுடைய செவியன்” என்று தொடங்கும் தனது முதல் தேவாரத்தைத் திருஞானசம்பந்தர் பாடினார் என்பது தொன்நம்பிக்கை.
சம்பந்தமூர்த்தி சுவாமிகள் பாடிய தலங்களுள் முக்கியமான தலம் மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் ஆகும். இக் கோயிலை அவர் கரக்கோயில் எனப் பாடியுள்ளார். தமிழ்நாட்டில் கரக்கோயில் எனப்படும் ஒரே கோயில் மேலக்கடம்பூர் மட்டுமே.
அற்புதங்கள்
மூன்றாம் வயதினிலே உமையம்மையாரிடம் திருமுலைப்பால் உண்டமை
சிவபெருமானிடத்தே பொற்றாளமும் ,முத்துப்பல்லக்கும், முத்துச்சின்னமும் ,முத்துக்குடையும், முத்துப்பந்தரும், உலவாக் கிளியும் பெற்றது. வேதாரணியத்திலே திருக்கதவு அடைக்கப்பாடியது.
சமணர்களை வெற்றி கொள்ள வேண்டி மதுரை சென்ற போது, மதுரைக்குக் கிழக்கு வாயில் வழியாகச் செல்ல வேண்டும் என்று கருதி, மதுரையின் கிழக்கு எல்லையாக விளங்கம் திருப்பூவணத்தின் (தற்போது திருப்புவனம் என்று அழைக்கப்படுகிறது)வைகை ஆற்றின் வடகரையை வந்து அடைந்தார், ஆற்றில் கால் வைக்க முயன்ற போது ஆற்று மணல்கள் எல்லாம் சிவலிங்கங்களாகக் காட்சி அளித்தன, எனவே அங்கு நின்றபடியே தென்திருப்பூவணமே என முடியும் பதிகம் பாடினார், சிவபெருமான் நந்தியை சாய்ந்திருக்கச் சொல்லி காட்சி அருளினார், இதனால் திருப்பூவணத்திலே நந்தி இன்றும் முதுகு சாய்ந்தே உள்ளது.வைகை ஆற்றின் தென்கரையில் உள்ள சிவலிங்கத்தை வடகரையில் உள்ள ஆடித்தபசு மண்டபத்தில் நின்றே இன்றும் தரிசிக்கலாம், வைகை ஆற்றின் குறுக்கே ஆயிரக்கணக்கான சிவலிங்கங்கள் புதையுண்டு கிடக்கின்றன, அவற்றை இன்றும் மக்கள் கண்டெடுக்கின்றனர்.
அபாலை நிலத்தை நெய்தல் நிலமாகும்படி பாடியது
பாண்டியனுக்குக் கூனையும் சுரத்தையும் போக்கியது. தேவாரத் திருவேட்டை அக்கினியில் இட்டுப் பச்சையாய் எடுத்தது. வைகையிலே திருவேட்டை விட்டு எதிரேறும்படி செய்தது. சிவபெருமானிடத்தே படிக்காசு பெற்றது.
விடத்தினால் இறந்த வணிகனை உயிர்ப்பித்தது.

முதலாம் திருமுறை திருஞானசம்பந்த நாயனார்
இரண்டாம் திருமுறை திருஞானசம்பந்த நாயனார்
மூன்றாம் திருமுறை திருஞானசம்பந்த நாயனார்

திருச்சிற்றம்பலம்
-----------------------------------------------------------------------------------------------
41:திருநாவுக்கரசு நாயனார்
"சொற்றுணை என அடி எடுத்து நற்றுணையாவது நமச்சிவாயவே"
No photo description available.
திருமுனைப்பாடி பல்லவ நாட்டின்கண் அமைந்துள்ளது. இத்தலத்தில் ஓங்கி உயர்ந்த மாடங்களும், கூடகோபுரங்களும், பண்டக மாலைகளும், மணிமண்டபங்களும் சிவத் தலங்களும் நிறைந்துள்ளன. புத்தம் புதுமலர்க் கொத்துக்களைத் தாங்கிக் கொண்டு பெருகி ஓடிவரும் பெண்னண ஆற்றின் பெருவளத்திலே செந்நெல்லும், செங்கரும்பும் செழித்து காணப்பட்டன. இங்கு வாழும் மக்கள் நல்லொழுக்கத்திலும், நன்னெரியிலும் தமக்குவமை இல்லாதவர்களாய் வாழ்ந்து வந்தனர். உலகமெங்கும் சைவநெறியை நிலைநிறுத்திய சமயக்குரவர் நால்வருள் அப்பர், சுந்தரர் என்னும் இரு நாயன்மார்கள் தோன்றிய பெருøம இப்பழம் பெரும்பதி‌யையே சேரும் ! இத்த‌ைகைய பல்வளம் கொழிக்கும் திரு‌முனைப்பாடியில் தெய்வத் தன்மைமிக்கத் திருவாமூர் என்னும் சிவத்தலம் உள்ளது. சைவ நெறி வழங்கிய பெருமையையும், புகழையும் தன்னகத்தே கொண்டுள்ளது !இங்கு வருந்துவன கொங்கைகளின் பாரத்தைத் தாங்கமுடியாத மங்கையர்களின் நாரினும் மெல்லிடைகளே! ஒலிப்பன அம்மகளிர் அணிந்துள்ள அழகிய காற்சிலம்புகளே ! இரங்குபவன அம்மெல்லிடையார்களின் இடையிலே அழகுற அறியப் பெற்றுள்ள மாணிக்காஞ்சியே! ஓங்கி உயர்ந்து காணப்படுவது மாடமாளிகைகளே ! ஒழுகுபவன அறங்களே ! நீங்குபவன தீய நெறிகளே ! நெருங்குபவன பெருங்குடியே ! இப்படியாகப் புகழ்படும், இப்பெரு நகரிலே வேளாண் மரபிலே குறுக்கையர்குடி மிகச் சிறந்த தொன்றாக விளங்கி வந்தது. இக்குறுக்கையர் கு‌டியிலே புகழனார் என்னும் பெயருடைய சிவத்தொண்டர் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவரது மனைவியாக மாதினியார் என்னும் பெருமனைக் கிழத்தியார் அமைந்திருந்தார்.அம்மையார் பெண்களுள் மென்மையும், இனிமையும் பூண்ட தன்மையினராய் விளங்கினார்கள். கணவனும் மனைவியும் இல்லற நெறி உணர்ந்து வள்ளுவன் வாய்மொழிக்கு ஏற்ப வாழ்ந்தனர். இவ்வாறு, இவர்கள் இல்லறமெனும் நல்லறத்தை இனிது நடத்தி வரும்பொழுது இறைவன்‌ அருளால் மாதினியார் கருவுற்றாள்.

அம்மையார் மணி வயிற்றில் நின்றும் திருமகளே வந்து தோன்றினாற்போல் அருள்மிக்க அழகிய பெண்மகவு பிறந்தது. அப்பெண் குழந்தைக்குத் திலகவதி என்று திருநாமம் சூட்டிப் பெற்றோர்கள் பெருமகிழ்ச்சி பூண்டனர். திலகவதியார் தளிர்நடை பயின்று மழலையமுதம் பொழியும் நாளில் அம்‌மையார் மீண்டும் கருவுற்றார். அம்மையார் மணிவயிற்றிலிருந்து திருசடையானின் அருள்வடிவமாக சைவம் ஓங்க தமிழ் வளர கலைகள் செழிக்க மருள் எல்லாம் போக்கும் அருள் வடிவமாக கோடி சூரியப் பிரகாசத்துடன் கூடிய ஆண் குழந்தை பிறந்தது. பெறோர்கள் அந்த ஆண் குழந்தைக்கு மருள் நீக்கியார் என்று நாமகரணம் சூட்டினர். மருள் நீ்ககியார் முற்பிறப்பில் வாகீச முனிவராக இருந்தார். இவர் திருக் கைலாயத்திதல் அமர்ந்து எம்பெருமானின் திருவடியை அடைய அருந்தவம் புரிந்து வந்தார். ஒரு சமயம் இராவணன் புஷ்பக விமானத்தில் வந்து கொண்டிருந்தான். கைலாய மலையைப் புஷ்பக விமானம் அணுகியதும் அங்கு எழுந்தருளியிருந்த நந்தியெம்பெருமான் ராவணனிடம், இப்புண்ணிய மலை எம்பெருமான் எழுந்தருளியிருக்கின்ற திருமலை. அதனால் நீ வலப் பக்கமாகப் போய்விடு என்று பணித்தார். மதியற்ற ராவணன் நந்தியெம்பெருமானுடைய பெரு‌மையையும் அவர் எம்பெருமானிடம் கொண்டுள்ள பக்தியின் திறத்தினையும் எண்ணிப் பார்க்க இயலாத நிலையில மந்தி போல் முகத்தை வைத்துக் கொணடிருக்கும் நீ இந்த மாவீரன் இராவணனுக்கா அறிவுரை கூறுகின்றாய் ? என்று சினத்தோடு செப்பினான். அளவு கடந்த கோபம் கொண்ட நந்தியெம்பெருமான் அப்படி என்றால் உன்நாடும், உன் வீரமும் குரங்கினாலேயே அழிந்து போகக்கடவது ! என்று கூறித் சாபம் கொடுத்தார்.இராவணன் ஆத்திரத்தோடு என்னைத் தடுத்து நிறுத்திய இந்த கைலாய மலையை அடியோடு பெயர்த்துõக்கி எறிகிறேன் பார் என்று கூறித் தனது வலிமை பொருந்திய இருபது கரங்களாலும் மலையை அசைத்தான். அது சமயம் ஈசுவரியுடன் நவமணி பீடத்தில் எழுந்தருளியிருந்த எம்பெருமான் தமது தண்டை சிலம்பணிந்த சேவடி பாதப் பெருவிரல் நுனி நகத்தால் லேசாக அழுத்தினார். அக்கணமே இராவணனது இருபது கரங்களும் மலையினடியில் சிக்கியது. இராவணன் கரங்களை அசைக்க முடியாமல் துடித்துக் கொண்டிருந்தான். ஓலக்குரல் எழுப்பினான். அத்திருமலையில் தவமிருந்து வந்த அருந்தவசி‌யான வாகீசரின் செவிகளில் இராவ்ணனின் ஓலக் குரல் வீழ்ந்தது. இராவணின் நிலைக்கண்டு மனம் இளகினார் முனிவர். அவனது துயரம் நீங்குவதற்கு நல்லதொரு உபாயம் சொன்னார்.

எம்பெருமான் இசைக்குக் கட்டுப்பட்டவர். அவரை இசையால் வசப்படுத்தினால் இத்துயரத்திலிருந்து விடுபடுவதற்கு உகந்த மார்க்கும் பிறக்கும்.வாகீசமுனிவரின் அருளுரை கேட்ட ராவணன் தனது நரம்பை யாழாக்கி பண் இசைத்தான். பரமனின் பாதகமலங்களைப் போற்றி பணிந்தான்.பக்தனின் இசைவெள்ளம் ஈசனின் செவிகளில் தேனமுதமாய்ப் பாய்ந்தது. சிவனார் சிந்தை குளிர்ந்தார். அவன் முன்னால் பெருமான் பிரசன்னமானார்.இராவணின் பிழையைப் பொறுத்தார். சந்திஹாஸம்ய என்னும் வாள் ஒன்றை அவனுக்கு அளித்ததோடு ஐம்பது லட்சம் ஆண்டுகள் உயிர்வாழும் பெரும் பேற்றினையும் அளித்தார். இராவணன் எம்பருபெருமானைத் தோத்திரத்தால் மேலும் வழிபட்டான். பேரின்பப் பெருக்குடன் இலங்கைக்குச் சென்றான்.அதே சமயம் நந்தி தேவருக்கு வாகீச முனிவரின் செயல் சினத்தை மூட்டியது. இராவணனுக்கு உதவிசெய்த வாகீச முனிவரை பூலோகததில் பிறக்குமாறு சாபம் கொடுத்தார். அவரும் மாதினியார் மணிவயிற்றில் அவதரித்தார். நாவின் நலத்தினால் நாடு போற்ற அவதரித்த வாகீசரும் மருள்நீக்கியார் என்னும் நாமத்தை பெற்றார். மருள் நீக்கியாரும் நற்பண்புகளு‌க்கெல்லாம் திலக்ம் போன்ற திலகவதியும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து குழந்‌தைப் பருவத்தைக் கடந்தனர். இருவரும் கல்வி கேளிவிகளில் மேம்பட்டு சகல கலா வல்லவர்களாக விளங்கினர். அப்பொழுது திலகவதியாருக்கு பன்னிரண்டாவது பிராயம். பெற்றோர்கள் திலகவதியை அரசனிடம் சேனாதிபதியாக பணியாற்றும் கலப்பகையார் என்னும் வீரருக்கு மணம் முடிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். இத்தருணத்தில் புகழனார் விண்ணுலகை எய்தினார். கணவன் இறந்து போன துயரத்தைத் தாங்கமுடியாத மாதினியாரும் தொடர்ந்து அவரோடு எம்பெருமானின் திருவடியில் ஒன்றினாள்.பெற்றோர்கள் விண்ணுலகு எய்திய துக்கத்தைத் தாளமுடியாமல் திலகவதியாரும், மருள்நீக்கியாரும்‌ பெருந்துயரத்தில் ஆழ்‌ந்தனர். இந்த நிலையில்தான் ஊழ்வினை அவர்களை மேலும் துன்புறுத்தியது. திலகவதியாருக்கு நிச்சயித்திருந்த கலிப்பகையார், போர்க்களத்தில் வீர சொர்க்கம் அடைந்தார் ! இந்தச் செய்தியைக் கேள்வியுற்ற திலகவதியாரும் மருள்நீக்கியாரும் வெந்த புண்ணில் வேல் பாய்ந்தாற்போன்ற வேதனையை அடைந்தார்.

கலிப்பகையார் உயிர் துறந்த பின்னர் திலகவதியார் உ‌யிர் வாழ விரும்பவில்லை, கலிப்பகையாருக்கும் தனக்கும் திருமணமாகாவிட்டாலும் அவரை மனதில் கணவராக வரிந்துவிட்ட நிலையில் திலகவதியார் இந்த முடிவுக்கு வந்தாள். நான் என் கணவர் சென்ற இடத்திற்கே சென்றுவிடப் போகிறேன் என்று திலகவதியார் உலகை வெறுத்து உயிர் துறக்க எண்ணினாள். அம்முடிவைக் கண்ட மருள்நீக்கியார் தமக்கையாரிடம் பணிந்து வேண்டினார்.அருமைச் சகோதரி ! தாயும் நம்மைவிட்டு மறைந்த பின்னர் உம்மையே அவர்களாக எண்ணி நான் ஓரளவு மன உறுதியுடன் வாழ நினைத்தேன். எனக்குக் ‌கொழுகொம்பாக உள்ள தங்களும் என்னை இந்த தரணியில் தனியே விட்டுச் செல்வதனால் நான் தங்களுக்கு முன்பே உயிர் துறப்பது திண்ணம் என்று கூறி அழுதார். உடன்பிறந்தோன் மீது தாம் கொண்டுள்ள அளவற்ற கருணையினாலும், அன்பினாலும் திலகவதியார் மனம் மாறினாள். மருள் நீக்கியாருக்காக வேண்‌டி மண்ணுலகில் வாழ முடிவு பூண்டõள். அம்மையார் மங்கள அணிகளையும் மின்னும் வைரங்களையும், பளபளக்கும் பட்டாடடைகளையும் களைந்து உலக பற்று அற்று, எல்லா உயிர்களிடத்தும் கருணை பூண்டு மனைத்தவம் புரியும் மங்கையராக வாழ்த் தலைப்பட்டாள்.தமக்கையார் தமக்காக உயிர்வாழ்த் துணிந்தது கண்டு மருள்நீக்கியார் துயரத்தை ஒழித்து மனமகிழ்ச்சி பூண்டார். மருள்நீக்கியார் உலகில் யாக்கை நிலையாமை இளமை நிலையாமை செல்வ நிலையாமை ஆகியவற்றை சிந்தித்துத் தெளிந்து அறிந்து நல்ல அறங்களைச் செய்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். திருவாமூரில் பொன்னும் மணியும் வேண்டிய அளவிற்குப் செலவு செய்து அறச்சாலைகளையும், தண்ணீர்ப் பந்தல்களையும் அமைத்தார். சாலைகளைச் செப்பனிட்டார். அழகிய சோலைகளை வளர்த்தார். நீர் நிலைகள் பல வெட்டினார். விருந்தினரை உபசரித்து, உண்பித்து வகையோடு வழிபட்டு வேண்டியதை ஈந்து மகிழ்ந்தார் ! தம்மை நாடிவந்த புலவர்கள், பாடி மகிழக் கேட்டு அவர்களது வாடிய முகம் மாறப் பரிசு‌கள் பல அளித்துப் பெருமை பூண்டார். இவ்வாறாக, மருள்நீக்கியார் பற்பல தருமங்களைப் பாகுபாடின்றி வாரி வாரி வழங்கி வற்றாத பெருமையை சீரோடு பெற்றுச் சிறப்போடு வாழ்ந்து வந்தார். இத்தகைய அறநெறி ஒழுக்கங்களை இடையறாது நடத்தி வந்த மருள்நீக்கியார் பற்றற்ற உலக வாழ்க்கைகய விட்டு விலகுவதற்காக வேண்டி சமண சமய‌‌‌‌மே சிறந்த என்று கருதினார். அச்சமயத்தில் ‌சேர்ந்தார். ஐந்தெழுத்து மந்திரத்தின் மகிமையையும், திருவெண்ணீற்றின் திறத்தினையும் உணர்ந்தவருக்கு சமண நூல்களை எல்லாம் கற்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.

சமண நூல்களைக் கற்றறிந்து வரும் பொருட்டு, அருகிலுள்ள பாடலிபுரத்திற்கு சென்று அங்குள்ள ஓர் சமணப் பள்ளியில் சேர்ந்தார். அங்கு சில, நாட்கள் தங்கியிருந்து சமண நூல்களைக் கற்றுணர்ந்து வல்லுனர் ஆனார். மருள்நீக்கியார் சமண மதத்தில் பெற்‌ற பெரும் புலமையைப் பாராட்டி மகிழந்த சமணர்கள் அவருக்கு தருமசேனர் என்னும் சிறப்புப் பட்டத்தைக் கெõடுத்து கெளரவித்தனர். மருள்நீக்கியார் சமண மதத்தில் பெற்ற புலமையின் வல்லமையால் ஒரு முறை பெளத்திர்களை வாதில் வென்று, சமண சமயத்தின் ‌தலைமைப்பதவியையும் பெற்றார். சமண மதத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவராக மருள் நீக்கியார் வாழ்ந்து வந்ததற்கு நேர்மாறாக அவரது தமக்கையாரான திலகவதியார் சைவ சமயத்தில் மிகுந்த பற்றுடையவராய் சிவநெறியைச் சார்ந்து ஒழுகலானாள். சித்தத்தை சிவனார்க்காக அர்ப்பணித்த திலகவதியார் திருக்கெடிலத்தின் வடகரையில் அமைந்துள்ள திருவதிகை வீரட்டானத்தில் மடம் ஒன்றை அமைத்துக் கொண்டாள். வீரட்டானேசுரர்க்குத் திருத்தொண்டுகள் பல புரியத் தொடங்கினாள். தினந்தோறும் திலகவதியார் வைகரைத் துயிலெழுந்து தூய நீராடி ‌கோயிலின் முன்னே அலகிட்டு கோமாய நீரால் சுத்தமாக மெழுகிக் கோலமிடுவாள். மலர்வனம் சென்று, நறுந்தேன் மலர்களைக் கொய்து வந்து மாலைகள் தொடுத்து எம்பெருமானுக்குச் சாத்தி வணங்கி வழிபடுவாள் திலகவதி !இவ்வாறு அம்மையார் கோயிலில் அருந்தவம் புரிந்து வரும் நாளில் மருள்நீக்கியார் சமண சமயத்தில் புலமை பெற்று அச்சமயத்திலேயே மூழ்கி வாழ்கிறார் என்ற செய்தி கேட்டாள். அளவு கடந்த துயரமடைந்தான். தமது சகோதரனை எப்படியாகிலும் சமணத்தைத் துறந்து சைவத்தில் சேரச் செய்ய முயற்ச்சித்தாள். நாள்தோறும் எம்பெருமானிடம் விண்ணப்பம் செய்தாள். ஒருநாள் இறைவன் திலகவதியின் கனவிலே எழுந்தருளி, திலகவதி ! கலங்காதே ! முற்பிறப்பில் மருள்நீக்கியார் ஓர் முனிவனாக இருந்து என்னை அடைய அருந்தவம் புரிந்தவன். இப்பிறப்பில் அவனைக் சூலை ‌நோயால் தடுத்தாட்கொள்வோம் என்றார். எம்பெருமானின் அருள்மொழி கேட்டுத் திலகவதியார் துயில் நீங்கினாள். துயர் மறந்தாள். சிவநாம சிந்தை பூண்டாள். மன அமைதி கொண்டாள். உடன் பிறந்தோன் உளம் திருந்தி வரும் நன்னாளை எதிர்ப்பார்த்து இருந்தாள். எம்பெருமான் மருள் நீக்கியாரை தடுத்தாட்கொள்ளத் திருவுள்ளம் கொண்டு அவர் உடலில் சூலை நோய் உண்டாகச் செய்தார். சூலை நோ‌ய் அவரது வயிற்றுள் புகுந்து அதனது உக்கிரத்தைத் தொடங்கியது.வடவைத்தீயும், கொடிய நஞ்சும், வச்சிரமும் ‌போல் புகுந்த சூலைநோ்ய் மருள்நீக்கியாரின் குடலைக் குடைந்து தாங்க முடியாத அளவிற்கு அவருக்குப் பெரும் ‌‌வேதனையைக் கொடுத்தது. வெந்தணல் ‌போல் மேனியைச் சுட்டெரித்துக் கொண்டிருந்த சூலை நோயின் கொடிய துயரத்தைத் தாங்க முடியாத மருள்நீக்கியார் சேõர்ந்து கீழே சாய்ந்தார். அவர் தாம் சமணச் சமயத்தில் பயின்ற மணி மந்திரங்களைப் பயன்படுத்தி, நோயினைத் தீர்க்க முயன்றார்.நோயின் உக்ரம் சற்றும் குறையவில்லை. வினாடிக்கு வினாடி வலி அதிகரித்துக் கொண்டே இருந்தது. வேதனையைத் தாங்க முடியாத அவர் தணலிடைப் புழுப்போல் துடித்தார். சற்று நேரத்தில் மயக்கமுற்றார்.

மருள் நீக்கியாரின் மயக்க நிலையைக் கண்ட சமண குருமார்கள் அக்கணமே ஒன்றுதிரண்டார்கள். பற்பல சமண நெறிவழிகளைக் கையாண்டு நோயைக் குணமாக்க முயன்று பயன் ஒன்றும் காணாது தோற்றுப் போயினர். சமண குருமார்கள் நடத்திய வழிமுறைகளால் மருள் நீக்கியாரைப் பற்றிக் கொண்டிருந்த சூலைநோய் முன்னைவிட அதிகப்பட்டதே தவிர சற்றுக்கூடக் குறையவில்லை. சமண குருமார்களோ அவருக்குத் தொடர்ந்து மயிற்பீலியைக் கொண்டு தடவுவதும், குண்டிகை நீரை மந்திரித்து அவரைக் குடிக்கச் செய்வதுமாகவே இருந்தனர். இறுதியில், சமண குருமார்கள் தங்களால் இக்கொடிய நோயைத தீர்க்க முடியாது என்று தங்களது தோல்வியை ஒப்புக்கொண்டனர். அவரைக் கைவிட்டு விட்டுச் சென்றனர்.மருள்நீக்கியார் வேறு வழியின்றி தமக்கையாரிடம் செல்லத் தீர்மானித்தார். சமையற்காரனை அøழத்தார். தமக்கு ஏற்பட்டுள்ள துயரத்தைப் பற்‌றித் திலகவதியாரிடம் சென்று அறிவிக்குமாறு ‌சொல்லி அவனை அனுப்பி வைததார். சமயற்காரனும் அக்கணமே பாடலிபுரத்தை விட்டகன்றான். பொழுது புலரும் தருணத்தில் திருவதிகையை வந்து அடைந்தான். நான் தங்கள் உடன் பிறந்தவரால் அனுப்பப்பட்டவன். அவருக்குக் கடுமையான சூலை நோய் கண்டுள்ளது. சமண குருமார்கள் அனைவரும் அந்நோயின் கொடுமையைப் போக்க முடியாத நிலையில் அவரைக் கைவட்டு போயினர். தமது இத்த‌கைய துயர நிலையைத் தங்களிடம் அறிவித்து வரும்படி என்னை அனுப்பியுள்ளார்கள். சமையற்காரன் சொன்ன செய்தி அம்மையாருக்குத் ‌தீயாகச் சுட்டது. அம்மையார் மன வருத்தங் கொண்டார்கள். இருந்தும் சமணர்களை வெறுக்கும் அம்மையார், அப்பா! சமணர்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு நான் ஒருபோதும் வர‌மாட்டேன் என்று அவனிடம் சென்று உரைப்பாயாக ! என்று விடை பகர்ந்து அவனைத் திரும்ப அனுப்பி வைத்தாள் திலகவதி ! சமையற்காரன் விடைபெற்றுப் புறப்பட்டான். சமையற்காரன் பாடலிபுரத்தை வந்‌தடைந்தான். மருள்நீக்கியார் ஆவலோடு அவனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அவன் மருள்நீக்கியாரிடம் திலகவதியார் கூறியவற்றைக் கூறினான். தமக்கையாரின் பதிலைக் கேட்டு மருள்நீக்கியார் மனம் வாடிச் சோர்வுற்றார். வேறு வழியின்றி திருவதிகைக்குப் புறப்பட முடிவு செய்தார்.இத்தகைய எண்ணம் எழுந்த‌ை மாத்திரத்தி‌லேயே, நோயின் உக்கிரம் உடம்பில் சற்று தணிந்தாற்போல் இருந்தது அவருக்கு! பாயினால் அணியப்பட்ட உடை களைந்தார். கமண்டலத்தையும், மயிற்பீலியையும், ஒ‌ழித்தார். தூய வெண்ணிற ஆடையைத் தரித்தார். சமணர்கள் எவரும் அறியாவண்ணம் இரவோடு இரவாக அரங்கிருந்து தமது பணியாளுடன் புறப்பட்டுத்ச திருவதிகையை அடைந்தார். அம்மையார் தங்கியிருக்கும் மடத்துள் புகுந்தார் மருள்நீக்கியார். மடத்துள் ஐந‌்தெழுத்து மந்திரத்தை மனதிலே தியானித்தவாறு அமர்ந்திருந்த தமக்கையை நமஸ்கரித்தார் மருள்நீக்கியார். திலகவதியார் ஒருபுறம் மகிழ்ச்சியும், மறுபறம் வேதனையும் கொண்டாள். மருள்நீக்கியார் மனவேதனையுடன் திலகவதியாரிடம் தமக்கு ஏற்பட்டுள்ள துன்பத்தை பற்றிக் கூறினார்.

நம் குலம் செய்த அருந்தவத்தால் அவதாரம் செய்த தமக்கையே ! என் குடலுள் புகுந்து உடலை வருத்தும் இக்கொடி‌ய சூலை நோயினைத் தீர்த்துக் காத்திடல் வேண்டும் என்று கண்களில் நீர் மல்க வேண்டி நின்றாள் மருள்நீக்கியார் ! திலகவதியார் சகோதரனைப் பார்த்து மேலும் உளம் உருகினாள். புரமெரிந்த புண்ணியரது பொன்னடிகளை நினைத்து மலர்க்கைக் கூப்பித் தொழுது இறைஞ்சினான் திலகவதி. மருள்நீக்கியார் திருமேனியைத் தொட்டு நல்ல கொள்கையில்லாது புறச்சமயப் படுகுழியில் விழ்ந்து அறியாது அல்லூற்றாய். இனமேல் எழுந்திருப்பாயாக ! என்று மொழிந்தாள். அம்மையாரின் அமுத மொழிக்கேட்டு மருள்நீக்கியார் தாம் பற்றிக் கொண்டிருந்த சகோதரியின் கால்களை இரு கைகளாலும் கண்களில் ஒற்றிக்கொண்டு பிணியின் துன்பம் சற்று குறைந்த நிலையில் மெதுவாக எழுந்தார். திலகவதியார் கண் கலங்க சகோதரா ! வருந்தாதே ! இச்சூலை நோய் உனக்கு ஏற்பட்டதற்குக் காரணம் எம்பெருமானின் அருளேயாகும். மீண்டும் உன்னை அவரது அடியாராக ஏற்றுக்கொள்வதற்காக இம்முறையில் உன்னை ஆட்கொண்டார். பற்றற்ற சிவனடியார்களை நினைத்து வழிபட்டுச் சிவத்தொண்டு புரிவாயாக! உன்னைப் பற்றிய மற்ற நோயும் அற்றுப்ப‌‌ோகும் என்று கூறினாள். மருள்நீக்கியாருக்கு சமய மாற்றம் வேண்டித் திலகவதியார், திருவெண்ணீ்‌ற்றினை எடுத்து ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியவண்ணம் கொடுத்தாள். அம்மையார் அருளிக் கொடுத்த திருவெண்ணீற்றினைத் தாழ்ந்து பணிந்து பெற்றுக்கொண்ட மருள்நீ்க்கியார், எனக்குப் பற்றற்ற பெருவாழ்வு கிட்டிற்று. பரமனைப் பணிந்து மகிழும் திருவாழ்வு பெற்றேன் என்று கூறிக் திருவெண்ணீற்றை நெற்றியிலும் மேனி முழுவதும் தரித்துக் கொண்டார். திருவெண்ணீற்றின் மகிமையால் மருள்நீக்கியார் நோய் சற்று நீங்கப்பெற்ற நிலை கண்டார். அதுகண்டு அத்திருத்தொண்டர் மனம் குளிர்ந்தார். பெருவாழ்வு பெற்ற மருள்நீக்கியார் முன்போல் சைவராய்த் திகழ்ந்தார். அம்மையார் தம்பியாரை அழைத்துக்கொண்டு திருவலகும், திருமெழுகுத் தோண்டியும் எடுத்துக் கொண்டு கோயிலுக்கு வந்தாள். மருள்நீக்கியார், தமக்கையோடு கோயிலை வலம் வந்து, எம்பெருமான் திருமுன் வணங்கி நின்றார். சிவச்சந்நதியில் சைவப்பழமாக நின்று கொண்டிருந்தார் மருள்நீக்கியார் ! பேரொளிப் பிழம்பான எம்பெருமானின் திருவருள் அவர் மீது பொழிந்தது. தமிழ்ப் பாமாலை சாத்தும் உணர்வு அவருக்கு உதித்தது. உணர்ச்சி ஊற்றெடுத்துப் பெருகியது. மருள்நீக்கியார், தம்மைப் பற்றிக்கொண்டு படாத பாடுபடுத்திய சூலைநோயினையும், மா‌யையினையும் அறுத்திடும் பொருட்டு கூறிறாயினைவாயு விலக்கிலீர் என்று தொடங்கும் பதிகத்த‌ினைப் பாடினார்.பாடி முடித்ததும் அவரைப் பற்றிக் கொண்டிருந்த சூலை நோய் அறவே நீங்கியது. எம்பெருமானின் திருவருளை வியந்து போற்றி, திலகவதி கண்ணீர் விட்டாள். மருள்நீக்கியார் சிரமீது கரம் குவித்து நின்று மெய்யருவி பிரார்த்தித்தார்.

ஐயனே ! அடியேன் உயிரையும், அருளையும் பெற்று உய்ந்தேன் என்று மனம் உருகக் கூறினார் மருள்நீக்கியார் ! அப்‌பொழுது விண்வழியே அசரீரி கேட்டது. இனிய செந்தமிழ்ப் பாக்களால் திருப்பதிகத் தொகையை பாடியருளிய தொண்டனே ! இனி நீ நாவுக்கரசு என்று நாமத்தால் ஏழுலகமும் ஏந்தப் பெறுவாய். மருள்நீக்கியார் திருநாவுக்கரசு என்னும் திருநாமத்தைப் பெற்றார். எம்பெருமானின் திருவருளை எண்ணிப் பூரித்துப் போன திலகவதியார் தமது உடன்பிறந்தோர் சமணப் பித்து, சூலைப் பிணியும் நீங்கியது கண்டு உவகை பூண்டாள். திருநாவுக்கரசர் சைவத்திருத் தோற்றம் பூண்டார். அவரது தலையிலும், கழுத்திலும், கையிலும் உருத்திராட்ச மாலைகள் அணியெனத் திகழந்தன. திருவெண்ணீறு அவரது மேனியில் பால் போல் பிரகாசித்துது. அவரது மனம் ஐந்தெழுத்து மந்திரத்தை நினைக்க - மொழி திருப்பதிகமாக காயம் திருத்தொண்டுகள் புரியத் தொடங்கின. இங்ஙனம நாவுக்கரசர் எம்பெருமானின் சேவடிக்கு மனத்தாலும், வாக்காலும், ‌‌காயத்தாலும் சைவத் தொண்டு புரிந்து பரலானார். சைவ நெறியைப் பின்பற்றி மருள்நீக்கியார் வாழ்வதைக் கேள்வியுற்ற சமண குருமார்கள் கொதித்தெழுந்தார்கள். வெகுண்டார்கள். ஒழித்துக் கட்டுகிறோம் என்று அவர்கள் வீண் சபதம் எடுத்துக் கொண்டார்கள். கெடுமதி படைத்த அச்சமணர்‌கள், பெருங்கூட்டமாகக் கூடி, மன்னனைக் காண வி‌ரைந்தார்கள். அரண்மனை‌யை அடைந்த சமணர்கள், மன்னனை வணங்கி, அரசே, அரசே ! தருமசேனர் தம்மைச் சூலைநோய் பற்றி கொண்டதாகப் பொய் கூறி, நம்மைவிட்டு அன்றதோடல்லாமல் அவரது தமக்கையாரிடம் சென்று சைவத்தைச் சரணடைந்து விட்டார் . நம் சமண சமயத்தை புறக்கணித்துவிட்டார் என்று கூறினார். அவர்கள் மொழிந்‌ததைக் கேட்ட மன்னன், அருந்தவ முனிவர்க‌ளே ! அஞ்சாதீர்! சொல்லுங்கள்! தருமசேனருக்குத் தண்ட‌னை கொடுக்க நான் ஒருபோதும் தயங்கமாட்டேன் ! என்று ஆறுதல் பகர்ந்தான். அரசன் அமைச்சரை நோக்கி, உடனே அவைக்களத்திற்‌கு மருள்நீக்கியாரை அழைத்து வாருங்கள் என்று கட்டளையிட்டான். மன்னனின் ஆணைக்கு அடிபணிந்த அமைச்சர்கள், ‌சேனைகள் சூழ, நாவுக்கரசர் எழுந்தருளியிருக்கும் திருவதிகையை அடைந்தனர்.திருவெண்ணீற்றைப்பொலிவுடன் அமர்ந்திருந்த நாவுக்கரசரை அணுகி, தருமசேனரே! மன்னன் மகேந்திரவர்மன் தங்களை உடனடியாக அழைத்து வருமாறு எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார். ஆதலால் நீவிர் இக்க‌ணமே எங்களுடன் புறப்பட்டு வரவேண்டும் என்று அரச தோரணையில் ஆணையைப் பிறப்பித்தனர், நஞ்சை அமுதாக உண்ண நீலகண்டரின் திருவடியில் தஞ்சம் புகுந்த திருநாவுக்கரசர், சற்றும் அஞ்சாது நெஞ்சு நிமிர்ந்து, நாமார்க்கும் கு‌டியல்லோம்; நமனை‌‌யஞ்சோம் எனத் தொடங்கும் மறுமாற்றத் திருத்தாண்டகத் திருப்பதிகத்தைப் பாடினார்.

அமைச்சர்கள் நாவுக்கரசரின் திருப்பதிகத்தில் மெய் உருகினார். அவரது மலர்த்தாளினைப் போற்றி வணங்கினர். ஐயனே தயவுசெய்து எங்களுடன் எழுந்தருளல் வேண்டும் என்று பணிவன்போடு வேண்டிக் கொண்டனர். அமைச்சர்கள் இவ்வாறு வினவியதும் நாவுக்கரசர்ல இங்குவரும் வினைகளுக்கு எம்பிரான் எம்‌மோடு துணை உள்ளார் என மொழிந்தாவாறு அவர்களுடன் புறப்பட்டார். நாவுக்கரசர் பல்லவன் அரண்மனையை அடைந்தார். பல்லவன் முன்னால் சிவஜோதி வடிவான நாவுக்கரசர் தலைநிமிர்ந்து நின்றார். நாவுக்கரசரைக் கண்டதும் சமணர்கள் பொங்கி எழுந்தனர். அருள் வடிவாய் நின்றுகொண்டிருந்த நாவுக்கரசர் முன்னால் அக்கிரமமே உருவெடுத்தாற் போல் அறந்துறந்து சமணர்கள் நின்று கொண்டிருந்தனர். சமணத்தை நம்பிய பல்லவ மன்னன் அறம் மறந்து அரியாசனத்தில் அமர்ந்திருந்தான். அக்கொற்றவன் சமணர்களிடம் தருமசேனரை யாது செய்யவேண்டும் ? என்று கேட்டான். மன்னன் மொழிந்‌ததைக் கேட்டு மதியற்ற சமண மத குருமார்கள் சினத்துடன் அரசரைப் பார்த்து, அரசே! திருவெண்ணீற்றை அணியும் இத் தருமசேனரைச் சுண்ணாம்புக் காளவாயில் தள்ள வேண்டும் என்று கூறினார். அரசன் எவ்வித விசாரணையுமின்றி சமண மயக்கத்தில் அமைச்சர்களிடம் தருமசேனரை சுண்ணாம்புக் காளவாயில் தள்ளுமாறு கட்டளையிட்டான். மன்னன் ஆணைப்படி ஏவலாளர்கள் நாவுக்கரசரைக் கொழுந்து விட்டெரியும் தீயுடன் கூடிய நீற்றறையில் விடுத்து கதவை அடைந்து வெளியே காவல் புரிந்தனர். நீற்றறையில் அடைபட்ட நாவுக்கரசர் எம்‌பருமான் நாமத்தை மனத்தால் தியானித்த வண்ணமாகவே இருந்தார். இறைவனின் அருளால், வெப்பம் மிகுந்த அந்த சுண்ணாம்பு நீற்று, இளவேனிற் காலத்தில் வீசும் குளிர்த் தென்றலைப் போல் - குளிர்ச்சி பொருந்திய தடாகம் ‌போல் யாழின் மெல்லிமை போல் தண்மை மிகும் குளிர் நிலவு போல் நாவுக்கரசருக்கு இன்பத்தைக் கொடுத்தது. பிறைமுடி வேணியரை நினைத்து மகிழ்ந்து, மாசில் வீணையும் மாலை மதியும் எனத் தொடங்கும் திருப்பதிக்ம் ஒன்றைப் பாடினார். ஏழு நாட்கள் செனற பின்னர், பல்லவ மன்னனின் கட்டளைப்படி சமண குருமார்கள் அறையைத் திறந்து பார்க்க வந்தனர்.கரியமேகக் கூட்டம் திரண்டு வந்தாற் போல் நீற்றறையை வந்‌தடைந்த சமணர்கள் கதவுகளைத் திறந்ததும் அங்கு அவர்கள் கண்ட காட்சி அவர்களைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியது. திருநாவுக்கரசர் பேரின்ப வெள்ளத்தில் மூழ்கி அம்பலவாணராது பாதமலர்க் கமலங்களில் ஊறுகின்ற தேனமுதத்தை உண்டுகளித்து, எவ்வகையான ஊனமும் ஏற்படாமல் உவகை பொங்க எழுந்தருளியிருப்ப‌தைக் கண்டனர். ஆத்திரத்தோடு கொதித்தெழுந்த சமணர்கள், மன்னனிடம் விரைந்து சென்று, ""அரசே தருமசேனர், நமதுசமண நூல்களில் இறவாமல் இருப்பதற்கு கூறப்பட்டுள்ள மந்திரங்களை, ஜபித்து சாகாமல் உயிர் தப்பியுள்ளார் என்று கூறினர். அது கேட்ட பல்லவ மன்னன், அங்ஙனமாயின் இப்பொழுது தருமசேனரை யாது செய்தல் வேண்டும் ? என்று கேட்க சமணர்கள், தருமசேனரைக் கொடிய நஞ்சு ஊட்டிக் கொல்லவேண்டும் என்று கூறினார்.

பல்லவ வேந்தனும் அநத பாவிகளின் கூற்றிற்கு இணங்கி, அவ்வாறே தண்டனை கொடுப்போம் என்று கூறி, தரு‌மசேனரைக் கொல்ல ஆணையிட்டார். சமணர்கள், நஞசு கலந்த பால் சோற்றை எடுத்துக் கொண்டு நாவுக்கரசரை அணுகி, அவரை உண்ணுமாறு செய்தனர். நாவுக்கரசர், பால்சோற்றினை வாங்கிக் கொண்டு, எங்கள் நாதருடைய அடியாருக்கும் நஞ்சும் அமுதமாகும் என்று கூறியவாறு உண்டார். அமரரைக் காக்க ஆலகாலத்தை அமுதம் போல் அள்ளிப் பருகிய நீலகண்டர், நாவுக்கரசர் உண்ணும் நஞ்சு கலந்த பால் சோற்றையும் திருவமுதாக்கி அருளினார். முன்னைவிடப் புதுப்பொலிவுடன், மகிழ்ச்சி ‌பொங்கக் காணப்பட்டார் நாவுக்கரசர்! சமணர்கள் அஞ்சினர். தங்கள் சமயத்திற்கு அந்திம காலம் நெருங்கிவிட்டது என்பதை உணர்ந்தனர். மீண்டும் அக்கொடியவர்கள் பல்லவ மன்னனை அணுகி, விவரத்தை விளக்கிக் கூற, மூன்றாவது முறை அவரை, மத யானையால் இடறச் செய்து கொன்றுவிடுவது என்று உபாயத்தைச் சொல்லினர். மன்னனும் அங்ஙனமே மதங்கொண்ட யானையால் மாய்த்துவிடுவோம். உடனே மத ‌யானையை ஏவி விடுக என்று கட்டளையிட்டான். வில்லிலிருந்து புறப்படும் கொடிய அம்பு போல் மன்னனது ஆணை புறப்பட்டதும் சற்றும் தாமதியாமல் காவலர் மத யானையை அவிழ்த்து விட்டனர். சமணர்கள் நாவுக்கரசரை அழைத்து வந்து மத யானை வரும் திசைக்கு எதிரில் நிறுத்தினர். நாவுக்கரசர் சிவநாமத்தை சிந்தையிலிருத்தி சுண்ணவெண் சந்தைனச் சாந்தும் எனத் தொடங்கும் சிவப்பாடலைப் பாடினார். திருப்பாட்டின் இறுதியில், அஞ்சுவது யா‌தொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை என்று அமையுமாறு திருப்பதிகம் அமைத்தார் நாவுக்கரசர்.அப்‌பொழுது புயல் போல் முழக்கமிட்டுக் கொண்டு வந்த மத யானை நாவுக்கரசரின் அருகே வந்ததும் துதிக்கையை உயர்த்தி அவரைச் சுற்றிச் சுற்றி வலம் வந்தது. நிலத்தில் வீழ்ந்து வணங்கி அவருக்கு மரியாதை செய்தது. மத யானையின் மாறுபட்ட செயலைக் கவனித்த சமணர்கள் பாகர்களிடம் நாவுக்கரசரைக் கொல்லுமாறு யானைக்கு செய்கை காட்டுங்கள்‌ என்று பொருமினர். அவர்களும் குறிப்பால் ‌யானைக்கு அதனை உணர்த்தினர். உடனே மத யானை மதம் பொங்க துதிக்கையால் பாகர்களைத் தூக்கி எடுத்து வீசி எறிந்து கொன்றது; அத்தோடு ‌யானை அடங்கவில்லை. அந்த மத யானை சமணர்களின் மீது பாய்ந்து அவர்களையும் காலால் மிதித்துத் தந்தத்தால் குத்திக் கிழித்தது. துதிக்கையால் தூக்கி எறிந்து கொன்று குவித்தது.மந்திரகிரி திருப்பாற் கடலைக் கலக்கியது ‌போல், மத யானை அத்திரு நகரை ஒரு கலக்கு கலக்கி சமணர்களைக் கொன்று குவித்தது. மத யானையின் பிடியில் விழாமல் தப்பிப் பிழைத்த ஒருசில சமணர்கள் அஞ்சி நடுங்கி பல்லவ வேந்தனிடம் தஞ்சம் புகுந்தனர். சமணர்கள் மீது வெறுப்பு கொண்ட அரசன், ஆத்திரத்தோடு சமணர்களைப் பார்த்து இனிமேல் செய்வதற்கு என்னதான் இருக்கிறது? என்று வெறுப்போடு கேட்டதும், சமணர்கள் இம்முறை தருமசேனரைக் கல்லோடு சேர்ந்து கட்டி கடலில் போட வேண்டும் என்று கேட்டு கொண்டார்கள். அந்த நிலையிலும் சமணர்களின் செருக்கு அடங்கவில்லை. அவர்களது இத்தகைய முடிவிற்குத் தலைவணங்கிய வேந்தன், நாவுக்கரசரை கல்லோடு கட்டிக் கடலில் கொண்டு போய்த் தள்ளிவிடுங்கள் என்று ஏவலாளருக்குக் கட்டளையிட்டான்.

ஏவலாளர் நாவுக்கர‌சரைப் படகில் ஏற்றிக் கொண்டு சமணர்களுடன் கடலில் புறப்பட்டனர். நடுக்கடல் சென்றதும், அவரைக் கல்லோடு கட்டி கடலில் வீழ்த்திவிட்டுக் கரைக்குத் திரும்பினார். கடலுள் வீழ்ந்த நாவுக்கரசர், ‌எப்படி ‌வேண்டுமானாலும் ஆகட்டும்; இவ்வெளியோன் எம்பிரானை ஏத்துவேன் என்று நினைத்தார். சொற்றுணை என அடி எடுத்து நற்றுணையாவது நமச்சிவாயவே என்று பதிகம் பாடி கடலில் மூழ்கினார். ஆழ்கடலில் அருந்தமிழ் முத்தை கொடுத்தார். பைந்தமிழ் பாமாலை கோர்த்தார். புலித்தோலைப் போர்த்த அரவணிந்த அண்ணலுக்கு அழகிய ஆரமாய் அணிவித்தார். கல்லும் கனிய இன்மொழியில், நாவரசர் பாமாலை தொடுத்து, ஐந்தெழுத்தை ஓதியதும், அவரது உ‌டலைப் பிணித்திருந்த கயிறு அறுபட்டு வீழ்ந்தது. அக்கயிற்றோடு கட்டியிருந்த கல்லும், தெப்பமாகக் கடல் மீது மிதந்தது. நாவுக்கரசர் அதன் மீது எழுந்தருளினார். கல்லும் கனிய இன்மொழியில், நாவரசர் பாமாலை தொடுத்து, ஐந்தெழுத்தை ஓதியதும், அவரது உடலைப் பிணித்திருந்த கயிறு அறுபட்டு வீழ்ந்தது. அக்கயிற்றோடு கட்டியிருந்த கல்லும், தெப்பமாகக் கடல் மீது மிதந்தது. நாவுக்கரசர் அதன் மீது எழுந்தருளினார். நாவுக்கரசர் வருணனின் உதவியால் திருப்பாதிரிப் புலியூருக்கு அருகிலே கரை சேர்த்தார். அத்தலத்தின்கண் வாழும் அன்பர்களும், அடியார்களும் விரைந்தோடி வந்து நாவுக்கரசரை அன்பு கொண்டு அழைத்து அக மகிழந்தனர். சிவநாமத்தை விண்ணெட்ட ஒலித்த வண்ணம் நாவுக்கரசரை திருப்பாதிரிப்புலியூர் ஐயனின் திருக்கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். அங்கே குடிகொண்டிருக்கும் முக்கண்ணரின் மென்‌மலர்த்தாளினை ஏத்தி வழிபட்டு, ஈன்றாளுமாயெனக்கெழுந்தையுமாய் என்று தொடங்கும் நமச்சிவாயப் பதிகத்தை இறைவனின் செவிகுளிர ஓதினார் நாவுக்கரசர். உருத்திராக்ஷ மாலைகளும, திருவெண்ணீரும் மேனியில் துலங்க, கையிலே உழவாரமும் தாங்கியவாறு அப்பர் பெருமான் நின்ற ‌கோலம்கண்டு அன்பர்கள் பேரானந்தம் பூண்டனர். 

--------------------------------------------------------------------------------
42:திருநாளைப் போவார் நாயனார்
No photo description available.
ஆதனூர் என்னும் சிவத்தலம் சோழவள நாட்டிலே ஒரு பிரிவான மேற்காநாட்டில் கொள்ளிடக் கரையை அடுத்தாற் போல் அமைந்துள்ள ஒரு சிற்றூர். இவ்வூர் நீர்வளமும், நில வளமும் அமையப் பெற்றது. ஆதனூருக்கு அருகாமையில் ஊரை ஒட்டினாற்போல் வயல்களால் சூழப்பட்ட சிறு குடிசைகள் நிறைந்த புலைப்பாடி ஒன்று இருந்தது. அங்கு குடும்பம் குடும்பமாகக் குடிசைகள் அமைத்துப் புலை‌‌யர் குல மக்கள் உழுதலைத் தொழிலாகக் கொண்டு நிம்மதியாக வாழ்ந்து வந்தனர். அவர்களின் ஒருவர்தான் நந்தனார் என்பவர். மண் மாதாவின் மடியிலே வீழ்ந்து உணர்வு பிறந்த நாள் முதல் அரனாரிடத்து அளவில்லாத அன்பும், பக்தியும் பூண்டிருந்தார் நந்தனார். எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் கோயிலுக்குத் தம்மால் இயன்ற அளவு அருந்தொண்டு ஆற்றி வந்தார். தமது குலத்தினருக்குரிய தொழில்களில் மேம்பட்டு விளங்கிய நந்தனார், தமக்குத் கிடைக்கும் தோல், நரம்பு முதலியவற்றை விற்று மற்றவர்களைப் போல் ஊதியத்தைப் பெருக்காமல், ‌கோயில்களுக்கு பயன்படும் பேரிகை முதலான கருவிகளுக்கு வேண்டிய போர்வைத் தோல் முதலிய பொருள்களை இலவசமாக வழங்கி வந்தார். ‌கோயில்களில் உள்ள வீணைக்கும், யாழுக்கும் நரம்புகள் அளிப்பார். ஆராதனைப் பொருளான கோரோசøன போன்ற நறுமணப் பொருள்களை வழங்குவார். இங்ஙனம் நந்தனார் பல வழிகளில் இறைவனுக்கு இடையறாது அருந்தொண்டு புரிந்து வந்தார். அக்காலத்தில் தாழ்ந்த குலத்தோர் எனக் கருதப்படுவோர் ஆலயத்துள் சென்று இறைவ‌ைனை வழிபடத் தகுதியற்றவர்களாகக் கருதப்பட்டு வந்தனர். அதனால் நந்தனார் ஆலயத்திற்குள் போகாது வெளி‌யே இருந்தவாறே இறைவனை மனதிலே எண்ணி ஆனந்தக் கூத்தாடுவார்; பாடுவார்; பெருமகிழ்ச்சி கொள்வார்.

இறைவனை ஆடிப்பாடி வாழ்த்தும் நந்தனார் ஒருமுறை திருப்புன்கூர் திருத்தலத்திலுள்ள திருக்கோயிலில் அமர்ந்திருகு்கும் சிவலோகநாதரைத் தரிசிக்க எண்ணினார். அக்கோயிலுக்குத் தம்மால் இயன்ற அளவு திருப்பணிகள் செய்து மகிழ வேண்டும் என்று உளம் விரும்பினார். ஒரு நாள் புறப்பட்டு அத்திருக் கோயிலை அடைந்தார். சிவலோக நாதரைக் கோயிலின் வெளியி‌லேயே நின்று வழிபட்டுப் போக விரும்பினார் நந்தனார். அவருடைய விருப்பம் நிறைவேறாது போயிற்று ! சிவலோகநாதரை மறைத்துக் கொண்டு நந்தி இருந்தது. அதைப் பார்த்தும் நந்தனாருக்கு வேதனை தாங்க முடியவில்லை. தேடி வந்த பெருமானின் திவ்ய தரிசனம் தம் கண்களுக்குக் கிடைக்காமல் போய்விடுமோ என்று கண்கலங்கினார். சிவ சிவ என்று இறைவன் திருநாமத்தையே ஓதிக் கொண்டிருந்தார். கோயிலின் வெளியே மனம் நைந்து உருகும் பக்தனைக் காக்கத் திருவுள்ளங் கொண்ட சிவலோகநாதர் தம்மை மறைத்துக் கொண்டிருந்த நந்தியைச் சிறிது விலக்கினார். தீபாராதனை ஒளியில் கர்ப்பக் கிரகத்தில் ஆனந்தச் சுடராய் அருள் வடிவாய் காட்சி அளிக்கும் சிவலோக நாதரின் திருத்தோற்றத்தைப் பார்த்து உள்ளமும், உடலும் பொங்கிப் பூரிக்க நிலத்தில் வீழ்ந்து பன்முறை வணங்கினார் நந்தனார். சிவலோக நாதரைப் பாடிப் பாடி ஆனந்தக் கூத்தாடினார். பக்தி வெள்ளத்தில் மூழ்கி மிதந்து தத்தளித்தார். உள்ளத்திலே பேரின்பம் பூண்டார். அவர் உடல் புளகம் போர்த்தது ! கோயிலை பன்முறை வலம் வந்தார். நந்தனார் மன நிறைவோடு ஊருக்குப் புறப்பட்டார்.

திரும்பும் போது ஊருரின் நடுவ‌‌ே பெரும் பள்ளம் ஒன்று இருக்கக் கண்டார். ‌பள்ளத்தை பார்த்ததும் நந்தனார் உள்ளத்தில் ஒரு நல்ல எண்ணம் பிறந்தது. ஊற்றுக்கேற்ற பள்ளமான அவ்விடத்தைச் சீராக வெட்டிக் குளமாக்கத் தீர்மானித்தார். இரவென்றும் பகலென்றும் பாராமல் சிவநாமத்தைச் சிந்தையிலே கொண்டு பள்ளத்தை சுவாமி புஷ்கரணியாக்கினார். எண்ணியதை எண்ணியபடிச் செய்து முடித்தார். ஆதனூருக்கு திரும்பினார். ஆதனூரை அடைந்ததும் நந்தனார் சிவலோகநாதர் நினைவிலேயே இருந்தார். மீண்டும் திருப்புன்கூர்ப் பெருமானை வழிபட வேண்டும் என்ற ஆசை பிறந்தது. உடனே ஆதனூரை விட்டுப் புறப்பட்டுத் திருப்புன்கூர்க்குச் சென்று இறைவனை வழிபட்டார். இம்மையில் தாம் எடுத்த பிறவியின் முழுப்பயனையும் பெற்றுவிட்டதாக உள்ளம் பூரித்தார். அரனார் பக்தியிலே மூழ்கி மிதந்து வந்தார் நந்தனார். நாட்கள் நகர்ந்தன. நந்தனாரின் தொண்டுகளும் தங்கு ‌தடை ஏதுமின்றி தவறாது நடந்தவண்ணமே இருந்தன. பற்பல தலங்களுக்குச் சென்று அடிக்கடி இறைவனை வழிபட்டு வந்த நந்தனாரின் பக்தி உள்ளத்தில் ஒரு ஆசை பிறந்தது. சிவத்தலங்களுக்குள் ஒப்பற்ற மணியாய் விளங்கும் தில்லைக்குச் சென்று அம்பலக் கூத்தனை வழிபட்டு வரவேண்டும் எனற தணியாத ஆசை எழுந்தது ! இரவு துயிலப் போகும்போது, பொழுது புலர்ந்ததும், எப்படியும் தில்லைக்குப் புறப்பட வேண்டும் என்று எண்ணுவார். விடிந்ததும் அவரது எண்ணம் அவரது இதயத்தினின்றும் கதிரவனைக் கண்ட காலைப்பனி கலைவது போல் மறைந்துவிடும். முடவன் கொம்புத் தேனை விரும்புவதா? உயர உ‌யரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா? என்பது போல் தனக்கு எவ்வளவுதான் ஆவல் உயர்ந்தபோதும் மற்றவர்களைப்போல் தில்லைக்குச் சென்று இறைவனை தரிசிக்க முடியுமா என்ன ? முடியவே முடியாது என்ற உறுதியான தீர்மானத்திற்கே வந்துவிட்டார் நந்தனார். இவ்வாறு அவரால் சில நாட்கள்தான் இருக்க முடிந்தது !

மீண்டும் தில்லைக்குச் சென்று அங்கு எழுந்தருளியிருக்கும் எம்பெருமா‌னைத் தரிசிக்காவிடில் இம்மையில் உயிர் வாழ்ந்து என்ன பயன்? சிதம்பர தரிசனம் கிடைக்காது போகும் இந்த இழிவை அகற்றுவது எப்படி ? என்றெல்லாம் எண்ணிப் பலவாறு புலம்புவார். இங்ஙனமாக ஒவ்வொரு நாளும் நந்தனாரின் ஆசை நிறைவேறாமல் தடைபட்டுக் கொண்டேதான் போனது. ஒவ்வொரு நாளும் நாளைக்குப் போவேன் என்று எண்ணி நாளைக் கடத்திக்கொண்டே வந்த நந்தனார் திருநாளைப் போவார் என்றே திருநாமத்தைப் பெற்றார். எப்படியோ ஒருநாள் அவரது இதயத்தில் எழுந்த இந்த ஆசை பூவாகி, காயாகி, கனிந்து முதிர்ந்தது. நாளைப் போவோம் என்று நாள் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்த நந்தனார், ஒருநாள் துணிவு கொண்ட நெஞ்சத்தோடு தில்லைக்குப் புறப்பட்டார். நந்தனார் தில்லையின் எல்லையை வந்‌தடைந்தார். தில்லையிலே அந்தணர் நடத்தும் வேள்விப் புகை விண்ணை முட்டி மேகத்தோடு கலந்திருந்தது. மூவாயிரம் வேள்விச் சாலைகளிலிருந்து எழுந்த இறைவனின் திருநாம ஒலிகள் தில்லை எங்கும் ஒலித்துக்‌ கொண்டிருந்தன. முரசம் முழங்கிய வண்ணம் இருந்தது. கயிலையே தில்லைக்கு வந்து விட்டாற் போன்ற கோலாகலக் காட்சி ! இவற்றை எல்லாம் பார்த்த நந்தனாருக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. அப்படியே சிலைபோல் எல்லையிலேயே நின்றுவிட்டார் ! தில்லையின் எல்லையில் நின்று கொண்டிருந்தவர் தமக்கு நகருள் சென்று கோயிலைக் காணும் தகுதி இல்லை என்பதை உணர்ந்து உளம் வாடினார். அடங்காத ஆறாக் காதல் வளர்ந்தோங்கிற்று; உள்ளம் உருகிற்று; சென்னி மீது கரம் தூக்கி தொழுது நின்றார். தி‌ல்லையைக் கண்ட களிப்பில் அவர் உடல் இன்ப நாதம் எழுப்பும் ‌யாழ்போல் குழைந்தது. உள்ளக்களிப்பு கூத்தாட நகரைப் பன்முறை வலம் வந்தார். எல்லையிலேயே நின்றபடி ஆனந்தக் கூத்தாடினார். பாடினார். அம்பலத்தரசரின் நாமத்தைப் புகழ்பாடிப் பெருமையுற்றார்.

இப்டியே ஆடியும், பாடியும் நந்தனார் தம்மையறியõமலேயே தில்லையின் எல்லையைத் தாண்டி அந்நகரத்தைச் சுற்றியமைந்திருந்த மதிற்புறத்தை அடைந்தார். மதி‌லை வணங்கினார். இரவும் பகலும் திருமதி‌‌லையே வலம் வந்து கொண்டிருந்தார். அவரால் ஆலயத்தை அடைய முடியவில்லை. ஆலயத்தின் கதவுகள் பக்தர்களுக்காக இரவும் பகலும் திறந்திருந்தபோதிலும் சமூகத்தின் தீண்டாமைத் தொழுநோய் அவரைத் தடுத்து நிறுத்தியது. இந்த நிலையை நினைத்து நெஞ்சு புலம்பினார். இறைவனை உள்ளே ‌சென்று வழிபடும் பேறு எனக்கு இல்லையே ! களிநடனவம் புரியும் திருநடராஜரின் காலைத் தூக்கி நின்றாடும் ஆனந்தக் காட்சியைக் காணக் கொடுத்து வைக்காத கண்ணைப் பெற்ற பெரும் பாவியானேனே ! கண்ணிருந்தும் குருடன் ஆனேனே ? என்றெல்லாம் பலவாறு அரற்றினார். அரனார் நாமம் போற்றித் துதித்தார் ; துக்கித்தார். அம்பலத்தரசனை மனத்தில் நினைத்தபடியே தன்னை மறந்து அப்படியே நிலத்தில் சாய்ந்தார். இப்படியாக நாட்கள் பல உருண்டோடின. அவரது ஆசை மட்டும் ஈடேறவே இல்லை. ஒருநாள், அம்பலத்தரசன் அவரது கனவில் எழுந்தருளி, நந்தா ! வருந்தாதே ! எமது தரிசனம் உனக்குக் கிட்ட வழி செய்கிறேன். இப்பிறவி நீங்கிட அனலிடை மூழ்கி, முப்புரி நூலுடன் என்முன் அணைவாய் என்று திருவாய் மலர்ந்தருளி மறைந்தார். இறைவன் நந்தனாருக்கு அருள்செய்து பின்னர் தில்லைவாழ் அந்தணர் தம் கனவிலே தோன்றி என்னை வழிபட்டு மகிழும் நந்தன் திருக்குலத்திலே தோன்றியவன்தான். திருமதில் புறத்தே அவன் படுத்திருக்கிறான். நீவிர் அவனை அழைத்து வந்து தீயிடை மூழ்கச் செய்து என் சந்நிதிக்கு அழைத்து வாருங்கள் என்று ஆணையிட்டார். மறுநாள் காலைப் பொழுது, தில்லைவாழ் அந்தணர்கள் அகமகிழ்ச்சியோடு எழுந்து பரமன் பணித்தபடி மதிலின் புறத்தே வந்தனர்.

எம்பெருமானை நினைத்து உருகும் நந்தனாரை அணுகி, அம்பலத்தரசன் ஆணையை நிறைவேற்ற நாங்கள் வந்துள்ளோம் பெருமான் பணித்ததற்கு ஏற்ப நீங்கள் மூழ்கி எழுவதற்காக தீ மூட்டித்தருகிறோம். நீங்கள் நெருப்பிடை மூழ்கி எழுக என்று வேண்டிக் கொண்டார். தில்லை அந்தணர்கள் மொழிந்‌ததைக் ‌கேட்டு, உய்ந்தேன் என்று கூறி நந்தனார் அவர்களைத் தொழுதார். அந்தணர்கள் மதிற்புறத்த‌ே நெருப்பை மூட்டி நந்தனார் மூழ்கி எழுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். நந்தனார் இறைவன் மலர்த்தாளினை மனத்திலே எண்ணியவராய்த் தீயை வலம் வந்தார். செந்தீ வண்ணர் தியானத்திலேயே தீயிடை மூழ்கினார் நெருப்பிலை மூழ்கி எழுந்த நந்தனார் பால் போன்ற மேனியும், திருவெண்ணீற்று ஒளியும், உருத்திராட்ச மாலையும், முப்புரி நூலும் விளங்கத் தூய முனிவரைப் ‌போல் சடை முடியுடன், கோடி சூர்யப்பிரகாசத்துடன் வெளியே வந்தார். நந்தனார் அனலிடை மூழ்கி எழுந்த காட்சி செந்தாமரை மலர் மீது தோன்றிய பிரம்ம தேவரைப் போல் இருந்ததாம். நந்தனாரின் அருள் வடிவத்தைக் கண்டு, தில்லைவாழ் அந்தணர்கள் அகமகிழ்ந்தனர். அவரை வாழ்த்தி வணங்கினார். வானவர் மலர் மாரி பொழிந்தனர். சிவகணங்கள் வேதம் முழங்கினர். நான் மறைகள் ஒலித்தன. அந்தணர் வழிகாட்ட நாந்தனார் முன் சென்றார். கரங்குவித்து ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதிக்கொண்டே ஆடுகின்ற கூத்தபிரானின் திருமுன் சென்றார். குவித்த கரங்களோடு திருமுன் சென்றவர் திரும்பவே இல்லை ! அம்பலத்தரசன் திருவடி நீழலிலேயே ஐக்கியமாகி, உமையொரு பாகரோடு கலந்தார் நந்தனார் ! எம்பெருமானின் மலரடிகளில் உறையும் பேரின்ப வாழ்வைப் பெற்றார் நந்தனார்.

வையகம் முற்றும் மாமழை மறந்து
வயலில் நீர்இலை மாநிலம் தருவோம்
உய்யக் கொள்கமற் றெங்களை என்ன
ஒளிகொள் வெண்முகி லாய்ப்பரந் தெங்கும்
பெய்யும் மாமழைப் பெருவெள்ளம் தவிர்த்துப்
பெயர்த்தும் பன்னிரு வேலிகொண் டருளும்
செய்கை கண்டுநின் திருவடி அடைந்தேன்
செழும்பொ ழிற்றிருப் புன்கூருளானே.

திருச்சிற்றம்பலம்

------------------------------------------------------------------------------------------------------------
43:திருநீலகண்ட நாயனார்
No photo description available.
இறைவன் களிநடனம் புரியும், தில்லைப்பதியிலே குயவர் குடியிலே - பிறந்தவர்தான் திருநீலகண்டர் என்பவர்.இவர் பொன்னம்பலத்து ஆடுகின்ற அம்பலக் கூத்தரின் திருவடிகளிலே மிகுந்த பக்தி கொண்டவர். அதுபோலவே, சிவன் அடியார்களிடத்து எல்லையில்லா அன்பும், பக்தியும் உடையவர். பொய் வாழ்க்கையை ஒழித்து, மெய் வாழ்க்கை வாழ்பவர். அறவழியில் வழுவாது நிற்பவர். எம்பெருமானை திருநீலகண்டம் என்று எந்நேரமும் இடையறாது நெஞ்சம் உருகப் போற்றி வந்த காரணத்தால் இச்சிவனடியாரை திருநீலகண்டர் என்ற காரணப் பெயரிட்டு யாவரும் அழைத்து வரலாயினர். இப்பெரியார், தம் மரபின் ஒழுக்கப்படி ஓடுகளைச் செய்து அடியார்க்கு வழங்கும் சிறந்த தொண்டினை மேற்கொண்டிருந்தார். திருநீலகண்டரின் மனைவியும் கணவனுக்கு ஏற்ற கற்புடைச் செல்வியாய் வாழ்ந்து வந்தாள். இவ்வாறு அவர்கள் வாழ்ந்துவரும் நாளில், ஊழ்வினைப் பயனால், குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டது. அவரது பக்தி உள்ளம் ஒரே ஒருமுறை தவறான பாதைக்குச் சென்றது. பொன்னம்பலவாணரின் பக்தனாக இருந்த நீலகண்டர் சிற்றின்பத்தில் மிகடும் விருப்பம் கொண்டவரானார். பரத்தையின்பால் பற்று கொள்ளவும் தவறினாரில்லை. இதை அறிந்த அவரது மனைவி மனம் வருந்தினாள். அவள் கணவரிடம் கோபம் கொண்டாள். நீலகண்டர் ஏதும் புரியாது திகைத்தார். கூடல் இன்பம் பெருகவே ஊடல் கொள்கிறாள் மனைவி என்றெண்ணினார் நீலகண்டர். ஒருநாள் இரவு நீலகண்டர், மனைவியின் ஊடலை நீக்கி கூடச் சென்றார். மனைவி பொறுமை இழுந்தாள்.

ஐயனே! இனி எம்மை தீண்டுவீராயின் திருநீலகண்டம் என்று கூறித் திருநீலகண்டத்தின் மீதே ஆணையிட்டு, தம்மை தீண்டக் கூடாது என்று கூறிவிட்டாள். நீலகண்டத்தையே உயிராகவும், உணர்வாகவும் கொண்டிருந்த அடியார் என்றுமில்லாமல் மனைவி, இவ்வாறு ஆணையிட்டுக் கூறியதைக் கேட்டு உளம்பதறி, நிலை தடுமாறித் திடுக்கிட்டுப் போனார். தலைவியின் சொல்லிலுள்ள பொருளைச் சற்றே எண்ணிப் பார்க்கலானர். எம்மை என்றதனால் மற்றை மாதர் தமையும் என்றன் மனதிலும் தீண்டேன் என்று சிவனார் மீது ஆணையிட்டார் நீலகண்டர். அன்று முதல் தீருநீலகண்டர் தனது மனைவியைப் பிற மகளிரைப் பார்ப்பது போலவே பார்க்கலானர். முற்றும் துறந்த முனிவரைப் போல ஐம்புலனையும் அடக்கி வாழலானார். நீலகண்டர் வாழ்ந்து வந்த வீடு மிகச் சிறிய வீடுதான். அந்த வீட்டிற்குள் இருவரும் கட்டுப்பாடோடு வாழ்ந்து வந்தனர். இப்படியாக ஆண்டுகள் பல உருண்டன. நீலகண்டரும், அவரது மனைவியாரும் முதுமைப் பருவத்தை எய்தினர். சிவபெருமான், நீலகண்டரின் பெருமையையும் திறத்தையும் உலகிற்கு உணர்த்தத் திருவுள்ளங் கொண்டார். அதற்காக தமது கோலத்தை மாற்றிக் கொண்டார். பக்தனிடம் திருவிளையாடலைத் தொடங்கினார். சத்தியம், ஞானம், ஆனந்தம் ஆகியவற்றின் தூயவடிவான வேணியர்பிரான் ஓர் சாது போல் வேடமணிந்தார். பிரம்மன், திருமால், இந்திரன் போன்ற தேவாதி தேவர்கள், தனக்குக் குற்றவேல் புரியும் அடிமைகளாகக் கொண்ட சிவபெருமான், திருவோடு தூக்கி தெருவோடு நடந்துவந்து நீலகண்டரின் சிறுவீட்டை வந்து அடைந்தார்.

நீலகண்டரும் அவரது மனைவியும் பெருமானை வரவேற்று உபசரித்து முறைப்படி வழிபட்டனர். நீலகண்டர் பெருமானிடம், சுவாமி ! இவ்வடியேன்யாது பணி செய்தல் வேண்டும் ? என்று பயபக்தியுடன் வினாவினார். எம்பெருமான் தன் கையிலிருந்த திருவோட்டைக் காண்பித்தவாறு, நீலகண்டா ! இத் திருஓட்டின் அப்படி இப்படி என்று சொல்ல முடியாது. விலை மதிப்பிட முடியாதது. கற்பகத் தரு போன்றது, பொன்னும், மணியும், தங்கமும், வைரமும் கூட இதற்கு ஈடு இணையாகாது. இத்தகைய அபார சக்தி வாய்ந்த இத் திருவோடடை உன்னிடம் ஒப்படைத்து விட்டுப் போகிறேன். திரும்பி வந்து கேட்கும்போது தருவாயாக என்று கூறினார். திருவோட்டினை நீலகண்டரிடம் கொடுத்தார். நீலகண்டர் பணிவோடு திருவோடுதனைப் பெற்று சுவாமி ! உங்கள் சித்தம் என் பாக்கியம் என்று கூறினார். திருஓட்டை பாதுகாப்பான இடத்தில் மறைத்து வைத்தார். சிவயோகியரும் தில்லை மன்றை அடைந்து சில காலம் தங்கி பின்னர் ஓர் நாள் நாயனாரைக் காண முன்போல் வந்தார். திருநீலகண்டர் அடியாரை வரவேற்று, பாத கமலங்களைத் தூய நீரால் கழுவி, நறுமலர் தூவி ஆசனத்தில் அமரச் செய்தார். சிவனடியார் நீலகண்டரிடம் திருவோட்டைத் தருமாறு கேட்டார். திருநீலகண்டர் விரைந்து சென்று திருவோட்டைப் பாதுகாப்பாக வைத்திருந்த இடத்தில் போய் பார்த்தபோது அங்கு அதனைக் காணாது கலக்கமுற்றார். திருநீலகண்டர் மனைவியிடம் ஓட்டைச் காணவில்லையே என்றார். ஓட்டை அந்த இடத்தில் பாதுகாப்பாக வைத்தது இருவருக்குமே நல்ல ஞாபகத்தில் இருந்தது. அப்படி இருக்க எப்படி காணாமற் போகும். இருவரும் நிலை தடுமாறினர்.

கவலை தோய்ந்த முகத்துடன் சிவனடியார் பக்கம் வந்து ஐயனே ! என்று அழைத்து தயங்கி நின்றார் நீலகண்டர். சிவதொண்டரின் தயக்கத்தையும், பயத்தையும் முக மாற்றத்தையும் கண்ட சிவனடியார் சற்று கடுமையாகவே நீலகண்டரிடம், ஏனப்பா ! இத்தனை தாமதம் ? கொடுத்ததைக் கேட்டால் எடுத்து கொடுக்க மனமின்றி ஒளித்து வைத்துக் கொண்டாயோ ? ஊம் சரி ! சரி ! நேரமாகிறது. நான் அவசரமாகப் போகவேண்டும். தாமதிக்காமல் கொண்டு வந்து கொடுத்துவிடு என் திருவோட்டை என்றார். அம்மொழி கேட்டுத் திடுக்கிட்டுப் போன நாயனார், உண்மையிலேயே அத்திருவோடு காணாமற் போய்விட்டது பெரியீர்! என்று பணிவோடு பகர்ந்தார். திருவோடு எப்படி அங்கு இருக்கக் கூடும் ? உயிரைக் கொடுத்தவனே உயிரை எடுத்துக்கொள்வது போல திருவோட்டைக் கொடுத்தத் திருசடையானே அதை மறைத்த உண்மையை நீலகண்டர் எவ்வாறு அறிய முடியும் ! திருசடையையும், நீலகண்டத்தையும், முக்கண்களையும் மறைத்த மறையவர் திருவோட்டையும் மறைத்து விட்டார். நீலகண்டர் உள்ளம் பதறினார். அவருக்கும் அவர் தம் மனைவிக்கும் உலகமே இருண்டது போலக் காட்சியளித்தது. அவரது மனைவியோ கண்களில் நீர்மல்க நின்றாள். அடியாரோ பரமசிவனை மனதில் தியானித்தார். பக்தனைச் சோதிக்கவந்த பரமசிவன் நெற்றி கண்ணைத் திறக்காதது ஒன்றுதான் குறை! அந்த அளவிற்கு முகத்தில் கோபம் கோரத்தாண்டவம் ஆடியது. அரனாரது கோபத்தைக் கண்டு அஞ்சிய நாயனார் தவ சிரேஷ்டரே ! சினங்கொள்ளாதீர் அறியாது நடந்த பிழையைப் பொறுத்தருளல் வேண்டும். திருவோடு மறைந்த மாயம் இன்னதென்பதை சிறிதும் நான் அறியேன். மன்னித்து விடுங்கள்! மண் ஓட்டிற்குப் பதில் பொன் ஓடு வேண்டுமாயின் தருகிறேன் என்று பணிவோடு இறைஞ்சினார்.

சிவனடியாருக்கு மேலும் கோபம் வந்தது ! என்ன சொன்னாய் ? வேறு ஒரு ஓடு தருகிறாயா ? நன்று நீலகண்டா ! நன்று ! ஓட்டின் அருமைகளைச் சொன்னேன்; பெருமமைகளைப் பேசியுள்ளேன்; அதனால்தான் வேண்டுமென்றே ஓட்டைத் திருடியிருக்கிறாய் என்ற சீற்றத்துடன் செப்பினார் செஞ்சடை வண்ணன். அபச்சாரம் ! ஐயனே ! அபச்சாரம் ! உண்மையாகவே கூறுகிறேன். திருவோட்டை நான் திருடவே இல்லை. அப்படித் திருடவில்லை என்பது உண்மையானால் திருவேட்டை நான் திருடவில்லை என்று உன் மகன் கரம் பற்றிப் பொற்றாமரைக் குளத்தில் மூழ்கிச் சத்தியம் செய்து தாரும். எனக்கு மகன் இல்லையே சுவாமி ! மகன் இல்லாவிட்டால் என்ன ? மனைவியின் கையைப் பற்றி நீரிடை மூழ்கி உண்மையை நிலை நாட்டினால் அதுவே போதுமானது. சிவயோகியாரின் ஆணை, நீலகண்டரின் மனத்தை மேலும் புண்படுத்தியது. அவர் தர்ம சங்கடமான நிலைக்கு ஆளானார். தம் மனைவிக்கும் தமக்கும் உள்ள பிணக்கை வெளியிட இயலாத நிலையில், சுவாமி மன்னிக்க வேண்டும். நானும் என் மனைவியும் ஒரு சபதம் செய்து கொண்டிருக்கிறோம். அதனால், என் மனைவியின் கரம் பற்றி சத்தியம் செய்வதற்கில்லை என்று ஒரே முடிவாகக் கூறிவிட்டார் நீலகண்டர். இனியும் உன்னோடு பேசிப் பயனில்லை வா ! வழக்கு மன்றம் செல்வோம் முடிவாகச் சொன்னார் முக்கண்ணப் பெருமான். திருநீலகண்டர் அதற்குச் சம்மதித்தார். எம்பெருமான் முன்செல்ல, நீலகண்டரும் அவரைப் பின் தொடர்ந்து சென்றார். சிவயோகியாரும் திருநீலகண்டரும் தில்லை வாழ் அந்தணர்களின் அரிய அவையை வந்தடைந்தனர் ! தில்லைவாழ் அந்தணர் முன் வழக்கை எடுத்துரைத்தார் தில்லை அம்பலத்தரசர். நீலகண்டரோ, ஓட்டைத் திருடவில்லை என்று ஒரே முடிவாக மொழிந்தார். அவையோர், அங்ஙனமாயில் சிவயோகியார் விருப்பப்படி நீரில் மூழ்கி சத்தியம் செய்வதுதானே என்றனர். நீலகண்டர் மனைவியின் கரம் பற்றி, நீரில் மூழ்க மட்டும் சம்மதிக்கவே இல்லை. ஆனால் அவையினரோ, நீரில் மூழ்கிச் சத்தியம் செய்வதுதான் முறை என்ற முடிவான தங்கள் தீர்ப்பைக் கூறினர். செய்வதறியாது சிதம் கலங்கிப் போன சிவனருட்செல்வர், மனைவியைத் தான் உடலால் தீண்டுவதில்லை என்ற விவகாரத்தை கூறாமல் பொருந்திடு வகையில் மூழ்கித் தருவேன் என்று கூறினார். அவையோரும் அதற்கு சம்மதித்தனர்.

அடியார் இல்லத்திற்கு சென்று, தம் மனைவியாரை அழைத்துக் கொண்டு வந்தார். திருப்புலீச்சுரத்துக்கு அருகிலுள்ள பொற்றாமரைக் குளத்தில் மூழ்கி எழ விரைந்தார். அனைவரும் திருக்குளம் வந்தனர். நேர்மையின் நிறைவான நாயனார், மூங்கில் கழி ஒன்றைக் கொண்டு வந்து அக்கழியின் ஒரு பக்கத்தைத் தாமும், மறுபக்கத்தைத் தம் மனைவியையும் பற்றிக் கொள்ளச் செய்தார். அதுகண்ட சிவயோகியார், இல்லாளின் கரம் பற்றியே நீரில் மூழ்கிச் சத்தியம் செய்தல் வேண்டும் என்று கடுமையாகக் கூறினார். நாயனார் இறைவனைத் தியானித்தார். வேறு வழியின்றி நடந்த எல்லா நிகழ்ச்சிகளையும் அவை அறிய எடுத்துக் கூறி கழியைப் பிடித்துக்கொண்டார். மனைவி கழியினை மறுபுறம் பற்றிக் கொண்டாள். அவையோரின் சம்மதத்தைக்கூட எதிர்பார்க்கவில்ல இருவரும். பொற்றாமரைக் குளத்தில் மூழ்கினார்கள். திருக்குளத்தில் மூழ்கி எழுந்த நீலகண்டரும், அவரது மனைவியாரும் இறைவன் அருளால் முதுமை நீங்கி, இளமை எழில் பெற்று எழுந்தனர். இதுவரை அங்கிருந்து ஒற்றைக்காலில் வழக்காடிய சிவனடியார் திடீரென்று மறைந்து விட்டார். விண்ணவர் மலர்மாரி பொழிந்தனர். அனைவரும் வியப்பில் மூழ்கினர். ஆலயத்து மணிகள் ஒலித்தன ! சங்கு முழங்கியது ! எங்கும் இசை வெள்ளம் பெருகியது! வானத்திலே பேரொளிப் பிரகாசம் பிறந்தது. ஒளி நடுவே மறைமுதல்வோன் உமா மஹேஸ்வரி சமேதராக, ரிஷபத்தின் மேல் காட்சி அளித்தார். எங்கும், ஹர ஹர சங்கர! ஜய ஜய சங்கர! என்ற பக்தர்களின் கோஷம் விண்ணை முட்டியது. திருநீலகண்டரும் அவரது மனைவியாரும் அவையோரும் மற்றோரும் நிலத்தில் வீழ்ந்து வணங்கினர். ஐம்புலன்களையும் வென்ற அடியவர்களே என்றும் குன்றா இளமையுடன் நலமுடன் இருப்பீர்களாக ! என்று நாயனாரையும் அவர் தம் இல்லத்தரசியாரையும் அருளினார் எம்பெருமான். திருநீலகண்ட நாயனாரும் அவரது மனைவியாரும் இறைவனின் திருவருளினால் இளமை மாறாமல், இன்பமுடன் அவணியில் நெடுநாள் வாழ்ந்து அரனாரையும் அவர்தம் அடியார்களையும் போற்றி வழிபட்டு நீடுபுகழ் பெற்றனர்.

திருச்சிற்றம்பலம்

-----------------------------------------------------------------------------------------------------------
44:திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்
No photo description available.
சோழவள நாட்டிலே அமைந்துள்ள எருக்கத்தம் புலியூர் என்னும் நகரில் ஓர் பெரிய சிவன் கோவில் உண்டு. அக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் சிவனுக்கு, நீலகண்டேசுவரர் என்றும், சக்திக்கு நீலமார்க் கண்ணம்மை என்றும் பெயர். தலவிருட்சம் வெள்ளெருக்கு. இத்தகைய தெய்வ வளமிக்க நகரில், பாணர் மரபில் பிறந்தவர் நீலகண்ட யாழ்ப்பாணர். இவரது மனைவி மதங்க சூளாமணி. இசையே உருவெடுத்த பாணரும், அவரது வாழ்க்கைத் துணைவியாரும், நீலகண்டேசுவரர் புகழை யாழில் இனிமையுடன் உள்ளம் உருக இசைத்து எல்லையில்லா இன்பம் எய்தினர். இவர்கள் சிவத்தலங்கள் தோறும் சென்று யாழ் இசைத்து எம்பெருமான் அருள் பெற்று பெருமையுற்றனர். சோழவள நாட்டிலுள்ள எல்லா சிவன் கோவில்களையும் கண்டுகளித்துப் பேரின்பம் பூண்ட பாணரும் அவரது மனைவியாரும் மதுரையம்பதிக்குச் சென்றனர். பாணர் தம் மனைவியோடு திரு ஆலவாய் அண்ணலாரது ஆலயத்தின் புறத்தே நின்று எம்பெருமானின் புகழை யாழில் சுருதிகூட்டி பண்ணமைத்துப் பாடிக் கொண்டிருந்தார். பண்டை நாட்களில், பாணர் மரபினோர் ஆலயத்துள் சென்று இறைவனை வழிபடுவது கிடையாது. புறத்தே நின்று வழிபடுவதையே நியதியாகக் கொண்டிருந்தார்கள். பாணரின் யாழிலே உள்ளம் உருகிய சோமசுந்தரக் கடவுள் தமது பக்தனைக் காக்க திருவுள்ளம் கொண்டு மதுரையம்பதி சிவத்தொண்டர்கள் கனவில் எழுந்தருளினார். யாழ்ப்பாணரையும், அவரது மனைவியாரையும் கோவிலுள் அழைத்து வந்து தரிசனம் செய்வதற்கு ஆணையிட்டார். அவ்வாறே பாணர் கனவிலும் எழுந்தருளினார்.

பாணரே ! உம்மை, எம்மிடம் அழைத்து வந்து தரிசனம் செய்து வைக்க ஆவன செய்துள்ளோம் என்று அருள்வாக்கு சொல்லி மறைந்தார். மறுநாள் வழக்கம்போல் திருநீலகண்ட யாழ்ப்பாணர் மனைவியாருடன் கோயிலின் புறத்தே அமர்ந்து யாழ் இசைத்து தம்மை மறைந்த நிலையில் பாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது தொண்டர்கள் அவர்களைக் கண்டு வணங்கி எம்பெருமானின் ஆணையைக்கூறி அவர்களை அகத்து எழுந்தருளுமாறு பணிவோடு கேட்டுக் கொண்டனர். அவர்களும் தொண்டர்களின் வேண்டுகோளுக்கிணங்கி கோயிலுக்குள் சென்று மண்டபத்தில் அமர்ந்தனர். பக்தி வெள்ளத்தில் மூழ்கிய அன்பர் இருவரும் தரை ஈரமாக இருப்பதனை கூட பொருட்படுத்தாமல், ஈரத்தரையில் அமர்ந்து மெய்மறந்து யாழை மீட்டி பாடத் தொடங்கினர். இவருடைய இன்ப இசையில் மயங்கிய மதுரையம்பதி ஈசன் தரையின் குளிர்ச்சி பட்டு யாழின் சுருதி கெட்டுவிடுமே என்று திருவுள்ளம் பற்றினார். அசரீரி வாயிலாக பெருமான் நிலத்திலிருந்து பாடினால் ஈரத்தால் யாழ் கெட்டுவிடும். எனவே அவர்கட்கு அமர்ந்து பாடப் பலகை ஒன்று இடுங்கள் என்று திருவாய் மலர்ந்து அருளினார். அப்பொழுது அத்தொண்டர்கள் அவர்களுக்கு அழகிய பீடம் ஒன்றை எடுத்து வந்து அதன் மீது அமர்ந்து பாடுமாறு செய்தனர். பீடத்தில் அமர்ந்த யாழ்பாணரும், மதங்கசூளாமணியும் அழகிய இனிய தெய்வ சக்திமிக்கப் பக்திப் பாடல்கள் பலவற்றைப் பாடி அனைவரையும் மெய்மறக்கச் செய்தனர். அதன் பிறகு இருவரும் மதுரையம்பதியில் நெடுநாள் தங்கியிருந்து தங்கள் யாத்திரையைத் தொடர்ந்தனர். அடுத்துள்ள பல சிவத்தலங்களையும் தரிசித்தவாறு திருவாரூரை அடைந்தனர்.

திருவாரூர் தியாகேசப்பெருமானும், பிராட்டியாரும் பாணர் இசையில் மயங்கினர். அன்றிரவு ஈசன் திருவாரூர் மெய்யன்பர்கள் கனவிலே எழுந்தருளி,எமது அன்பன் பாணனுக்கு திருக்கோயிலுள் வேறு வாயில் அமைத்து அதன் வழியாகக் கோயிலுக்குள் அழைத்து வந்து இசை பாடத் துணைபுரிவீர்களாக என்று கட்டளையிட்டருளினார். மறுநாள் தொண்டர்கள் திருநீலகண்ட யாழ்ப்பாணர் எழுந்தருளும் பொருட்டு வடதிசையில் வாயில் ஒன்று நிர்மாணித்தனர். அதன் வழியாக அவரையும், அவரது மனைவியாரையும் எம்பெருமான் திருமுன் எழுந்தருளச் செய்தனர். யாழ்ப்பாணர் வீதிவிடங்கப் பெருமானைக் கண்குளிரக் கண்டு மகிழ்ந்து பக்திப் பாடல்கள் பாடினார். சில நாட்களில் அங்கிருந்து புறப்பட்டார். சிவத்தலங்கள் பலவற்றைத் தரிசித்துக் கொண்டே, சீர்காழியை வந்தடைந்து சம்பந்தரை வணங்கினார். பாணரின் யாழிசையில் எல்லையில்லா இன்பம் எய்திய திருஞான சம்பந்தப் பெருமான் அவரையும், அவர் தம் மனைவியாரையும் தம்முடனேயே இருந்து தேவாரப் பதிகங்களை யாழில் இட்டு இசைத்து பாடும் வண்ணம் அருள்புரிந்தார். இறுதியில் திருபெருமணநல்லூரில் ஞானசம்பந்தர் திருமணத்தில் தோன்றிய சிவஜோதியில், பாணரும், அவர்தம் மனைவியாரும் கலந்து சிவபதவியை அடைந்தனர்.

திருச்சிற்றம்பலம்

---------------------------------------------------------------------------------------------
45:திருநீலநக்க நாயனார்
No photo description available.
பொன்னியாறு எந்நாளும் ‌பொய்க்காமல் தரும் நீரால் வளம் கொழிக்கும் சோழ நாட்டில் திருச்சாத்த மங்கை அøமந்துள்ளது. அங்குள்ள செந்நெல் விளைந்து முதிர்ந்து நிற்கும். வயல்களில் மலர்ந்திருக்கும் தாமரைப் மொட்டின் மீது கயல் மீன்கள் துள்ளித் துள்ளிப் புரண்டு விளையாடும். எழில் மிகும் ‌தாமரைத் தடாகங்களில் அன்னம் போன்ற நடைபயிலும், வண்ணப் பெருநிலவு முகத்துச் செந்தழிப் பெண்கள் நீராடும்போது அன்னப் பறவைகளும் அவர்களுடன் வந்து கலந்து நீராடும். பிரம்மதேவன் எம்பெருமானைப் போற்றி வழிபட்ட திருத்தலமாதலால் இததிருப்பெயர் ஏற்பட்டது என்பது புராண வரலாறு. இத்ததை‌ய பல்வளமிக்கத் திருநகரில் எம்பெருமான் எழுந்தருளியுள்ள கோயிலுக்கு அயவந்தி என்று பெயர். இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுக்கு அயவந்திநாதர் என்று பெயர். எம்பெருமானின் பிராட்டியாருக்கு மலர்க் கண்ணியம்மை என்பது திருநாமம். இத்திருத்தலத்தில் வாழ்ந்து வரும் வேதியர்கள் அயவந்திநாதர் மலர்ப்பாதங்களில் இடையறாது பக்தி பூண்டெழுகி வந்தனர். எந்நேரமும் வேத பாராயணம் ‌‌செய்வர். திருவெண்ணீற்றின் பெருமையை உணர்ந்த இம்மறையவர்கள் மூன்று வகையான வைதீகத் தீயை வளர்ப்பர். இம்மறையவர்களார் மனைத்தக்க மாண்பு உடைய மாதர்களும், தங்களுக்கே உரித்தான நான்காவது தியாகக் கற்புத் தீயையும் வளர்ப்பர். இம்மறையவர்களிடம், அந்தணச் சிறுவர்கள் வேதம் பயில்கின்றபொழுது, சாம வேதம் பாடுகின்ற பூவை என்கிற நாகணவாய்ப் பறவைகள் தாமும் இவ்வேதங்களைத் தம் குஞ்சுகளுக்குக் கற்பிக்கும். சில சமயங்களில் அந்தணச் சிறுவர்கள் வேதம் பயி்ல்கின்றபோது சற்று பிழையாகக் கூறிவிட்டாலும் உடனே இப்பூவைப் பறவைகள் அச்சிறுவர்களின் தவற்றைத் திருத்திக் கூறவும் செய்கின்றன. இத்தகைய சீர்மீக்கத் திருச்சாத்த மங்கையில், சீலமிக்க வேதியர் மரபில் ஆலமுண்ட அண்ணல்பால் அடிமைத் திற பூண்டவராக விளங்கியவர்தான் திருநீலநக்க நாயனார். இவ்வடியார் வேத நுõல்கள் மொழிவதற்கு ஏற்ப எம்பெருமானுக்கும், எம்பெருமான் அடியவர்களுக்கும் திருத்தொண்டுகள் யாவும் புரிந்து நாடோறும் சிவகாம விதிப்படி சிவபெருமானைப் பூசித்து வந்தார். இவ்வாறு நாயனார், ஒழுகிவரும் நாளில் எம்பெருமானுக்கு உகந்த திருவாதிரை நன்னாள் வந்தது.

திருநீலநக்க நாயனார் வழக்கம்போல் தமது மாளிகையி்ல் முறைப்படி இறைவழிபாட்டை முடித்துக் கொண்டு அயவந்திநாதரைத் தரிசித்து வர எண்ணினார். மனைவியாரை அழைத்துக்கொண்டு வழிபாட்டிற்குத் தேவையான பொருள்கள் அனைத்தையும் கு‌றைவர எடுத்துக் கொண்டு புறப்பட்டார். கோயிலை அடைந்த இச் சிவதம்பதிகள் ஆலயத்தை வலம் வந்து அயவந்தி நாதரையும் மலர்க் கண்ணியம்மையாரையும் வழிபட்டு சிவபூஜையைத் தொடங்கினர். அது சமயம் அம்மையார் இறைவழிபாட்டுப் பெருள்களை அவ்வப்போது குறிப்பறிந்து கணவருக்கு எடுத்துக் கொடுத்தார். நாயனார் அயவந்திநாதரின் திருவடித் ‌தாமரைகளை வணங்கிப் பூசனை செய்தார், அப்பொழுது, அயவந்திநாதரின் பொன்னாற்மேனிதனில், சுதைச் சிலந்தி ஒன்று, தன் நிலையினின்றும் தவறி வந்து விழுந்தது. அதுகண்டு அம்மையார் மனம் துடிதுடித்துப் போனார். இறைவன் திருமேனியில புண் ஏற்பட்டு விடுமே ! என்று அம்மையார் இதயம் புண்பட்டுத் துயறுற்றார். அம்மையார் உள்ளத்தில் அச்சம் ஏற்பட்டது. அம்மையõர் அச்சத்தோடும், அன்போடும், விரைந்து எழுந்து சிவலிங்கத் திருமேனியில் நின்றும் அச்சிலந்து விலகிப்போகும் வண்ணம் வாயினால் ஊதித் திருமேனிக்குப் பங்கம் வராமல் காத்தார். அவ்வமயம் எதிர்பாராமல் சற்று உமிழ் நீரும் சிலவிங்கத் திருமேனியில் பட்டுவிட்டது. இளங் குழந்தையைப் பராமரிக்கும் தாயைப்போல் சிவலிங்கத்தை அம்மையார் இங்ஙனம் ஊதி உமிழ்ந்தார் என்பதை உணர முடியாத நாயனார் அம்மையார் அரனாருக்கு ஏ‌தோ அபசாரம் விளைவித்ததாக எண்ணினார். ஆத்தி‌ரத்தோடு அறிவிலியே! என் ஐயனுக்கு எனன அபசாரம் செய்தாய் என்று கேட்டார் நாயனார். கணவரின் கடு‌மொழி கேட்டுச் சினம் கொள்ளாமல் மனைவியார், ஐயன் மீது சிலந்தி விழுந்ததால், ஊதிப் போக்கினேன் என விடையளித்தார். மனைவியின் மொழி கேட்டு மேலும் ஆத்திரம் கொண்ட நாயனார், நன்று நீ பேசுவது ! இறைவன் திருமேனியில் சிலந்தி விழுந்தால் அதற்கென இத்தகைய அபச்சாரமான செயலைக் செய்வதா? சிலந்தி விழுந்தால் அந்த இடத்தை வேறு வகையால் போக்குவதை விட்டுவிட்டு வாயால் ஊதி உமிழ்வதா ? என இறைவனுக்கு இத்தகைய பெருந்தவறு செய்த உன்னோடு எங்ஙனம் வாழ்வேன் ? இக்க‌ணமே உன்னைத் துறந்தேன் ! என்று கூறி‌ய‌தோடல்லாமல் பூஜை‌யையும் முடிக்காமல் வேக வேகமாக வீட்டிற்கு போனார். அவரது மனைவி‌யாரோ மன வேதனை மேலிட செய்வதறியாது இறைவன் கோயிலிலேயே தங்கி விட்டார். சிவபூஜையி‌ல் கரடி புகுந்தாற்போல், தன்னால் இன்று பூஜை தடைபட்டதே என்று கலங்கினார்; எம்பெருமானிடம் பிழை பொருத்தருள பிரார்த்தித்தார் அடியவரின் மனைவியார். அம்மையார் இரவு முழுவதும் விழித்துக் கொண்டு ஆலயத்திலேயே தங்கியிருக்க, நாயனார் வீட்டிற்குச் சென்று துயின்றார்.

அன்றிரவு எம்பெருமான் நாயனார் கனவி‌லே எழுந்தருளி, தொண்டனே ! இதோ என் உடம்பைப் பார். உன் வாழ்க்கைத் துணைவி ஊதிய இடந்தவிர மற்றைய இ‌டங்களிலெல்லாம் கொப்புளங்கள் தோன்றியிருப்பதைக் காண்பாயாக ! என்று திருவாய் மலர்ந்து தமது வெண்ணீறு அணிந்த மேனியிலே இருக்கும் கொப்புளங்களைக் காட்டி மறைந்தார் எம்பெருமான் ! நாயனார் கனவு கலைந்து திடுக்கிட்டு விழித்தார். தம் தவற்றை எண்ணி வருந்தினார். ஆலயத்தை நோக்கி ஓடினார். அரனாரை வீழ்ந்து வணங்கி எழுந்து தன் தவற்றை எண்ணி மனம் வாடினார். ஆலயத்தின் வெளிப்பிரகாரத்தில் தூணில் சாய்ந்த வண்ணம் உறங்காமல் அமர்ந்திருக்கும் மனைவியைக் கண்டார். மனைவியும் கணவனைப் பார்ததார். நாயனார் மனைவியிடம் கனவிலே பெருமான் திருவாய் மலர்ந்ததையும், தான் இறைவனின் புண்பட்ட திருமேனியைத் தரிசித்ததையும் சொல்லி மனைவியிடம் மன்னிப்புக் கேட்டார். மனைவியை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தார் நாயனார். இல்லறத்தை முன்போல் இனிது நடத்தலாயினார். இங்ஙனம் இவர்கள் வாழ்ந்து வரும் நாளில் திருஞான சம்பந்தர் தமது அடியார் கூட்டத்தோடு திருத்தலங்கள் பலவற்றைத் தரிசித்துக்கொண்டே திருச்சாந்தமங்கையை நோக்கிப் புறப்பட்டார். திருஞான சம்பந்தருடன், திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாரும், அவருடைய மனைவியாராகிய மதங்க சூளாமணி அம்மையாரும் வந்து கொண்டிருந்தனர். திருநீல நக்க நாயனார், மேளதாளத்துடன் அன்பர்கள் புடைசூழ ஆளுடைப் பிள்ளையையும், அடியார்களையும் எல்லையிலே பூரண பொற்கும்ப கலசங்களோடு எதிர்கொண்டு வரவேற்று வணங்கி தமது திருமாளிகைக்கு அழைத்து வந்தார். திருஞான சம்பந்தருக்கும் திருக்கூட்டத்தாருக்கும் திருவமுது செய்வித்து மகிழ்ந்தார். இரவு தமது திருமாளிகையில‌ே துயிலுமாறு ஏற்பாடு செய்தார். திருஞான சம்பந்தர் தம்முடன் வந்திருக்கும் பாணருக்கும், அவர் தம் வாழ்க்கைத் துணைடியாருக்கும் அன்றிரவு அங்கேயே தங்க இடம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதும் நாயனார் அவர்களை இழி குலத்தோர் என்று கூடக் கருதாமல் வேள்வி நடத்தும் இடத்திலேயே துயில்வதற்குப் படுக்கை அமைத்துக் கொடுத்தார்.ஞான சம்பந்தர் அயவந்தி அண்ணலைப் பணிந்து பாடிய திருப்பாசுரத்தில் திருநீலநக்கரின் இத்தகைய உயர்ந்த திருத்தொண்டையும் சிறப்பித்துக் கூறியுள்ளார். திருஞான சம்பந்தர் அயவந்தி நாதரின் அருளைப் பெற்றுப் புறப்பட்டபோது திருநீலநக்க நாயனார் அவரைப் பிரிய மனமில்லாமல் அவரோடு புறப்பட்டார். திருஞான சம்பந்தர் அன்பு மேலிட, நீவிர் எம்முடன் வருவது ஏற்றதல்ல! இங்கேயே தங்கியிருந்து அயவந்தி நாதருக்கு திருத்தொண்டு பல புரிந்து நலம் பெறுவீராக ! என்று அன்பு கட்டளையிட்டார். திருஞான சம்பந்தரின் தரிசனத்தால் அவர் மீது திருநீலநக்க நாயனாருக்கு ஏற்பட்ட பக்திக்கும் அன்பிற்கும் எல்லை ஏது? அல்லும் பகலும் அவ்வடியார் ஞானசம்பந்தர் நினைவாகவே இருந்து வந்தார். பெருமண நல்லூரி்ல் நிகழும் ஞானசம்பந்தரின் திருமணத்தினைக் கண்டுகளிக்கச் சென்றார். அங்கு தோன்றி சிவஜோதியி்ல மனைவியாருடன் கலந்து சிவபெருமானுடைய திருவடி நிழலை அடைந்தார்.

"ஆய்ந்த மெய்ப் பொருள் நீறு என வளர்க்கும் அக் காப்பில்
ஏய்ந்த மூன்று தீ வளர்த்துளார் இரு பிறப்பாளர்
நீந்து நல் அறம் நீர்மையின் வளர்க்கும் அத்தீயை
வாய்ந்த கற்புடன் நான்கு என வளர்ப்பர் கண் மடவார்"

திருச்சிற்றம்பலம்

------------------------------------------------------------------------------
46:திருமூல நாயனார்
No photo description available.
ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந்தான் ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தானிருந் தானுணர்ந் தேட்டே

திருவாடுதுறை! உமாதேவியார் பசுவின் கன்றாக வடிவம் பூண்டு தவஞ் செய்த பெருமைமிக்க திருத்தலம்! இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானின் திருநாமம் பசுபதியார் என்பதாம். இங்கு காவிரியாறு ஓடுவதால் நல்ல செழிப்பும் சுபிட்சமும் நிலைத்து நின்றன. பிறைமுடிப் பெருமானார் எழுந்தருளியிருக்கும் கயிலை மலையின் முதற் பெருங்காவலராக விளங்குபவர் நந்தியெம்பெருமான். இவருடைய அருளைப் பெற்ற நான்மறைச் சிவயோகியார் பலர் இருந்தனர். அவருள் ஒருவரான சுந்தரநாதர் என்னும் சிவயோகியார் சிவாகமங்களில் வல்லவராய் மேம்பட்டு விளங்கினார். அச்சிவ யோகியார்க்கு பொதிகை மலையில் வீற்றிருக்கும் அகத்திய முனிவரைக் கண்டு அவருடன் சில நாட்கள் தங்கி அளவளாவி மகிழ வேண்டும் என்ற விருப்பம் எழுந்தது. ஒருநாள் அத்தவசியார் எம்பெருமானின் பாத கமலங்களைப் பணிந்து வழிபட்டுப் பொதிய மலைக்குப் புறப்பட்டார். திருக்கேதாரம், நேபாளம், திருசைலம் வழியாக திருக்காளத்தி மலையை அடைந்தார். திருவாலங்காடு, காஞ்சி, தில்லை முதலிய திருத்தலங்களிலுள்ள சிவன் கோயில்களை வழிபட்டவாறு திருவாடுதுறை என்னும் பழம்பெரும் புண்ணியதலத்தை வந்தடைந்தார். அத்தலத்தை அடைந்த யோகியார் அங்கு எழுந்தருளியிருக்கும் பசுபதிநாதரை வணங்கினார். அத்திருத்தலத்திலேயே சிலகாலம் தங்கியிருந்து பரமனை வழிபட்டு வந்தார். அருகிலுள்ள பிறத்தலங்களையும் தரிசித்து வர வேண்டும் என்ற வேட்கை மிகுதியினால் சுந்தரநாதர் அங்கியிருந்து புறப்பட்டு, காவிரியாற்றின் கரை வழியாக போய்க் கொண்டிருந்தார். காவிரிக்கரையிலே பசுக்கள் கூட்டம் கூட்டமாக மேய்ந்து கொண்டிருந்தன. அப்பசுக்களை மேய்த்த வண்ணம் நின்று கொண்டிருந்தான் மூலன் என்பவன். மூலன் சாத்தனூரைச் சேர்ந்தவன். குலத்தில் இடையர். அதனால், தன் குலத்திற்கு ஏற்ப அந்தணர்கள் வீட்டு ஆநிரைகளை மேய்த்து வரும் தொழிலைச் செய்து வந்தான். மூலன் கருணை உள்ளம் படைத்தவன். இவன் பசுக்களை அடிக்காமல் வெயிலில் மேயவிடாமல் கூடியமட்டும் நல்ல நிழல் உள்ள இடமாகவே அவைகளைத் துன்புறுத்தாமல் மேய விடுவான். பாதுகாப்பாகவும், அன்பாகவும் பேணி வளர்ப்பான். இதனால் அவன் இத்தொழிலில் நல்ல ஊதியம் பெற்றான். மனைவி மக்களோடு கவலையின்றி, மன மகிழ்ச்சியோடு வாழ்ந்து வரலானான். வழக்கம்போல் அன்றும் மூலன் ஆநிரைகளை மேய்த்துக் கொண்டிருக்கும் போதுதான் யோகியார் அவ்வழியாக வந்து கொண்டிருந்தார். ஆநிரைகள் மேய்ந்து கொண்டிருக்கும் அழகான காட்சியைக் கண்டு யோகியார் தம்மை மறந்த நிலையில் நின்று கொண்டிருந்தார்.

அவ்வமயம் எதிர்பாராமல் ஒரு சம்பவம் நடந்தது. ஆநிரைகளை மேய்த்துக் கொண்டிருந்த மூலனுக்கு ஆயுள் நெருங்கிடவே அவன் இறந்தவிட்டான். இறந்து போன மூலனைச் சுற்றி பசுக்கள் கூடின. பசுக்களின் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தன. மூலனை நாக்கால் நக்கியும், உம்பினால் உராய்ந்தும் ஆநிரைகள் தங்கள் அன்பை வெளிப்படுத்தின. பசுக்கள் எல்லாம் சேர்ந்து கதறிப் பதறி அங்குமிங்குமாக சுற்றித் திரிந்தன. இக்காட்சியைக் கண்ட யோகியார், மூலனைப் பிரிந்து இவ்வளவு தூரம் வாடும் இப்பசுக் கூட்டம் இனி மேல் ஆகாரம் உட்கொள்ளாது. அவனைப் போல் இறந்துதான் போகும். எம்பெருமான் திருவருளால் எப்படியும் இப்பசுக்கூட்டத்தின் இடரைத் தீர்ப்பேன் என்று தமக்குள் எண்ணினார். கருணைமிக்க சிவயோகியார் ஆநிரைகளுக்கு ஏற்பட்டுள்ள துன்பத்தைப் போக்க முடிவு பூண்டார். கூடுவிட்டு கூடுபாயும் வித்தையைக் கற்றிருந்த தவசியார் மூலன் உடலுக்குள் தம் உயிரைப் புகுத்தினார். அவ்வளவுதான். மூலன் உறங்குபவன் போல் கண் விழித்து திருமூலராய் எழுந்தான். ஆநிரைகளுக்கு ஆனந்தம் தாங்கவில்லை. துள்ளிக் குதித்தன. திருமூலராகிய சித்தருக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. அவரும் பசுக்களைத் தட்டிக்கொடுத்து அவற்றோடு சேர்ந்துத் துள்ளிக் குதித்தார். மாலை மறைந்தது. வீடு நோக்கி பசுக்கள் புறப்பட திருமூலரும் கூடவே புறப்பட்டார். ஒவ்வொரு பசுவும் தத்தம் வீடு அறிந்து புகுந்து கொண்டன. திருமூலர், அவற்றை எல்லாம் வீடு சேர்த்தார். ஆனால் மூலன் மட்டும் அவரது வீட்டிற்கு போக விரும்பவில்லை. அவர் ஞான திருஷ்டியால் மூலனுக்குத் திருமணம் ஆகிவிட்டது என்பதை அறிந்தார். அதனால் தனியாக ஒரு இடத்தில் அமர்ந்து என்ன செய்வது? என்று சிந்திக்கத் தொடங்கினார். மூலனின் மனைவி கணவன் வரவை வெகு நேரமாக எதிர்பார்த்துப் பயன் ஏதும் காணாமையால் கணவனைத் தேடிப் புறப்பட்டாள். வரும் வழியிலே ஓரிடத்தில் கணவன் இருப்பதைக் கண்டு வியப்பு மேலிட அருகே சென்று வீட்டிற்கு வரக் காலதாமதம் ஆனது பற்றி வினவினாள். மூலன் மௌனம் சாதித்தார். மூலனின் மனைவி வியப்பு மேலிட கேள்வி மேல் கேள்வி கேட்டாள். திருமூலர் மௌனமாகவே இருந்தார். அவரது மனைவிக்கு புரியவில்லை. திருமூலரின் கையைத் தொட்டு அழைக்க முற்பட்டாள்! அம்மையார் செய்கை கண்டு திருமூலர் சிறிது எட்டி விலகினார். அப்பெண்மணி அஞ்சி நடுங்கி, உங்களுக்கு என்ன தீங்கு நேர்ந்தது? எதற்காக இப்படி விலகுகிறீர்கள் என்று மன வருத்தத்தோடு கேட்டாள். திருமூலர் தம் மனைவியிடம், என்னால் உன் வீட்டிற்கு வர முடியாது. உனக்கும், எனக்கும் இனி மேல் எவ்வித உறவும் கிடையாது. அதனால் ஆலயம் சென்று அரனாரை வழிபட்டு அமைதி பெறுவாயாக! என்று கூறினார். அதற்குமேல் அவள் முன்னாள் நிற்பதும் தவறு என்பதை உணர்ந்து திருமூலயோகியார் அத்தலத்திலுள்ள திருமடம் ஒன்றுக்குச் சென்று சிவயோகத்தில் அமர்ந்தார்.

கணவனின் நிலையைக் கண்டு கதிகலங்கிப் போனாள் மனைவி. கணவனின் மனமாற்றத்தைப் பற்றி ஒன்றும் புரியாமல் கவலையோடு வீடு திரும்பினாள். இரவெல்லாம் பொல்லாத் துயர்பட்டுக் கிடந்தாள். மறுநாள் மூலனின் மனைவி சுற்றத்தாரை அழைத்துக்கொண்டு அவர் இருக்குமிடத்திற்கு வந்தாள். யோக நிலையில் அமர்ந்திருக்கும் திருமூலரின் முகத்தில் தெய்வ சக்தி தாண்டமாடுவது போன்ற தனிப் பிரகாசம் பொலிவு பெறுவது கண்டு அனைவரும் திகைத்து நின்றனர். இருந்தும் அவர்கள் மனைவிக்காக திருமூலரிடம் வாதாடினர். ஒரு பலனும் கிட்டவில்லை. அதன் பிறகு திருமூலர் முனிவர் என்பதை அவர்களால் உணர்ந்துகொள்ள முடிந்தது. அவர்கள் மூலன் மனைவியிடம், உன் கணவர் முன்னைப்போல் இல்லை. இப்பொழுது அவர் முற்றும் துறந்த முனிவராகிவிட்டார். இனிமேல் இம் மெய்ஞானியாரோடு வாழ வேண்டும் என்பது நடக்காத காரியம் என்ற உண்மையைக் கூறினர். அவர்கள் மொழிந்ததைக் கேட்ட மூலனின் மனைவி கணவனுக்கு இப்படிப் பித்து பிடித்துவிட்டதே! என்று தனக்குள் எண்ணியவாறே அவரது கால்களில் விழுந்து வணங்கி வேதனையோடு வீடு திரும்பினாள். சற்று நேரத்தில் யோகநிலை தெளிந்த திருமூலர், மறைவாக ஒரு இடத்தில் வைத்திருந்த தமது திருமேனியைத் தேடினார். கிட்டவில்லை. முதலில் யோகியாருக்கு அஃது சற்று வியப்பாகவே இருந்தது. மீண்டும் யோக நிலையில் அமர்ந்து, தனது மேனியைப் பற்றிய உண்மைப் பொருளை உணர எண்ணங்கொண்டார். தபோ வலிமையால் இறைவன் அருளிய ஆகமப் பொருளைத் தமிழிலே வகுத்து உலகோர்க்கு உணர்த்த வேண்டும் என்பதற்காகவே முக்கண்ணனார் தம் <உடலை மறைத்தருளினார் என்பதை உணர்ந்து கொண்டார். திருமூலநாயனார் இறைவனின் கட்டளையை நிறைவேற்றிச் சித்தங்கொண்டார். திருவாடுதுறைப் பெருமானைப் பணிந்தவாறு மதிலுக்கு வெளியே மேற்கு பக்கமாக அமைந்துள்ள அரசமரத்தின் அடியில் அமர்ந்து சிவயோகம் செய்யத் தலைப்பட்டார். சிவயோகத்தில் நிலைத்து நின்று இதய கமலத்தில் எழுந்தருளிய எம்பெருமானுடன் ஒன்றினார். உணர்வு மயமாய்த் திகழ்ந்தார் திருமூலர். உலகோர், பிறவியாகிய நஞ்சிலிருந்து நீங்கி உய்யும் பொருட்டு சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு நெறிகளையும் வகுத்தும், தொகுத்தும், விரித்தும் கூறும் நல்ல திருமந்திர மாலையினை ஓர் ஆண்டிற்கு ஒரு மந்திரப் பாடலாக மூவாயிரம் ஆண்டுகள், சிவயோகத்தில் அமர்ந்து, மூவாயிரம் திருமந்திரங்கள் அடங்கிய திருமுறையைப் பாடினார். சிவயோக நுணுக்கங்களை விளக்கமாகக் கூறும் திருமந்திரம் ஓர் அற்புதமான அறநூல்! தெய்வீக ஆற்றலுடன் திகழ்ந்து, சிவபதவியை நினைப்பவரைப் பாவக் குழியிலிருந்து வெளியேற்றி காப்பதால் திருமந்திரம் எனத் திருநாமம் பெற்றது. திருமூல நாயனார் பரம் பொருளாகிய சிவபெருமானைப் போற்றி பாடியருளிய திருமந்திரம், ஆகமங்களின் சாரம்! இஃது ஒன்பது மந்திரங்களாக அமைந்துள்ளது. பன்னிரு திருமுறையில் பத்தாம் திருமுறையாக விளங்குவது தெய்வீக ஆற்றலுடன் விளங்கும் இத்திருமந்திரமாலை. சைவ சித்தாந்த சாத்திரங்கள் அனைத்திற்கும் முற்பட்டது. இப்புனிதமான திருமந்திரத் திருமுறைக்கு நிகராக வேறு திருமுறைகளே இல்லை. இம் மூவாயிரந் திருமந்திரப் பாடல்களையும் வைகறை எழுந்து கருத்தறிந்து ஓதுவோர் பிறவிப் பாசம் நீங்கி பரமன் பதியை அணைவர் என்பது திருவாக்கு!இவ்வாறு, உலகோர் உய்யும் பொருட்டு திருமந்திர மாலையை, அருளிய திருமூல நாயனார் நெற்றிக் கண்ணனாருடைய பொற்றாமரைப் பாதங்களைப் பற்றிக் கொள்ளும் ஒப்பற்ற பெருவாழ்வைப் பெற்று உய்ந்தார்.

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே

திருசிற்றம்பலம்

---------------------------------------------------------------------------------------------------
47:நமிநந்தியடிகள் நாயனார்
“அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்”
No photo description available.
ஏமப்பேறுர் என்னும் சிவத்தலம், சோழர்களுக்குச் சொந்தமாகி‌ய ‌பொன்னி நாட்டில் அமந்துள்ளது. இத்தலத்திலுள்ள அந்தணர்கள் வேள்விச் சாலையில் அருமையான பூ‌சை மேடை மீது வெண் மணலைப் பரப்பி இடை இடையே செந்தீயை வளர்த்து வேத பாராயணம் செய்வர். இத்தகைய சீரும் சிறப்பு மிக்குத் தலத்தில் சைவ நெறியில் ஒருமைப்பட்ட அந்தணர் குலத்தில் நமிநந்தியடிகள் நாயனார் தோன்றினார். இவர் எக்காலத்தும் எம்பெருமசன் திருவடிகளை இடையறாது வணங்கி வழிபட்டு வரும் பெரும் பேறு பெற்றிருந்தார். இவ்வன்பர் நாடோறும் அடுத்துள்ள திருவாரூர் சென்று புற்றிடங்கொண்ட பெருமானை வணங்கி வழிபட்டு வந்தார். திருவாரூர் திருக்கோயிலின் திருமதிலுக்கு அருகே அறநெறி என்று ஓர் தனிக்கோயில் உண்டு. அங்கு எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுக்கு அறநெறியப்பர் என்று பெயர். நமிநந்தியடிகளார் அறநெறிச் சன்ன‌‌தியை அடைந்து அறநெறியப்பரையும் அம்மையையும் பக்திப் பெருக்கோடு வழிபட்டு வந்தார். ஒரு நாள் மாலைப் பொழுது அடிகளார் அறநெறி யப்பரைச் சேவிததுக் கொண்டிருந்தார். அங்கே விளக்கேற்றாமல் இருந்தால் எங்கும் இருள் படர்ந்திருந்துது. ஒரே ஒரு விளக்கு மட்டும் எண்ணை தீர்ந்து போகும் நிலையில் சற்று மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. ஆலயத்துள் வி‌ளக்கேற்றி வைக்க எண்ணினார்.

தொலைவிலுள்ள தமது ஊருக்குச் சென்று விளக்கு ஏற்ற நெய் வாங்கி வருவதற்குள் பொழுது ந்ன்றாக இருண்டுவிடும்என்பதை உணர்ந்தார் நாயனார். ஆலயத்தை அடுத்துள்ள ஒரு வீட்டிற்குள் சென்று அவ்வீட்டிலுள்ளோரிடம் விளக்கு ஏற்றுவதற்குக் கொஞ்சம் நெய் வேண்டும் என்று பணிவன்புடன் வேண்டினார். அந்நாளில் திருவாரூரில் சமணர்கள் சற்று அதிகமாகவே குடியேறியிருந்தார்கள் நமிநந்தியடிகள் விளக்கு ஏற்ற நெய் கேட்ட இல்லத்தில இருந்தவர்களே சமணர்கள் அச்சமணர்கள் அடிகளாரைப் பார்த்து எள்ளி நகையாடினார்கள். அவர்கள் அவரைப் பார்த்து, கையில் கனல் ஏந்தி ஆனந்தத் தாண்டவம் ஆடும் உங்கள் இறைவனுக்கு விளக்கு வேறு வேண்டுமா ? கனல் ஒளி ஒன்றே போதுமே ? அப்படியும் விளக்கேற்றத்தான் வேண்டும் என்ற ந்லல எண்ணம் விளக்கேற்றத்தசான் வேண்டும் உள்ள குளத்துநீரை ஊற்றி உமக்கு இருந்தால், எதிரில் உள்ள குளத்து நீரை ஊற்றி ஏற்றுவதுதானே ? என்று சொல்லி எள்ளி நகையாடினர். சமணர்களின் இக்கேலி வார்த்தைகளைக் கேட்டு நமிநந்தியடிகள் நெஞ்சம் உருக ஆலயத்திற்கு வந்‌து இறைவடன பணிந்து, அறநறியப்பரே ! எந்தாயே ! எம்பெருமானே ! சமணர்களால் ஐயனுக்கு இழிமொழிகள் ஏற்பட்டுவிட்டதே ! இவற்றை இச்செவிகள் கேடபதற்கு அடியேன் என்னன பாவம் செய்தேனோ ? மாற்றி அருள, மார்க்கம்தான் ‌யாது உளதோ ? என்று இறைஞ்சினார்.

இறைவன் அருளியதைக் கேட்டு அடிகளார் ஆனநதப் பெருக்கோடு தேவாசிரிய மண்டபத்தை அடுத்து உம்ம சங்கு தீர்த்தம் என்னும் பெயருடைய திருக்குளத்தை நோக்கி ஓடினார். நீரை மொண்டு வந்தார். விளக்கில் நீரை ஊற்றித் திரியைத் தூண்டிவிட்டார். ஐயனின் அருட்கருணையைத்தான் ‌என்னென்பது ! நீர் விட்டு ஏற்றிய விளக்கு நெய் விளக்கு ஒளியைவிட பன்மடங்கு ஒளியோடு பிரகாசித்தது. ஆனந்தம் மேலிட அடியார் எல்லா விளக்குகளையும் இப்படியே குளத்து நீரை ஊற்றி ஏற்றினார். விளக்குகள் அனைத்தும் மங்களமாகப் பிரகாசித்தன. அடியார் எல்லையில்லா மகிழ்ச்சிப் பெருக்கோடு ‌யாது செய்வதென்றறியாது பேரின்ப சுகம் பூண்டு திகைத்து நின்றார். காலப்ப‌ோக்கில் சமணர்களின் அக்கிரமத்திற்கும் ஒரு முடிவு காலம் வந்தது. சமணம் அழிநதது. ‌சைவநெறி தழைத்தது. திருவெண்ணீற்றுப் பொன் ஒளி ஏமப்பேறுாரை வெள்ளியம்பலம் போல் விளங்கச் செய்தது. அப்பொழுது சோழ நாட்டை ஆண்டு வந்த மன்னர், அடியாரின் திருத்தொண்டினையும், பக்தியையும் கேள்விப்பட்டு கோயிலுக்கு நமிநந்தியடிகளையே தலைவராக்கினார். அத்தோடு ‌கோயில் திருப்பணி தட்டாம் நடைபெறுவதற்காக வேண்டி பொன்னும் பொருளும் கொடுத்து உதவினார்.

அடிகளார் எம்பெருமானுக்குப் பெருவிழாக்கள் பல நடத்தி பெருமிதம் பூண்டார். ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி உத்தரத் திருவிழாவை அடிகளார் முன் நின்று மிக்கச் சிறப்பாக நடத்தி வந்தார். இந்த சமயத்தில் ஏமப்பேறுாரை அடுத்துள்ள மணலி என்ற ஊரில் ஆண்டுக்கொடருமுறை, திருவாரூர் தியாகேசப் பெரமான் எழுந்தருளுவது வழக்கம். தியாகேசப் பெருமானுக்கு. மணலியில் பெருவிழா நடைபெறும். ஒருமு‌றை மணலியில் நடந்த தியாகேசர் விழாவிற்கு தொண்டர்களும், அன்பர்களும் ஜாதி, மத பேதமின்றி கலந்து கொண்டனர். நமிநந்தியடிகளும் இவ்விழாவில் கலநது கொண்டு பரமனின் அருளைப் பெற்றார். மாலையில் புற்றிடங் கொண்ட பெருமான் முன்போல திருவாரூக் கோயிலில் எழுந்தருளினார். அடிகளார் தியாகேசப் பெருமானை வணங்கிவிடடு, இரவென்றும் பாராமல், அங்கிருந்து புறப்பட்டு ஏமப்பேறுாரிலுள்ள தமது இல்லத்தை அடைந்தார். அந்தணர், வீட்டிற்கும் போக மனமில்லாமல் புறத்தே படுத்துவிட்டார்.அப்பொழுது உள்ளிருந்து வந்த அம்மையார் கணவன் வெளியே படுத்து உறங்குவது கண்டு திகைத்தாள்; காரணத்தை வினவினாள். அந்தணர் அம்மையாரிடம், அம்மையே ! திருவிழா விற்குச் சென்றிரு்ந்தேன். அங்கு சாதிமதபேதமின்றி எல்லாரும் கலந்து இருந்‌மையால் தூய்மை கெட்டுவிட்டது. இந்த நிலையில், மனைக்குள் எப்படி வரமுடியும் ? தண்ணீரைச் சூடாக்கி எடுதது வா! குளத்து விட்டுப் பிறகு வருகிறேன் என்று விடை பகர்ந்தார். அதுகேட்டு அந்தணப் பெருமாட்டியும் தண்ணீர் காய வைப்பதற்காக உள்ளே சென்றார்கள்.

அதற்குள் அடிகளார் சோர்வின் காரணமாகத் திண்ணையில் சற்றுக் கண் அயர்ந்து உறங்கிவிட்டார். அப்பொழுது எம்பெருமான் அவரது கனவிலே பே‌ரொளி பொங்க எழுந்தருளினார். அந்தணரே ! திருவாரூரில் பிறந்தவர்கள் அனைவருமே எனது கணங்கள்தான் ! அப்படியிருக்க உமக்கு மட்டும் ஏன் இப்படியொரு எண்ணம் எழுந்தது ? இவ்வுண்மையை நாளை திருவரூர் வந்து காண்பீராக ! என்று திருவாய் மலர்ந்து அருளினார். அந்தணர் கனவு கலைந்து எழுநதார். தம் தவற்றை உணர்ந்து இறைவனிடம் பிழை பொறுத்து அருளுமாறு வேண்டினார் ! அம்மையார் குளிப்பதற்கு வருமாறு கணவனை அழைத்தாள். அடிகளார் கனவிலே எம்பெருமான் ‌மொழிந்‌ததைச் சொன்னார். குளிக்காமலேயே வீட்டிற் குள் சென்று துயின்றார். மறுநதாள் ‌பொழுது புலர்ந்தும் அந்தணர் தூய நீராடி திருமேனியில் திருவெண்ணீறு பிரகாசிக்கத் திருவாரூருக்குப் புறப்பட்டார். அந்நகருக்குள் நுழையும்போதே நகரிலுள்ளோர் அனைவரும் சிவகண உருவத்ததில் பேரொளிப் பிழம்பாகத் திருவெண்ணீறு மேனி‌‌யோடு திகழும் காட்சியைக் கண்டு மட்டற்ற மகிழ்ச்சி பூண்டார் நாயனார். நிலத்தில் வீழ்ந்து வணங்கினார். உடனே, அனைவருமே சிவசொரூபத் தோற்றப் பொலிவு மாறி, பழையபடியே திகழவும் கண்டார். அடிகளார் திருக்கேயிலில் சென்று எம்பெருமானே ! அடியேன் செய்த பெரும் பிழையைப் பொறுத்தருளல் வேண்டும் என்று வேண்டினார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அடிகளாருக்கு திருவார;ரை விட்டுக் செல்ல மனம் வரவில்லை. தியாகேசப் பெருமானின் திருவடிகமலங்களிலேயே காலத்தைக் கடத்த எண்ணினார். அடிகளார் மனைவியாருடன் ஏமப்பேறுாரை விடுத்துக் திருவாரூரையே தமது இருப்பிடமாகக் கொண்டார். தியாகேசப் பெருமானுக்கு திருத்தொண்டுகளைச் செய்து கொண்டு வாழ்ந்து வரலானார். இவ்வாறு திருவாரூரிலே வாழ்ந்து வந்த நமிநந்தி அடிகளார் இறுதியில் அரனாரின் திருவடி நீழலை அடைந்து பேரின்பம் பூண்டார்.

இவ்விதமாக திருப்பணிகள்
எல்லா உலகமும் தொழும்படிச் செய்து
நலம் பொருந்தும் திருவீதியில்
தலையில் பிறையும் திருகங்கையும் சூடி
இறைவரான திருவாரூர் மன்னர் திருவடி நிழலில் வளர்கின்ற
அழகிய சோதியுள் நிலைபெறச் சேர்ந்தார்.

திருச்சிற்றம்பலம்

-------------------------------------------------------------------------------------------------
48:நரசிங்கமுனையரைய நாயனார்
“மெய்யடியான் நரசிங்க முனையரையற் கடியேன்” 
No photo description available.
தேடாத வளத்திற் சிறந்த திருமுனைப்பாடி நாடு. இந்நாட்டினை அரசுபுரிந்த முனையராயர் என்னும் குறுநில மன்னர் மரபிலே வந்தவர் நரசிங்கமுனையரையர். அவர் பகைவரை வென்று தீதகலச் செய்தனர்; சிவனடியார்களின் திருவடியடைதலே அரும்பேறென்று அடியாரைப் பண்ந்தார். சிவன்கோயிலின் சிவச் செல்வங்களைப் பெருக்கிக் காத்தலைத் தம் உயிரினும் சிறப்பாகச் செய்தனர். சிவநெறித் திருத்தொண்டுகளைக் கனவிலும் மறவாமல் கடமையாகச் செய்து வந்தார்.

திருவாதிரை நாடோறும் சிவபெருமானுக்கு நியமமாக விசேட பூசை செய்து, அன்று வந்தணையும் அடியார்கள் ஒவ்வொருவருக்கும் நூறு பொன் குறையாமல் கொடுத்துத் திருவமுது அளித்து வழிபட்டு வந்தார். ஒரு திருவாதிரை நாளில் அடியார்களுடனே “மான நிலையழி தன்மை வரும் காமக்குறி மலர்ந்த ஊனநிகழ் மேனியராகிய” ஒருவரும், திருநீறு அணிந்து வந்தனர். அவர் நிலையினைக் கண்டு அருகிலிருந்தவர்கள் இழந்து அருவருத்து ஒதுங்கினர்.

நரசிங்கர் அதுகண்டு அவரை அணுகி வணங்கிப் பேணினார். நல்லொழுக்கம் இல்லாதவர்களாயினும் திருநீறு அணிந்தவர்களை உலகம் இகழ்ந்து நரகிலடையாமல் உய்யவேண்டுமென உளம்கொண்டு அவரைத் தொழுது அவருக்கு இரட்டிப்பொன் (இருநூறு பொன்) கொடுத்து உபசரித்து விடை கொடுத்தருளினார்.

நரசிங்கமுன்னையரையர் ஒரு நாள் வீதிவலம் வரும் பொழுது வீதியில் தேருருட்டி விளையாடும் நம்பியாரூரரைக் கண்டார். அவர் தம் அழகில் பெரிதும் ஈடுபட்ட அரசர் சடையனாரிடம் சென்று அவரிடம் தாம் கொண்ட நட்புரிமையினால் நம்பியை வளர்த்தற்குத் தருமாறு வேண்டினார். சடையனாரும் அவர் வேண்டுதலிற்கு இணங்கி நம்பியை வளர்த்தற்குத் தருமாறு வேண்டினார். சடையனாரும் அவர் வேண்டுதலுக்கு இணங்கி நம்பியை அளித்தார். நம்பியைச் பெருஞ் செல்வமெனக் கொண்ட நரசிங்கமுனையார் அவரை அரச திருவெலாம் பொருந்த திருமணப் பருவம் அடையும்வரை வளர்த்தார். இவ்வாறு அன்பர் பணிசெய்து நம்பியை வளர்க்கும் பேறு பெற்றமையாலே இறைவரது திருவடி நீழலில் சேர்ந்து மீளாத நிலைபெற்றனர்.

சினவிடையார் கோயில்தொறும் திருச்செல்வம் பெருக்குநெறி
அனவிடையார் உயிர்துறக்க வருமெனினும் அவைகாத்து
மனவிடையா மைத்தொடையல் அணிமார்பர் வழித்தொண்டு
கனவிடையா கிலும்வழுவாக் கடனாற்றிச் செல்கின்றார்.

தெளிவுரை : சினமுடைய காளையை யுடைய இறைவரின் கோயில்கள் தோறும் திருச்செல்வங்களைப் பெருகச் செய்யும் நெறியில் அரிய உயிரைவிடவந்தாலும் அந்நெறிகளைக் காவல் செய்து, பாசிமணி வடங்களிடையே ஆமைவோட்டை அணிந்த மார்பையுடைய இறைவரின் வழித் தொண்டைக் கனவிலும் தவறாது கடமை மேற்கொண்டு செய்து வருபவராய் விளங்கினார்.

திருச்சிற்றம்பலம்

---------------------------------------------------------------------------------
49:நின்றசீர் நெடுமாற நாயனார்
Image may contain: drawing
“நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்”
நெடுமாறனார் பாண்டுநாட்டு மன்னாராய்ப் பாராண்டு வந்தார். அந்நாளில் வடநாட்டு மன்னர் பாண்டி நாட்டின் மீது படையெடுத்து வந்தனர். அவர்களை நெல்வேலிப் போர்க்களத்தில் தோற்கடித்தார். அதனால் நெல்வேலிவென்ற நெடுமாறன் எனப் பெயர் பெற்றார். நெடுமாறனார் சோழமன்னன் மகளான மங்கையற்கரசியாரைத் திருமணம் செய்தார்.
மாறனார் தீவினைப் பயனாய் சமண சமயத்தைச் சார்ந்து தீப்பிணியுற்றார். திருஞானசம்பந்தர் என்னும் நாமமந்திரத்தைச் செவிப்புலத்துற்றபோதே மாறனாரது தீப்பிணி சிறிது குறைவுற்றது. சம்பந்தப் பிள்ளையார் வந்தபொழுது தன்னையும் அறியாமல் தன் தலைப்பக்கமாக இருந்த பொற்றவிசில் அவரை அமருமாறு கையெடுத்துக் காட்டினார். அப்பொழுது ஆரவாரித்த சமணரை அடங்குமாறு சொல்லி தம் சுரநோயைத் தீர்ப்பதுவே இருசாராருக்மாகியவாது என உரைத்தார். சம்பந்தப்பிளையார் திருப்பதிகம் பாடி திருநீறு தடவியபோது அவர்தம் வலப்பக்கம் அமுத இனிமையும் சுவர்க்க இன்பமும் போல சுகம் செய்தது. மற்றைய பாகம் நரகத் துன்பமும் கொடுவிடமும் போல வருத்தியது. சமணரை “வாதில் தோற்றீர்” எனக் கூறிச் சம்பந்தப் பிள்ளையாரை மனதார வணங்கி வருத்தம் முற்றூம் தீரும்படி வேண்டினார். முற்றும் தீர்ந்ததும் முடிமிசைக் கைகுவித்த கையராய் “ஞானசம்பந்தர் பாதம் அடைந்து உய்ந்தேன்” எனப் போற்றினார். சமணரை “என்னவாது உமக்கு” என ஏளனஞ்செய்தார். ஏளக்குறிப்பறியாத சமணர் அதனை ஒரு வினாவெனக் கொண்டு அனல் வாதத்திற்கும் எழுந்தனர். அனல் வாதத்தில் பச்சென்றிருந்த ஏட்டைப் பரசமய கோளரியார் காட்ட சமணர்கள் சாம்பரைக் கையினாற் பிசைந்துகொண்டு தூற்றிக்கொண்டு நின்றனர். அது கண்டு நகைசெய்த நெடுமாறர் ஏடு எரிந்த பின்னரும் “நீங்கள் தோற்றிலீர் போலும்” என்றார். அவ்வங்கதம் விளங்காத அமணர் அதனைப் பயன் மொழியாகக் கொண்டு புனல் வாதத்திற்கு எழுந்தனர். புனல் வாதத்தின்போது வாழ்கஅந்தணர் எனத் தொடங்கும் திருப்பாசுரத்தைச் சம்பந்தப்பிள்ளையார் பாடினார். அத்திருப்பாசுரத்தில் அமைந்த வேந்தனும் ஓங்குக எனும் மந்திரமொழியால் கூன்நீங்கி நின்றசீர் நெடுமாறன் ஆனார். வாதில்தோற்ற சமணரை “வெங்கழுவேற்றுவன், இவ்வேந்தன்” என அவர்கள் சொன்னதற்கேற்ப முறை செய்யுமாறு குலச்சிறையாரைப் பணித்தார். அமணர் கழுவேறத் தாம் திருநீறு பூசிச் சைவரானார். சமந்தப் பிள்ளையாருடன் ஆலவாய்ப்பெருமான் முன் நின்று. “திருவாலவாய் மன்னரே! அமணரின் மாயையில் மயங்கிக் கிடந்த என்னை ஆளுடையபிள்ளையாரைத் தந்து ஆட்கொண்டருளினீர் எனப் போற்றி செய்தார். சம்பந்தப் பிள்ளையாருடன் கூடிப் பாண்டிநாட்டுத் திருத்தலம் பலவும் பணியும் பாக்கியம் பெற்றார். சம்பந்தப் பிள்ளையார் சோழ நாடு செல்ல நினைத்ததும் அவருடன் போகவே மனம் விரும்பினார். பிள்ளையார் “நீர் இங்கிருந்து சிவநெறி போற்றுவீர்” எனக் கூறிய மொழிக்கிணங்கி மதுரையில் இருந்து சிவநெறி தழைக்க அரசாண்டிருந்தார். இவ்வண்ணம் பகை தடிந்து, சிவநெறியிலே நெடுங்காலம் அரசாண்டு சிவலோகமுற்றார்.

திருச்சிற்றம்பலம்

-----------------------------------------------------------------------------------------------------
50:நேச நாயனார்
“மன்னியசீர் மறைநாவன் நின்றவூர் பூசல்
வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கு மடியேன்”
No photo description available.
காம்பீலி என்னும் பழம்பெரும் பதியில், காளர் மரபில் நேச நாயனார் என்பவர் அவதரித்தார். நேச நாயனார் ஈசரிடத்தும் அவர்தம் நேசரிடத்தும் அளவிலாப் பாசமுடையவராய் வாழ்ந்து வந்தார். இவர் மனம் முக்காலமும் முக்கண்ணனின் மென்மலர்த் தாளினை நினைக்க - வாக்கு திருவைந்தெழுத்து மந்திரத்தைச் சொல்ல - காயம் திருசடைபிரானுக்குத் திருப்பணிகள் பல செய்தன. நேச நாயனார் நெய்தல் தொழிலைச் செய்து வந்தார். சிவனடியார்களுக்கு வேண்டிய ஆடைகளும் கீளும் கோவணமும் நெய்து வழங்கும் பணியைத் தட்டாது செய்து வந்தார். நேச நாயனார் சிவனடியார்களுக்காகவே வாழ்ந்தார். உயர்ந்த பேரின்பப் பெருவாழ்வு பெற்று பரமனின் மென்மலர்த்தாள் நீழலை அடைந்தார்.

உடையொடு நல்ல கீளும் ஒப்பில் கோவணமும் நெய்து
விடையவர் அடியார் வந்து வேண்டுமாறு ஈயும் ஆற்றால்
இடையறாது அளித்து நாளும் அவர் கழல் இறைஞ்சி ஏத்தி
அடைவுறு நலத்தர் ஆகி அரனடி நீழல் சேர்ந்தார்

திருச்சிற்றம்பலம்

--------------------------------------------------------------------------------------
51:புகழ்ச்சோழ நாயனார்
"பொழிற் கருவூர்த் துஞ்சிய புகழ் சோழற்கடியேன்"
No photo description available.
இமயமலையில் புலிக்கொடியைப் பொறித்து உலகையே தமது வெண் கொற்றக் குடை நிழலுக்கு அடிபணியச் செய்த மங்காத புகழ் தந்த மாமன்னர் சோழருக்குத் தலைநகரமாக விளங்கிய திருத்தலம் உரையூர். இத்தலத்தைத் தலைநகராகக் கொண்டு அநபாயச் சோழன் திருக்குலத்தின் மூதாதையராகிய புகழ்ச் சோழ நாயனார் அரியணை அமர்ந்து அறநெறி வழுவாது அரசாண்டு வந்தார். வீரத்திலும், கொடையிலும் புகழ்பெற்ற புகழ்ச் சோழன் சிவபெருமானிடத்தும், அவருடைய அடியார்களிடத்தும் எல்லையில்லா அன்பும், பக்தியும் பூண்டிருந்தார். சிவாலயங்களுக்குத் திருப்பணி பல செய்தார். இவர் ஆட்சியிலே சைவம் தழைத்தது. புகழ்ச் சோழர் கொங்குநாட்டு அரசரும், மேற்கு திசையில் உள்ள பிறநாட்டு அரசர்களும் கப்பம் கட்டுவதற்கு வசதியாக தம் தலைநகரை மலைநாட்டுப் பக்கம் உள்ள கருவூருக்கு மாற்றிக் கொண்டார். கருவூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செலுத்தி வந்த புகழ்ச்சோழர் கருவூரில் எழுந்தருளியிருக்கும் ஆனிலை என்ற கோயிலுக்குச் சென்று பசுபதீச்சுரரை இடையறாது வழிபட்டு இன்புற்றார். பசுபதீசுவரர் புகழ்ச் சோழனின் ஒப்பற்ற பக்தியை உலகறியச் செய்யத் திருவுள்ளம் கொண்டார். அதற்கான ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது.


வேற்று அரசர்கள் கொண்டு வந்து கொடுக்கும் யானைகள், குதிரைகள், பொற்குவியல்கள், ரத்தின குவியல்கள் முதலிய திரைப் பொருள்களையெல்லாம் பெற்று, அந்தந்த அரசர்களுக்கு அவரவர்கள் நிலைமைக்குத் தக்க அரசுரிமைத் தொழிலினைப் பரிபாலனம் புரிந்து வருமாறு பணித்தார்.எண்ணற்ற மன்னர்கள் கப்பம் கட்டிவரும் நாளில் அதிகன் என்னும் அரசன் மட்டும் மன்னர்க்குக் கப்பம் கட்டாமல் இருந்தான். அதிகன் திரை செலுத்தாமல் இருக்கும் செய்தியை அமைச்சர் மூலம் அறிந்துகொண்டான் மன்னன். அதிகனை வென்றுவர கட்டளையிட்டான். மன்னரின் கட்டளைக்கு அடிபணிந்து அமைச்சர் மாபெரும் படையோடு சென்று அதிகனை வென்று பலவகை பொருட் குவியல்களையும், யானைகளையும், குதிரைகளையும், பெண்களையும் மாண்ட வீரர்களது தலைகளையும் எடுத்து வந்தார். படைகளின் வீரம் கண்டு பூரிப்படைந்த மன்னர் ஒரு தலையில் சடைமுடியிருக்கக் கண்டார். சடைமுடி கண்டு அரசர் உடல் நடுங்கியது. உள்ளம் பதைபதைத்தார். அவர் கண்களில் நீர் நிறைந்தது. பெரும் பிழை நடந்துவிட்டதாக மனம் வெதும்பினார். அடியார்களின் அன்பிற்குக் கட்டுப்பட்ட புகழ்ச்சோழர் எறிபத்த நாயனாரிடமும், தம் கழுத்தையும் வெட்டுமாறு பணிந்து நின்ற தொண்டர் அல்லவா...? மன்னர் உள்ளம் உருக அமைச்சர்களிடம், என் ஆட்சியில் சைவ நெறிக்குப் பாதுகாப்பில்லாமற் போய் விட்டதே ! திருமுடியிலே சடை தாங்கிய திருத்தொண்டர் என்னால் கொல்லப்பட்டிருக்கிறாரே! என் ஐயனுக்கு எவ்வளவு பெரும் பாவத்தைச் செய்து விட்டேன்.

சைவ நெறியை வளர்க்கும் வாள்வீரர் சிரசைக் கொன்ற நான் கொற்றவன் அன்று; கொடுங்கோலன். இனியும் நான் உலகில் உயிருடன் இருப்பதா? என்றெல்லாம் பலவாறு சொல்லி மனம் புண்பட்டார். மன்னர் அரசாட்சியைத் தமது மகனுக்கு அளித்து தீக்குளித்து இறக்கத் துணிந்தார். திருச்சடையையுடைய தலையை ஓர் பொற்தட்டில் சுமந்து கொண்டு ஐந்தெழுத்து மந்திரத்தை மனதில் தியானித்தவாறே அழற்குண்டத்தை வலம் வந்தார் மன்னர். பொற்றாமரைக் குளத்தில் குளிப்பார் போல் உள்ளக்களிப்போடு தீப்பிழம்பினுள்ளே புகுந்தார் மன்னன். மெய்யன்பர்கள் மன்னரின் சிவபக்திக்கு உள்ளம் உருகினர். மன்னரின் பெருமையைப் புகழ்ந்து போற்றினர். மன்னர் தொழுதற்குரிய மகான் என்று கொண்டாடினர். எம்பெருமானின் திருவடி நீழலை அடையும் பெரு வாழ்வைப் பெற்றார் மன்னர் புகழ்ச்சோழர்!

“புலமன் னியமன்னைச் சிங்கள நாடு பொடிபடுத்த
குலமன் னியபுகழ்க் கோகன நாதன் குலமுதலோன்
நலமன் னியபுகழ்ச் சோழன தென்பர் நகுசுடர்வாள்
வலமன் னியவெறி பத்தனுக் கீந்ததொர் வண்புகழே.”

திருச்சிற்றம்பலம்
---------------------------------------------------------------------------------------------
52:புகழ்த்துணை நாயனார்
“புடைசூழ்ந்த புலியதண் மேல் அரவாட வாடி பொன்னடிக்கே மனம் வைத்த புகழ்த்துணைக்கு மடியேன்”
No photo description available.

செருவல்லிப்புத்தூர் என்னும் தலத்திலே தோன்றியவர் தான் புகழ்த்துணையார் என்னும் சிவத்தொண்டர். இவர் செருவல்லிப்புத்தூரில் எழுந்தருளியிருக்கும் இறைவனை ஐந்தெழுத்து மந்திரத்தை இடையறாது ஓதி சிவாகம முறைப்படி வழிபட்டு வந்தார். ஒருமுறை நாடு முழுவதும் பஞ்சம் ஏற்பட மக்கள் கோயிலுக்குப் போவதைக்கூட நிறுத்திவிட்டு, உணவு கிடைக்கும் இடம் எங்கே? என்று தேடித் தேடி அலைந்தனர். ஆனால், ஈசனடியில் நேசம் வைத்த புகழ்த்துணையார் மட்டும், பஞ்சத்தைப் பெரிதாக எண்ணாமல், எம்பெருமானை எப்பொழுதும் போல் பூசித்து வரலானார். ஒருநாள் இவ்வடியார் சிவலிங்கத்துக்குத் திருமஞ்சனம் செய்து வழிபடுகையில் உடல் தள்ளாமையினால் குடத்தைத் தவறவிட்டார். சிவலிங்கத்தின் மீது விழுந்தார். சிவலிங்கத்தின் மீது நாயனார் தலை மோதியதால் வலி தாங்காமல் மயக்கமுற்றார். எம்பெருமான் இவரது மயக்க நிலையை உறக்க நிலையாக்கினார். எம்பெருமான் நாயனாரது கனவிலே எழுந்தருளினார். பஞ்சத்தால் மக்கள் நாடு நகரம் துறந்து சென்றபோதும் நீ மட்டும் எம்மையே அணைந்து எமக்காக வழிபட்டு பணியாற்றியமைக்காக யாம் உமக்கு பஞ்சம் நீங்கும்வரை எமது பீடத்தில் உமக்காகப் படிக்காசு ஒன்றை வைத்து அருள்கின்றோம் என்று திருவாய் மலர்ந்து அருளினார் அரனார். துயிலெழுந்த தொண்டர் பீடத்திலிருந்த பொற்காசு கண்டு சிந்தை மகிழ்ந்து, சங்கரரின் சேவடியைப் பணிந்தார். முன்போல் இறைவனுக்குத் திருத்தொண்டு புரியலானார். பஞ்சம் வந்த காலத்தும் பக்தியில் நின்றும் சற்றும் வழுவாமல் வாழ்ந்த நாயனார், பல்லாண்டு காலம் பூவுலகில் வாழ்ந்து பகவானின் திருவடியைச் சேர்ந்தார்.
"சங்கரன் தன் அருளால் ஓர் துயில் வந்து தமை அடைய
அங்கணனும் களவின்கண் அருள் புரிவான் அருந்தும் உணவு
மங்கிய நாள் கழிவு அளவும் வைப்பது நித்தமும் ஒரு காசு
இங்கு உனக்கு நாம் என்ன இடர் நீங்கி எழுந்திருந்தார்"

திருச்சிற்றம்பலம்
 
---------------------------------------------------------------------------------------------------------
53:பூசலார் நாயனார்
Image may contain: 1 person
ஒழுக்கத்தால் எக்காலமும் ஓங்கி உயர்ந்த தொண்டை மண்டலத்திலே திருநின்றவூர் எனும் திருத்தலத்தில் வேதியர்கள் மரபிலே தோன்றியவர் பூசலார் நாயனார்.இவரது உள்ள உணர்வெல்லாம் கங்கையணிந்த சங்கரனின் சேவடியில் மட்டுமே பதித்திருந்தது. ஆகம வேத, சாஸ்திர நெறிகளைக் கற்றுத் தேர்ந்திருந்தார் நாயனார். பிறை அணிந்த பெருமானுக்குத் தமது ஊரில் எப்படியும் கோயில் ஒன்று கட்டவேண்டும் என்று திருவுள்ளம் கொண்டார். ஆலயம் அமைப்பதற்கான செல்வத்தை அவரால் திரட்ட முடியவில்லை. பூசலார் மனம் புண்பட்டு நைந்தார். செய்வதறியாது சித்தம் கலங்கி ஏங்கினார் நாயனார். புறத்தேதான் புற்றிடங்கொண்ட பெருமானுக்குக் கோயில் எழுப்ப இயலவில்லை; அகத்திலே, அண்ணலாருக்கு, என் மனதிற்கு ஏற்ப எவ்வளவு பெரிய கோயில் வேண்டுமானாலும் கட்டலாம் அல்லவா? என்று தமக்குள் தீர்மானித்தார். அதற்குத் தேவையான நிதி, கருங்கல், மரம், சுண்ணாம்பு முதலிய கருவி, கரணங்களை எல்லாம் மனதிலே சேர்த்துக் கொண்டார். ஒரு நல்ல நாள் பார்த்து, தனி இடத்தில் அமர்ந்து ஐம்புலங்களையும் அடக்கி ஆகம முறைப்படி மனத்திலே கோயில் கட்டத் தொடங்கினார். இரவு பகலாக கோயில் அமைப்பதையே சிந்தையாகக் கொண்டு இறைவன் கோயிலை அகத்தே இருத்தி கர்ப்பகிருஹம், ஸ்தூபி, அலங்கார மண்டபம், திருமதில்கள், திருக்குளம், திருக்கிணறு, கோபுரம் முதலிய அனைத்தும் புத்தம் புதுப் பொலிவோடு உருவாக்கினார்.

நாயனாருக்குப் புறத்தே கோயில் எழுப்புவதற்கு எத்தனை நாளாகுமோ, அத்தனை நாளானது, அகத்தே கோயில் எழுப்புவதற்கு! இதே சமயத்தில், காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த பல்லவ தேசத்து மன்னன் காஞ்சியிலே ஈசனுக்கு கற்கோயில் ஒன்று கட்டி முடித்தான். நாயனார் மானசீகமாகக் கும்பாபிஷேகம் நடத்த இருந்த அதே நன்னாளில் காஞ்சியிலும் கும்பாபிஷேகத்துக்குரிய நாள் குறித்து அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தான் மன்னன். கும்பாபிஷேகத்திற்கு முதல் நாள் இரவு எம்பெருமான் மன்னனின் கனவிலே எழுந்தருளினார். அன்பா ! திருநின்றவூரில் குடியிருக்கும் நம்முடைய அன்பனாகிய பூசலார் தமது உள்ளக் கோயிலில் கட்டி முடித்துள்ள கோயிலுக்கு நாளை கும்பாபிஷேகம். அந்த ஆலயத்துள் நாளை நாம் எழுந்தருள சித்தம் கொண்டுள்ளோம். ஆதலால் நீ வேறு ஒரு நாளில் கும்பாபிஷேகத்தை வைத்துக்கொள்வாயாக என்று மொழிந்து மறைந்தருளினார். பல்லவர் கோமான் கண் விழித்தெழுந்தான். கனவை நினைத்து வியந்தான். திருநின்றவூர் சென்று அச்சிவனடியாரைச் சந்தித்து அவரது திருக்கோயிலையும் தரிசித்து வருவது என்று ஆவல் கொண்டான் மன்னன்; அமைச்சருடனும், பரிவாரங்களுடனும் புறப்பட்டான். திருநின்றவூரை அடைந்த அரசன், பூசலார் அமைத்துள்ள திருக்கோயில் எங்குள்ளது? என்று பலரைக் கேட்டான். ஊர் முழுவதும் தேடினான். எவருக்கும் தெரியவில்லை. இறுதியில் மன்னன் அவ்வூரிலுள்ள எல்லா அந்தணர்களையும் வரவழைத்துப் பூசலாரைப் பற்றி வினவ, அவர்கள் மூலம் பூசலார் இருக்குமிடத்தைத் தெரிந்து கொண்டான் மன்னன்.

பூசலார் இருப்பிடம் நோக்கிப் புறப்பட்டான் மன்னன். பூசலாரைக் கண்டான். அவரது அடிகளைத் தொழுது எழுந்தான். அண்ணலே! எம்பெருமான் என் கனவிலே தோன்றி நீங்கள், அவருக்காக எட்டு திக்கும் வாழ்த்த, திருக்கோயில் கட்டி அமைத்துள்ளதாகவும், இன்று நீங்கள், அத்திருக்கோயிலில் ஐயனை எழுந்தருள்விக்க நன்னாள் கொண்டுள்ளதாகவும், அதனால் நான் காஞ்சியில் கட்டி முடித்த திருக்கோயில் கும்பாபிஷேகத்தை வேறு நாள் பார்த்து வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் கட்டளையிட்டு அருளினார். இவ்வெளியோன், தேவரீர் கட்டி முடித்துள்ளத் திருக்கோயிலைத் தரிசித்து வழிபட பெருமகிழ்ச்சி கொண்டு வந்துள்ளேன். தாங்கள் அமைத்துள்ள அத்திருக்கோயில் எங்குள்ளது? என்று கனிவோடு வினவிப் பணிவோடு வணங்கினான் மன்னன். மன்னன் மொழிந்ததைக் கேட்டு பூசலார் பெரம் வியப்பில் மூழ்கினார். அவர் உடல் புளகம் போர்ப்ப மன்னனிடம் காடவர் கோமானே! அடியேனையும், ஒரு பொருளாகக் கொண்டு இறைவன் இங்ஙனம் திருவாய் மலர்ந்து அருளினார் போலும் ! இவ்வூரில் அரனார்க்கு ஆலயம் அமைக்க அரும்பாடுபட்டேன். பெருமளவு பொருள் இல்லா நான், புறத்தே தான் ஆண்டவனுக்குக் கோயில் கட்ட முடியவில்லை. அகத்தேயாகிலும் கட்டுவோம் என்ற எண்ணத்தில், வேறு வழியின்றி எனது உள்ளத்திலே கோயில் கட்டினேன். இன்று அவரை இத்திருக்கோயிலில் பிரதிஷ்டையும் செய்து கும்பாபிஷேகம் புரிகிறேன் என்றார். அடியார் மொழிந்தது கேட்டு மன்னன் மருண்டான். இறைவழிபாட்டின் இன்றியமையாத சக்தியை உணர்ந்தான். உள்ளக் கோயிலில் குடியேறப் போகும் இறைவனின் அருள் நிலையை எண்ணிப் பார்த்தான். சங்கரனைச் சிந்தையில் இருத்தி, அன்பினால் எழுப்பிய உள்ளக் கோயிலுக்கு ஈடாக, பொன்னும், பொருளும் கொண்டு கட்டிய கோயில் ஒருபோதும் இணையாகாது என்பதை உணர்ந்தான். மன்னன் நினைவில் பலவாறு எண்ணி நைந்தான். திருமுடிபட பூசலார் நாயனார் திருவடிகளில் வீழ்ந்து அவரைப் போற்றிப் புகழ்ந்தான். மன்னன் பரிவாரங்களுடன் காஞ்சிக்குத் திரும்பினாள். பிறையணிந்த பெருமானார் பூசலார் எண்ணியபடியே குறித்த காலத்தில் அவரது உள்ளக் கோயிலில் எழுந்தருளினார். பூசலார் நாயனாரும் சிவபெருமானை உள்ளத்திலே நிறுவிப் பூசனை புரியத் தொடங்கினார். அன்று முதல் தினந்தோறும் முக்காலமும் ஆகம நெறிவழுவாமல் நித்திய நைமித்தியங்களைச் செய்து உள்ளக் கோயில் முக்கண்ணப் பெருமானை வழிபட்டு வந்த நாயனார், பிறவாப் பேரின்பமாகிய பெருமாளின் திருவடி நீழலையே அடைந்தார்.

அடிமுதல் உபானம் ஆதி ஆகிய படைகள் எல்லாம்
வடிவுறும் தொழில்கள் முற்ற மனத்தினால் வகுத்து மான
முடிவுறு சிகரம் தானும் முன்னிய முழத்தில் கொண்டு
நெடிது நாள் கூடக் கோயில் நிரம்பிட நினைவால் செய்தார்.

திருச்சிற்றம்பலம்
-------------------------------------------------------------------------------------------------------------------------------
54:பெருமிழலைக் குறும்ப நாயனார்
"பெருமிழலைக் குறும்பர்க்கும் அடியேன்"
No photo description available.
பெருமிழலை, பாண்‌டிய நாட்டின் ஓர் உள்நாடாக அமைந்துள்ளது. இஃது மிழலை நாட்டின் தலைநகரம். இப்பதியிலே, குறும்பர் மரபிலே அவதரித்த பெருமிழலைக்குறும்பனார் எனனும் அடியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவர் ஆண்டவனிடத்தும், அடியார்களிடத்தும் இடையறாத அன்பும், பக்தியும் கொணடிருந்தார். சிவனடி‌யார்களின் முன்பு, தம்மை மிக்க எளியோனா‌கவே எண்ணிக்‌ கொள்வார். அடியார்களை வணங்கி வரவேற்று விருந்தோம்பல் அறம் அறிந்து போற்றுவதோடு அவர்களிடும் எல்லா ஏவல்களையும் சிரமேற் கொண்டு பணிவோடு செய்தார். அதனால் இவ்வடியாரது இல்லத்தில் எப்ப‌ொழுதும் சிவ அன்பர்கள் வந்து போன வண்ணமாகவே இருப்பர். இத்திருத்தொண்டருக்கு, சுந்தரமூர்த்தி நாயனாரிடம் அளவு கடந்த பக்தி உண்டாயிற்று. இறைவன் திருநாமத்தினைப் போற்றி வந்த‌தோடல்லாமல், சுந்தரரின் புகழைப்பற்றியும் பேசி வந்தார். சுந்‌தரரின் நாமத்தை மனத்தாலும், காயங்களாலும், வாக்காலும், துதித்து வழிபட்டார். நாளடைவில் சுந்தர மூர்த்தி நாயனாரின் அன்பிற்குரிய தொண்டராகவும் மாறிவிட்டார். இறைவனின் திருவருளைப் பெற்ற சுந்தரமூர்த்தி நாயனாரின் அடிவணங்கிப் போற்றுதலால் பரமன் அருளையே பெறலாம் என்ற உறுதி வழியே வாழ்ந்த இப்பெரியார் உபாசனையைத் தொடங்கினார். உபாசனையின் சக்தியால் குறும்பனாருக்கு அஷ்டமாசித்திகளும் கைக்கு வந்தன.

சித்தத்தால் எதையும் உணரும் அரும்பெரும் சக்தியைப் பெற்றார். சுந்தரமூர்த்தி சுவாமிகளைச் சித்தத்தால் கண்டு களித்து பெருமகிழ்ச்சி கொண்டார். இவ்வாறு சுந்தரரைத்தியானம் செய்து வந்த பெருமிழலைக் குறும்பனார், சுந்தரமூர்த்தி சுவாமிகள் கொடுங்கோளூரில் இருந்தபடியே வெள்ளானை மீதமர்ந்த கயிலைமலை போகிறார் என்ற நிலையைத் தம் சித்தத்தின் மகிமையால் தெரிந்து கொண்டார். அவர் மனம் துடித்தது. மேற்கொண்டு உலகில் வாழ அவர் விரும்பவில்லை. கண்ணில் கருவிழி போன்ற சிறந்த சிவத்தொண்டரை விட்டுப் பிரிந்து நான் மட்டும் இந்த மண்ணில் உயிர் வாழ்வதா? அத்தொண்டர் திருக்கயிலைமலையை அடையும் முன்பே ‌யாம் எம் யோக நெறியால் கைலாயம் சென்றே தீருவோம் என்று தமக்குள் உறுதி பூண்டார். எம்பெருமான் திருவடியை அடையத் துணிந்தார். சுந்தரமூர்த்தி நாயனார் மீது தாம் கொண்டுள்ள பக்தியின் வன்மையால் தமது சித்த‌யோக முயற்சியினால் சுந்தரர் கயிலை செல்வதற்கு முதல் நாளே தம் உயிரை, ச‌டலத்தை விட்டு நீங்கும் வண்ணம் செய்தார். கயிலையை அடைந்து அரனார் அடிமலர் நீழலில் வைகினார்.

"நாலு கரணங்களும் ஒன்றாய் நல்ல அறிவு மேல் கொண்டு
காலும் பிரம நாடி வழிக் கருத்துச் செலுத்தக் கபால நடு
ஏலவே முன் பயின்ற நெறி எடுத்த மறை மூலம் திறப்ப
மூல முதல்வர் திருப் பாதம் அணைவார் கயிலை முன் அடைந்தார்"

திருச்சிற்றம்பலம்
---------------------------------------------------------------------------------
55:மங்கையர்க்கரசியார் நாயனார்
“வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்”
No photo description available.
மங்கையற்கரசியார் சோழமன்னனின் தவக்கொழுந்தாய் அவதரித்தார். அவர் சைவ ஒழுக்கத்தில் சிறந்தவராய் வளர்ந்து திருமணப் பருவம் அடைந்தார். சோழமன்னன் அவரை நின்றசீர்நெடுமாறன் என்னும் பாண்டிய மன்னனுக்கு திருமணஞ் செய்து வைத்தார்.
பாண்டிய மன்னன் தாம் செய்த தீவினைப் பயனாய் சமணசமயத்தைச் சார்ந்து ஒழுகினான். சமண அடிகள்மாரை அவன் பெரிதும் மதித்தான். குடிகளெல்லாரும் சமணராயினர். அரசவையில் குலச்சிறையார் என்னும் ஓரமைச்சர் தவிர மற்றையயோரெல்லாம் சமண சயத்தவராகவே இருந்தனர். இவ்வண்ணம் சமண இருள் சூழ்ந்து சைவம் குன்றியிருந்தமை குறித்து மங்கையர்க்கரசியார் மனம் நொந்தார். அவர் பாண்டி நாடெங்கும் சைவ வாய்மை விளங்க வேண்டுமென்ற கருத்தினராய் இருந்தார்.
இவ்வாறிருக்கும் பொழுது திருஞானசம்பந்தப்பிள்ளையார், பாண்டி நாட்டுக்கு அணித்தாகத் திருமறைக்காட்டில் வந்திருப்பதாகக் கேள்விப்பட்டார். இந்நற்செய்தியைக் கேள்விப்பட்டதும் தன் மனக்கருத்து நிறைவுள்ளது எனக் களிப்புற்றார். சம்பந்தப்பிளையார் தொலைவில் இருந்தாலும் அவர் தம் திருவடியைக் கும்பிட்டதோர் மகிழ்ச்சி கொண்டார்.
அமைச்சரான குலச்சிறையாரோடு ஆலோசித்து சம்பந்தப்பெருமானிடம் பரிசனத்தாரை அனுப்பிவைத்தார். பரிசனத்தார் சென்று பரசமயக்கோளரியாரை வணங்கி மங்கையற்கரசியாரின் மனக்கருத்தைக் கூறினார்கள். சம்பந்தப்பிள்ளையாரும் பாண்டிநாட்டுக்கு எழுந்தருளத் திருவுளம் பற்றினார். சம்பந்தப்பிள்ளையார் பல திருப்பதிகங்களையும் வணங்கி மதுரையம்பதியை நெருங்கிய வேளையில் மங்கையற்கரசியாருக்கு நன்நிமித்தங்கள் தோன்றின. அப்போது திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள் முத்துச் சிவிகை மீதமர்ந்து சிவனடியார் சூழ மதுரை வந்தணைந்தனர் என்ற செய்தியைக் கண்டோர் வந்து கூறினர். அந்த மங்கலகரமான செய்தியைச் சொன்னோர்க்கு மங்கையற்கரசியார் பரிசில் அளித்து மகிழ்ந்தார். அவ்வேளையில் குலச்சிறையாரும் வந்து அடிபணிந்து நின்றார். அவரிடம் ‘நமக்கு வாழ்வளிக்க வந்தவள்ளலை எதிர்கொண்டு அழைத்துவாரும்’ எனப் பணித்தார். தாமும் ஆலவாய் அண்ணலை வழிபட்டு வருவதாக அரசனிடம் கூறிச் சென்று நல்வரவளிப்பதற்காகக் காத்து நின்றார்.
ஆலவாயமர்ந்தபிரானை வணங்கும் அன்புறு காதலுடன் வருகின்ற சம்பந்தப்பிள்ளையாருக்கு எதிர்செல்லாது மங்கையற்கரசியார் ஒரு புறம் ஒதுங்கி நின்றார். வழிபட்டுத் திருப்பதிகமும் பாடிப் பரவி கோயில் முன்றில் வந்தபோது தலைமிசைச் குவித்தகையராய் முன்சென்றார். பிள்ளையாரது அருகில் நின்ற குலச்சிறையார் முன்வருமிவரே பாண்டிமாதேவியாரெனக் காட்டியதும் பிள்ளையார் விரைவோடும் அரசியார் பக்கமாகச் சென்றார். தேவியார், சிவக்கன்றின் செங்கமலப் பொற்பாத்தை வீழ்ந்து வணங்கினார். வீழ்ந்து கும்பிட்டுக் கிடக்கும் மங்கையர்க்கரசியார்ப் பிள்ளையார் பெருகிய அருளோடு கைகளால் எடுத்தார். எழுந்து கையாரத்தொழுது நின்ற அரசியார் கண்ணீர் மல்க “யானும் என்பதியும் செய்த தவம் என்கொல்” (அதாவது நானும் என்கணவரும் செய்த தவம் எவ்வளவு பெரியது) எனவாய் குழறிக் கூறிநின்றார். பிள்ளையாரும் “பரசமயச் சூழலில் தொண்டராய் வாழும் உங்களைக் காண வந்தோம்” என அருள் மொழி கூறினார்.
பிள்ளையார் அருள் பெற்றுப் பாண்டி நாடு உய்ந்ததென்ற உறுதியோடு அரசியார் அரண்மனை புகுந்தார். அன்று பள்ளியறைக்கு வந்த மன்னன் யாதும் பேசாமல் சோகமாயிருந்தான். அரசியார் “மன்ன! உமக்கு நேர்ந்ததென்ன?. துயரத்துடன் இருக்கிறீரே என விசாரித்தார். அதற்கு அரசன் “சோழ நாட்டுச் சிவவேதியர் ஒருவர் நமது அடிகள்மாரை வாதினில் வெல்ல வந்திருக்கின்றார். அவரை அடிகள் மார் ‘கண்டு முட்டு’ (அதாவது கண்டதால் துடக்கு) யான் அதனை ‘கேட்டு முட்டு’ (அதாவது கேட்டதால் துடக்கு) எனக் கூறினான். ‘வாதினில் வென்றவர் பக்கம் சேர்தலே முறை. அதன் பொருட்டுக் கவலை ஏன்?. கவலை ஒழிக’ என ஆறியிருக்கச் செய்தார் அரசியார். அரசனுக்கு ஆறுதல் கூறினாரேனும் அன்றிரவு கவலையுடனேயே இருந்தார். வஞ்சனையால் வெல்ல அமணரால் சம்பந்தப்பிள்ளையாருக்கு என்ன ஆபத்து நேருமோ எனபதே அவர்தம் கவலை. அவ்வாறு ஆபத்தேதும் நேரின் உயிர் துறப்பதே செய்யத்தக்கது எனும் உறுதியும் பூண்டார்.
அரசியார் அஞ்சியவண்ணமே அன்று இரவு அமண்தீயர் ஆளுடைய பிள்ளையார் உறைந்த (தங்கியிருந்த) மடத்துக்குத் தீவைத்தனர். இச்செய்தி மானியாருக்கு எட்டியபொழுது பெரிதும் மனம் வருந்தினார். தாமும் குலச்சிறையாரும் பிள்ளையாரை இத்தீயர் வாழும் நாட்டுக்கு வரவழைத்ததே பெரிதும் பிழையாயிற்று என்றும் இதற்குக் கழுவாய் மாழ்வதே எனவும் துணிந்தார். அப்பொழுது அமண்பாதகர் வைத்த தீயால் திருமடத்திற்குத் தீதொன்றும் ஆகவில்லை என்றறிந்து ஆறுதலுற்றார். இந்நிலையிலே மன்னன் வெப்புநோய் பற்றி பற்றி வருத்தும் செய்தியைக் காவலாளர் வந்து கூறினர். அதுகேட்ட அரசியார் விரைந்து அரசனிடம் சென்றார். மருத்துவராலும் அமண் அடிகளின் மந்திரத்தாலும் வெப்பம் சிறிதும் தணியாது அரசன் வருந்துவது கண்டு அச்சமுற்றார். பிள்ளையார் பொருட்டு வைத்த தீயே இவ்வண்ணம் வெப்புநோயாக வருத்துகிறதென எண்ணியவராய் “திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகளை அழைத்தாலே இந்நோய் தீரும்” எனக் கூறினார். “ஞானசம்பந்தன்” எனும் நாமமந்திரம் காதிற்புக்க அளவில் அயர்வு நீங்கி உணர்வு பெற்ற பாண்டியன் ‘அவரை அழைப்பீராக’ எனப் பணித்தான்.
அரசியார் அமைச்சருடன் அணையுடைத்துப் பாயும் வெள்ளம் போன்றதோர் அன்பு பெருவெள்ளத்துடன் ஆளுடையபிள்ளையார் தங்கியிருக்கும் திருமடத்தை அடைந்தார். அங்கு ஞானத்திருவுருவாயும், வேதகாவலராகவும், மண்ணில் வளரும் மதிக்கொழுந்தாகவும், சிவபெருமானது சீர் பாடும் ஏழிசை அமுதமாயும் தோன்றிய சிவபுரப்பிள்ளையைக் கண்களிப்பக் கண்டார். இச்சிவம்பெருக்கும் பிள்ளைக்கு அமணர் செய்த ஆபத்தை நினைத்துச் சலிப்படைந்தவராய் அடிகளில் வீழ்ந்து அழுது அரற்றினார். பிள்ளையார் ‘தீங்குளவோ?’ என வினவினார். அரசியார் ‘சமணர் செய்த தீச்செயல் அரசனுக்குத் தீப்பிணியாய் பற்றியது. இத்தீப்பிணியைத் தீர்த்து எமதுயிரும் மன்னவனுயிரும் காத்தருள வேண்டும்’ எனப் பணித்தார். ஆளுடைய பிள்ளையார் ‘ஒன்றும் நீர் அஞ்ச வேண்டாம், அமணரை வாதில் வென்று அரசனைத் திருநீறு அணிவிப்பேன்’ என உறுதி மொழி கூறினார்.
சம்பந்தப்பிள்ளையார் முத்துச்சிவிகையிலேறி அரண்மனைக்கு எழுந்தருள மங்கையற்கரசியாரும் சிவிகையிலேறி அரண்மனை வந்தார். பாண்டியமன்னன் சம்பந்தப்பிள்ளையாருக்குத் தனது தலைப்புறமாக ஓர் பொன்னாசனம் காட்டினான். செம்பொற்பீடத்தே வீற்றிருக்கும் சம்பந்தரைப் கண்டு பொறாத சமணர்கள் கோலும் நூலும் கொண்டு குரைத்தனர். அநேகராய் பிள்ளையாரைச் சூழ்ந்து பதறிக் கதறும் கொடுமை கண்டு மங்கையற்கரசியார் அரசனிடம் “இப்பாலன் வாயொரு பாலகரை அமணர்கள் திரளாகச் சூழ்ந்து கதறுவது அழகன்று; உங்கள் தீப்பிணியைப் பிள்ளையார் தீர்த்த பிறகு சமணர் வல்லமையுடையவராயின் வாது செய்யலாம்” எனக் கூறினர். அரசன் அதுவே நன்றென்று அமணரை நோக்கி “நீங்கள் செய்யத்தக்க வாது என் சுரநோயைத் தீர்த்தலே. அதனைச் செய்யுங்கள்” எனக் கூறினான். சமணரது மருந்து மந்திரமெல்லாம் மேலும் சுரத்தை அதிகரிக்கவே செய்தன. சம்பந்தப்பிள்ளையார் திருநீற்றுப்பதிகம் பாடிப் பூசிய திருநீறு மன்னனைக் குணமாக்கியது. அமணர்கள் இவ்வாதத்தில் தோற்றதுடன் அனல்வாதம், புனல்வாதம் என்பவற்றிலும் தோற்றுக் கழுவேறினர். பாண்டிய மன்னனுக்குப் பரமசமய கோளரியார் திருநீறு அளித்தார். அதுகண்டு மதுரை மாநகரத்துள்ளோரெல்லாம் மங்கல நீறணந்து சைவராயினர். தம்மனக்கருத்து முற்றிய மங்கையற்கரசியார், சம்பந்தப் பெருமான், பாண்டியமன்னன் ஆதியாரோடு அங்கயற்கண்ணி தன்னோடுமமர்ந்த ஆலவாயண்ணலை வழிபட்டு மகிழ்ந்தனர்.
சம்பந்தப்பிள்ளையார் ஆலவாய்ப் பெருமானை வழிபட்டிருந்த நாளெலாம் மங்கையற்கரசியாரும் சென்று அவர்தம் திருவடிகளை வழிபடும் பாக்கியம் பெற்றார். சம்பந்தப் பிள்ளையார் தென்தமிழ் நாட்டுத் திருத்தலங்கள் பலவற்றையும் வழிபடும் ஆராக்காதலால் புறப்பட்ட பொழுது பாண்டிமாதேவியாரும், மன்னன், மந்திரியார் ஆகியோரும் அவருடன் சேர்ந்து சென்றனர். திருப்பரங்குன்றம் ஆகிய தலங்களை வழிபட்டுக் குலச்சிறையார் அவதரித்த தலமாகிய திருமணமேற்குடியைச் சென்றடைந்தனர். அத்தலத்தை வழிபட்ட பின் சம்பந்தப்பெருமான் சோழநாட்டுத்தலங்களை வழிபடப் புறப்பட்டார். மங்கையற்கரசியாரும் அவருடன் சேர்ந்தோரும் பிள்ளையாருடன் செல்ல ஒருப்பட்டனர். பிள்ளையார் அவர் தம் பேரன்பிற்கு உவப்புற்றனரெனினும் அவர்களது கடமையினை வற்புறுத்தும் முறையில் “நீங்கள் பாண்டிநாட்டிலிருந்து சிவநெறியைப் போற்றுவீராக” எனப் பணித்தருளினார். அவர்களும் ஆளுடையபிள்ளையின் ஆணையை மறுத்தற்கஞ்சி தொழுது நின்றனர். பிள்ளையார் விடையீந்து சோழநாடு சென்றதும் மதுரை வந்து சிவநெறியைப் போற்றி இருந்தனர்.
திருநாவுக்கரசு சுவாமிகள் திருவாலவாயிறைவரைத் தரிசித்திருந்த காலத்தில் தாமும் தம் பதியாரோடு சென்று அவர் திருப்பாதத்தைப் பணியும் பாக்கியம் பெற்றார். மன்னனுக்கு நெடுங்காலம் சைவவழித்துணையாயிருந்த மங்கையற்கரசியார் மன்னவனோடு ஈசன் இணையடி அடைந்தார்.

திருச்சிற்றம்பலம்
------------------------------------------------------------------------------------------------------
56:மானக்கஞ்சாற நாயனார்
No photo description available.
கஞ்சாறு என்னும் நகரம் சோழ நாட்டிலுள்ளது.கொம்புத் தேனின் சாறும், கரும்பின் சாறும் நிறைந்து இருந்தமையால் இத்தலத்திற்கு இப்பெயர் ஏற்பட்டது.இத்தகைய வளமிகு பதியிலே, மானக்கஞ்சாறர் என்னும் சிவனடியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவரை மானகாந்தன் என்றும் அழைப்பர். இவரது மனைவியாரின் பெயர் கல்யாண சுந்தரி என்பதாகும்.அரசர்க்குச் சேனாதிபதியாக இருந்துவரும் வேளாண்மரபிலே அவதரித்த இவரிடம் சிவபக்தி நிறைந்திருந்தது. சிவனடியார்களை வழிபடுவதையே தம் வாழ்வின் முழுப்பயன் என்று எண்ணிய இத்தொண்டர் முக்காலமும் சிவனடியார்களைப் பற்றிய சிந்தனையிலே வாழ்ந்து வந்தார்.இறைவனின் திருவடிக் கமலத்திற்கு மனத்திலே திருக்கோயில் அமைத்து வழிபட்டு வந்தார். இவரிடம் வேண்டிய அளவிற்குச் செல்வ வளமும், சொல்வளமும், நிலவளமும் நிறைந்திருந்தன.எல்லாப் பேறுகளையும் பெற்றும் மக்கட்பேறு ஒன்று மட்டும் இல்லாமல் போனது மானக்கஞ்சாறருக்கும் அவர் மனைவியாருக்கும் அளவு கடந்த வேதனையைக் கொடுத்தது. இருவரும் எந்நேரமும் இறைவனின் திருவருளையே எண்ணி மழலைச் செல்வத்தை தந்தருள வேண்டி நின்றனர். பல விரதங்களை மேற்கொண்டனர். எம்பெருமானின் திருவருளால் மானக்கஞ்சாறர் மனைவியாருக்குப் பெண் குழந்தையொன்று பிறந்தது. காலம் வளர்ந்தது. அந்த பசுங்கொடியும் வளர்ந்தது. கொடிப் படரப் பந்தல் என்பது போல் பெண் வாழ மணப்பந்தல்தானே முக்கியம் ? மானக் கஞ்சாறர் தம் மகளைப் பருவம் வந்ததும் தக்க இடத்தில் மணம் முடித்து மகிழ வேண்டும் என்று விரும்பினார். சிவபெருமானிடத்து அன்புடையவராகி ஏயர்கோன் கலிக்காம நாயனார் என்பவர் மானக்கஞ்சாறருடைய மகளின் அழகையும், அறிவையும், அவர்கள் குலப் பெருமையையும் கேள்வியுற்று முதியவர்களை அனுப்பித் தமக்கு அப்பெண்ணை மணம் பேசுமாறு செய்தார். முதியோர்கள் மானக்கஞ்சாறரைச் சந்தித்துத் திருமணப் பேச்சு நடத்தினர். மானக் கஞ்சாறர் முழுமனதுடன் தமது மகளை கலிகாமருக்கு மணமுடிக்கப் பூரணமாக ஒப்புக் கொண்டார்.

ஆண் வீட்டாரும் பெண் வீட்டாரும் கலந்து ஆலோசித்து விரைவிலேயே திருமணத்திற்கு நந்நாளும் குறித்தனர். மணமகள் மாளிகையிலேயே திருமணத்தை நடத்துவதாகத் தீர்மானம் செய்யப்பட்டது.திருமணத்திற்கு முதல் நாள் கலிக்காம நாயனார் உறவினர்களுடன் புடைசூழ வெண்புரவிமீது அமர்ந்து மணமுரசுகள் முழுங்கப் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். இவர் கஞ்சாறுருக்கு சமீபத்தில் ஓரிடத்தில் வந்து தங்கினார். திருமண நாளன்று எம்பெருமான் அந்தணர் கோலம் அணிந்து மானக்கஞ்சாறர் மனைக்கு எழுந்தருளினார்.கங்கை அணிந்த திருச்சடையிலே உருத்திராட்ச மாலையை சுற்றியிருந்தார். குண்டலம் இரண்டும் காதுகளிலே ஒளிர, திருத்தாழ்வடம் திருமார்பிலே பிரகாசிக்க பட்டிகையும், கருநிறம் பொருந்திய மயிர்வடப் பூணூலும், திருநீற்றுப் பையும், தோளிலே அணிந்திருக்க, நெற்றியும், திருமேனியும், திருநீற்றினைப் பெற்றிருக்க அரனார் அந்தணர் கோலத்திற்கு ஏற்பத் தம் வடிவத்தை கொண்டிருந்தார். இத்தகைய சூரியகோடிப் பிரகாசத்தோடு எம்பெருமான் மானக் கஞ்சாறர் மனையை அடைந்தார். சிவனடியார் தம் மனை நோக்கி மகளின் மணநாள் அன்று எழுந்தருள்வது கண்டு மகிழ்ச்சி பொங்க வரவேற்றார் அடியார். அவர் தம் பொற்பாதங்களில் விழுந்து வணங்கி எழுந்தார். தேவரீர் ! எழுந்தருள இங்கு யாம் என்ன தவம் செய்தோமோ ? என்று முகமன் கூறினார். வலம் வந்து வணங்கினார் மானக் கஞ்சாறர். தோரணம் தொங்கும் பந்தலிலே மங்கள இசை ஒலித்துக் கொண்டிருந்தது. அதுகண்டு அரனார் ஒன்றுமறியாதவர் போல, இங்கு ஏதாவது மங்கள காரியம் இன்று நடக்க இருக்கிறதோ ? என்று கேட்டார். ஆம், ஐயனே ! இந்த அடியேனின் மகளுக்குத் திருமணம் என்று கூறி மீண்டும் அடியாரை வணங்கிய திருத்தொண்டர் அகத்துள் சென்று திருமணக் கோலத்திலிருக்கும் தம் மகளை அழைத்து வந்தார்.மணப்பெண்ணும் மாத் தவசியின் காலில் விழுந்து வணங்கினாள். மங்களம் உண்டாகட்டும் என்று மணப்பெண்ணை மனங்குளிர வாழ்த்தினார் பெருமான் ! சிவனாரின் அருட்கண்கள் மணப்பெண்ணின் சுருளேறிய நெடுங்கூந்தலை நோக்கின. கார் போல் கறுத்து நாற்றுப்போல் அடர்ந்து ஆலம் விழுதுபோல் நீண்டிருந்த கூந்தலைப் பார்த்த பரமன், இவளுடைய கூந்தல் கிடைத்தால் எம்முடைய பஞ்சவடிக்கு உதவும்போல் இருக்கிறதே என்றார்,

பஞ்சவடி என்பது தவசிகள் மார்பில் அணியும் பொருட்டு முடியினால் அகலமாக பின்னப்பட்டிருக்கும் பூணூலில் ஒரு வகை. (பஞ்சம் - விரிவு; வரி - வடம்).இவ்வாறு விமலர் தம் விருப்பத்தைத் திருவாய் மலர்ந்து மொழிந்ததுதான் தாமதம், மானக்கஞ்சாறர் சற்றும் சினம் கொள்ளவில்லை. சந்தோஷம் மிகக் கொண்டார். அகத்துள் சென்றார். கத்தியொன்றை எடுத்து வந்தார். தாம் செய்யப்போவது அமங்கலமான செயல் என்று கூட எண்ணினாரில்லை. அடியாரின் விருப்பத்தையே பெரும் பேறாகச் சிந்தையில் எண்ணியிருந்த நாயனார் தம் மகளின் பூமலர் கொத்தணிந்திருந்த அழகிய நெடுங் கருங்கூந்தலை நொடிப் பொழுதில் அடியோடு அரிந்தார். அதனைத் தவசியின் திருக்கரத்தில் வைப்பதற்காக நிமிர்ந்து பார்த்தபோது அங்கே தவசியைக் காணோம். வானத்திலே பேரொளி திகழ பரமன் உமையாளுடன் அவ்வடியார்க்கு ஆனந்தக் காட்சி அளித்தார். அடியாரும் மனைவியும் மகளும் நிலமதில் வீழ்ந்து வணங்கி எழுந்தனர். அப்பொழுது விண்வழியே அசரீரி வாக்கு ஒலித்தது. அடியார் மீது நீவிர் காட்டும் பக்தியை உலகறியச் செய்தோம் அத்தோடு, எப்பொழுதும் எம் அருகிலேயே இருக்கும் சிவலோக பிராப்தியையும் அளித்தோம் என்று எம்பெருமான் திருவாய் மலர்ந்தார். நாயனார், உள்ளமும் உடலும் பொங்கிப் பூரித்தார். மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினார். தந்தையும், மகளும், சிவநாமத்தைச் செப்பியவாறு நிலத்தில் வீழ்ந்து பணிந்து எழுந்தனர். இதுவரை நடந்த நிகழ்ச்சிகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தோர் பெரும் வியப்பில் ஆழ்ந்தனர். இத்தருணத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்க கலிக்காமரும் திருமண இல்லத்தை வந்தடைந்தார். பெண் வீட்டார் முறையோடு மணமகனை ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இறைவன் அருள்செய்த திரு நிகழ்ச்சியை அங்குள்ளோர் மூலம் கூறக் கேட்க கலிக்காமர் பெருமகிழ்ச்சி பொங்கினார். தாம் முற்பிறப்பில் மாதவம் செய்ததால் தான் இப்பிறப்பில் இறைவனுக்குக் கூந்தலைக் கொடுத்த அறமகள் தமக்கு மனைவியாக வருகிறாள் என்று மனதிலே எண்ணிப் பெருமிதம் பூண்டார் கலிக்காமர். கூபமுகூர்த்த வேளையில் மானக்கஞ்சாறரின் மகளுக்கும், கலிக்காமருக்கும், மங்கலம் பொங்கும் மனையிலே இறைவன் திருவருளோடு திருமணம் சிறப்பாக நடந்தது. தேவ துந்துபிகள் இன்னிசை நாதம் எழுப்ப, விண்ணவர் மலர்மாரி பொழிந்தனர். மானக்கஞ்சாறரும் அவரது மனைவியாரும், மண்ணுலகில் பல்லாண்டு காலம் வாழ்ந்து, இறைவனுக்குத் திருத்தொண்டுகள் பல புரிந்து சிவலோகப் பதவியை எய்தினார்.

கஞ்சநகர் மானக்கஞ் சாற னார்சீர்க்
காதன்மகள் வதுவைமணங் காண நாதன்
வஞ்சமலி மாவிரதத் தலைவ னாகி
வந்துபுகுந் தவளளக மகிழ்ந்து நோக்கிப்
பஞ்சவடிக் காமென்ன வரிந்து நீட்டும்
பத்தரெதீர் மறைந்திறைவன் பணித்த வாக்கா
லெஞ்சலில்வண் குழல்பெற்ற பேதை மாதை
யேயர்பிராற் குதவியரு ளெய்தி னாரே.

திருச்சிற்றம்பலம்
----------------------------------------------------------------------------------------------------
57:முருக நாயனார்
No photo description available.
திருப்புகலூர் தெய்வமணம் கமழும் பழம் பெரும் திருத்தலம் ! இத்தலத்திலுள்ள சிவன் கோயிலுக்கு வர்த்தமானேச்சுரம் என்று பெயர். இத்தலத்தில், அந்தணர் குலத்தில் முருகனார் என்னும் சிவத்தொண்டர் தோன்றினார். முருகனார் இளமை முதற்கொண்டே இறைவனின் பாதகமலங்களில் மிகுந்த பற்றுடையவராய் வாழ்ந்து வந்தார் ! பேரின்ப வீட்டிற்குப் போக வேண்டிய பேறு பரமனின் திருத்தொண்டின் மூலம்தான் கிட்டும் என்ற பக்தி மார்க்கத்தை உணர்ந்திருந்தார் முருகனார். எந்நேரமும் அம்பலத்தரசரையும் அவர் தம் அடியார்களையும் போற்றி வணங்கி வந்தார் முருகனார். தேவார திருப்பதிகத்தினை ஓதுவார். ஐந்தெழுத்து மணிவாசகத்தை இடையறாது உச்சிரிப்பார். இத்தகைய சிறந்த சிவபக்தியுடைய முருக நாயனார் இறைவனுக்கு நறுமலர்களைப் பறித்து மலர்மாலை தொடுக்கும் புண்ணிய கைங்கரியத்தைச் செய்து வந்தார். முருகநாயனார் தினந்தோறும் கோழி கூவத் துயிலெழுவார். தூயநீரில் மூழ்குவார். திருவெண்ணீற்றை மேனியில் ஒளியுறப் பூசிக் கொள்வார். மலர்வனம் செல்வார். மலர்கின்ற பருவத்திலுள்ள மந்தாரம், கொன்றை, செண்பகம் முதலிய கோட்டுப் பூக்களையும், நந்தியவர்த்தம், அலரி, முல்லை, சம்பங்கி, சாதி முதலிய கொடி பூக்களையும், தாமரை, நீலோற்பவம், செங்கழுநீர் முதலிய நீர்ப்பூக்களையும் வகை வகையாகப் பிரித்தெடுத்து வெவ்வேறாகக் கூடைகளில் போட்டுக் கொள்வார்.

இவ்வாறு பறிக்கப்பட்ட வகை வகையான தூய திருநறுமலர்களைக் கொண்டு, கோவை மாலை, இண்டை மாலை, பக்தி மாலை, கொண்டை மாலை, சர மாலை, தொங்கல் மாலை என்று பல்வேறு விதமான மாலைகளாகத் தொடுப்பார். வழிபாட்டுக்கு உரிய காலத்திற்கு ஏற்ப எம்பெருமானுக்குப்ப பூமாலையாம், பாமாலை சாத்தி அர்ச்சனை புரிவார். இடைவிடாமல் இறைவனுடைய பஞ்சாட்சர மந்திரத்தை ஓதிக்கொண்டேயிருப்பார். அரனாரிடம் அளவற்ற பக்தி பூண்டுள்ள முருகநாயனார் சிவன் அடியார்களுக்காகச் சிறந்த மடம் ஒன்றைக் கட்டுவித்தார். முருகநாயனாரின் திருமடத்திற்கு திருஞான சம்பந்தர், அப்பர் சுவாமிகள், சிறுத்தொண்டர், திருநீலநக்கர் போன்ற சைவ சண்மார்க்கத் தொண்டர்கள் எழுந்தருளியுள்ளார்கள். அவர்கள் முருகநாயனாரின் அன்பிற்கினிய நண்பர்களாகவும் மாறினர். இறுதியில் திருநெல்லூரில் நடந்த திருஞானசம்பந்தரின் பெருமணத்திலே கலந்துகொள்ளச் சென்ற முருக நாயனார், இறைவன் அருளிய பேரொளியிலே திருஞான சம்பந்தர் புகுந்தபோது தாமும் புகுந்தார். என்றும் நிலையான சிவானந்தப் பேரின்ப வாழ்வைப் பெற்றார். இறைவனின் திருவடி நிழலை அடைந்தார்.

மன்னுதிருப் புகலூர்வாழ் முருகனாரா
மறையவர்கோ வர்த்தமா னீச்ச ரத்தார்
சென்னியினுக் கழகமரு மலர்கள் கொய்து
திருமாலை புகழ்மாலை திகழச் சாத்திக்
கன்னிமதிற் கழுமலநா டுடைய நாத
காதன்மிகு மணங்காணுங் களிப்பினாலே
யின்னல்கெட வுடன்சேவித் தருளான் மீளா
திலங்கு பெரு மணத்தரனை யெய்தி னாரே.

திருச்சிற்றம்பலம்
 ------------------------------------------------------------------------------------------------------------
58:முனையடுவார் நாயனார்
"அறைகொண்டவேல் நம்பி முனையடுவார்க் கடியேன்”
Image may contain: drawing
சோழவள நாட்டில் உள்ள சிவத்தலங்களில் ஒன்றான திருநீடுர் பதியில் வீர வேளாளர் குடியிலே முனையடுவார் நாயனார் வாழ்ந்து வந்தார். இவர் போர் வீரர்களுக்குத் தலைவராக இருந்து வந்தார். இவர், தம்மோடு வீரமிக்க வேறு சில வீரர்களையும் சேர்த்துக்கொண்டு வீர அணி ஒன்றை அமைத்து வைத்துக்கொண்டு இருந்தார். தங்களை நாடி வரும் மன்னருக்கு உதவியாக களம் சென்று அம்மன்னர்க்கு வெற்றியைத் தேடித் தருவார். இஃது ஒரு பழங்கால வழக்கம். இவ்வழக்கத்தையே தமது தொழிலாலக் கொண்டு, வாழ்ந்து வந்த முனையடுவார் தமக்கு கிட்டிய ஊதியத்தைச் சிவன் கோயில் திருப்பணிக்கும், சிவனடியார்கள் திருத்தொண்டிற்கும் பயன்படுத்தினார். திருநீடுர்ப்பெருமான் பேரருளால் பொன்னும் பொருளும் புகழும் சேர்ந்தது. அத்தனையும் ஆண்டவனுக்கும் அடியவர்க்கும் செலவிட்டார். உலகில் பல்லாண்டு காலம் சிவத்தொண்டு புரிந்து வாழ்ந்தார்.

"பொன்னிவளந் தருநாட்டுப் புகழு நீடூர்ப்
பொருவிறிரு மலிவேளாண் டொன்மை மிக்கார்
முன்னியவர் முனையடுவா ரிகலார் போரின்
முரணழிவார் தமக்காக மொழிந்த கூலி
மன்னுநிதி கொண்டுசயங் கொடுத்து வந்த
வளர்பொருளா லிறைவனடி வழுவா வன்பர்க்
கன்னமவர் நசையின்மிக மிசைய நல்கு
மன்பர்துன்ப மவையாவு மகன்று ளாரே"

ஆன்மாவுக்குஞ் சிவனுக்கு மிடையில் அநாதியாகவே இருந்துவரும் அந்தரங்கத் தொடர்பின் அடிப்படையில் அநாதியான ஆண்டானடிமைத்திறம் ஒன்று இருந்துகொண்டிருத்தல், "என்றுநீ அன்றுநா னுனதடிமை யல்லவோ" எனத் தாயுமானவர் பாடலினும், "அத்தா உனக்காளாயினி அல்லேனெனலாமே" எனத் தேவாரத்தினும் "என்தாயோ டென்னப்பன் ஏழேழ் பிறவியும் அன்றே சிவனுக்கெழுதிய ஆவணம் ஒன்றாயுலகம் படைத்தான் எழுதினான் நின்றான் கடல்வண்ணன் நேரெழுத்தாயே" எனத் திருமந்திரத்தினும் "பாய ஆருயிர் முழுவதும் பராபரனடிமை" எனத் தணிகைப் புராணத்தினும் வருவனவற்றாற் பெறப்படும். ஆன்மா ஒவ்வொன்றுக்கும் அதனதன் மலபரிபாக நிலையை யொட்டி இந்த ஆண்டானடிமைத் திறம் எவ்வெப்போதிற் புலப்பட வருமோ அவ்வப்போதிலிருந்து மென்மேல் விருத்தியுற்று வந்து காலகதியில் அது முதிர்ச்சியுறும் நிலை நேர்கையில் சம்பந்தப்பட்ட ஆன்மா தொண்டுரிமையில் உள்ளதாகி மேல்வரும் பிறப்பொன்றில் அவ்வுரிமையோடே பிறந்து அதன் பலப் பேறடையும் என்பது திருத்தொண்டர் புராணத்து நாயன்மார் மேற்கொள்ளுந் தொண்டுகளின் அசாதாரணத் தன்மைகளும் அவற்றின் விளைவுகளும் இருந்தவாற்றால் உய்த்துணர்ந்து கொள்ளப்படும். அங்ஙனம் தொண்டுரிமையில் உள்ளதாக ஒரு ஆன்மா ஜனித்திருக்கையில், கன்மாநுசாரமாக அதற்கு வாய்க்குந் தொழில் துறைச் சூழ்நிலை எத்தகையதாயினும் அது அதன் தொண்டுக்குப் பாதகமாதற் கேதுவில்லை யென்பது முன், அதிபத்த நாயனார் புராண சூசனத்திற் கண்டவாற்றானமையும்.

முனையடுவார் நாயனார் இவ்வகைத் தொண்டுரிமையில் உள்ளவராகவே பிறந்து தம் கன்மாநுசாரமாக அமைந்த, கூலிக்குப் போரிடுந் தொழிலாற் பெறும் வருமானங் கொண்டே சிவனடியார்க்கு வேண்டுவன அளித்தலும் மகேசுர பூசை செய்தலுமாகிய திருத்தொண்டாற்றி முடிவிற் சிவலோகத்தமர்ந்து பிரியா உரிமைநிலை பெற்றருளினார். அது அவர் புராணத்தில், "விளங்கும் வன்மை மிக்குள்ள வேளாண் தலைமைக் குடிமுதல்வர் களங்கொள் மிடற்றுக் கண்ணுதலார் கழலிற் செறிந்த காதல் மிகும் உளங்கொள் திருத்தொண் டுரிமையினி லுள்ளார் நள்ளார் முனையெறிந்த வளங்கொடிறைவரடி யார்க்கு மாறா தளிக்கும் வாய்மையார்" - "மற்றிந்நிலைமை பன்னெடுநாள் வையநிகழச் செய்துவழி உற்ற அன்பின் செந்நெறியா லுமையாள் கணவன் திருவருளால் பெற்ற சிவலோகத்தமர்ந்து பிரியா உரிமை மருவினார் முற்ற உழந்த முனையடுவார் என்னும் நாமம்முன் னுடையார்" என வரும்.

திருச்சிற்றம்பலம்
--------------------------------------------------------------------------------------------------------------
59:மூர்க்க நாயனார்
No photo description available.
தொண்டை நாட்டிலே பாலாற்றுக்கு வடகரையில் அமைந்துள்ள சிறந்த ஊர் திருவேற்காடு! இவ்வூரில் வேளாளர் குடியில் சிவத்தொண்டர் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவர் பெயர் மூர்க்க நாயனார். இப்பெயர் இவரது குணம் பற்றி ஏற்பட்டதாகக் கருதப்படுகிறதே தவிர, இவரது இயற்பெயர் இன்னதென்று தெரியவில்லை. அறிவு தோன்றிய நாளிலிருந்தே இப்பெரியார் எம்பெருமானின் திருவடித் தாமரையைப் போற்றி வந்ததோடு திருவெண்ணீற்றினையே மெய்ப்பொருள் என்று கருத்தில் கொண்டு வாழ்ந்து வந்தார். எம்பெருமானின் திருவடியார்களுக்கு அமுதளித்து அகமகிழ்ந்த பிறகே தாம் <உண்ணும் நியதியை வழுவாது மேற்கொண்டு ஒழுகி வந்தார். இதனால் இவரது இல்லத்திற்கு வரும் சிவனடியார்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வந்தது. அதனால் இவரிடமுள்ள பொருள்கள் யாவும் செலவழிந்தன. வறுமை ஏற்பட்டது. எவ்வளவு தான் வறுமை மலைபோல் வளர்ந்த போதும் நாயனார் தமது குறிக்கோளில் நின்று சற்றும் பிறழாமல் வாழ்ந்து வந்தார். பொருள்களை விற்று, விருந்தினர்களைப் பேணி வந்த தொண்டர், இறுதியில் விற்று பணமாக்குவதற்குக்கூட பொருள் இல்லாத கொடிய நிலையை அடைந்தார். இந்த நிலையில் நாயனாருக்கு ஒரு நல்ல யோசனை தோன்றியது. இவர் தமது இளமைப் பருவத்தில் சூதாடுவதற்குக் கற்றிருந்தார். இப்பொழுது பொருள் சேர்க்க அச்சூதாட்டத்தையே ஓர் பற்றுக்கோலாகக் கொண்டார். அவ்வூரிலுள்ளாரோடு சூதாடத் தொடங்கினார்.

பலரைத் தோற்கடித்துப் பெரும் பொருள் ஈட்டினார். அவ்வாறு பெற்ற பொருளைக் கொண்டுத் திருவெண்ணீற்று அன்பர்களுக்கு எப்போதும் போல் திருத்தொண்டு புரிந்து வரலானார். நாயனார் சூதாடும்பொழுது எப்பொழுதுமே ஒரு தந்திரத்தைக் கையாள்வது வழக்கம். சூதாட ஆரம்பிக்கும் பொழுது முதல் ஆட்டத்தில் தம்முடன் ஆடும் எதிரிக்கு விட்டுக் கொடுப்பார். அதனால் முதல் ஆட்டத்தில் தமக்கு ஏற்பட்ட தோல்வியைப் பற்றிக்கூட வருத்தப்பட மாட்டார். எடுத்த எடுப்பிலேயே நாயனார் தோற்றதும் எதிரிக்கு அளவு கடந்த உற்சாகம் ஏற்படுவதோடல்லாமல், அடுத்த ஆட்டத்திலிருந்து நிரம்பப் பொருள் வைத்து ஆடவும் தோன்றும், அதன் பிறகு எதிரி எங்கு வெற்றி பெறப் போகிறான்? சூதாடும் பழக்கத்தில் ஈடுபட்ட நாயனார் சூதாட்டம் என்பதற்காகப் பொய்யாட்டம் ஆடமாட்டார். அதே சமயத்தில் தம்முடன் சூதாடுபவர்கள் எவராகிலும் பொய்யாட்டம் ஆடினால் அத்தருணத்திலேயே சற்றும்கூடச் சிந்திக்காமல் தாம் இடுப்பில் சொருகி வைத்திருக்கும் கரிகையாற் குத்திவிடுவார். ஊர் மக்கள் இவருடன் சூதாடுவதற்கு பயந்தார்கள். அதுமட்டுமல்ல இவருடன் ஆடிய அனைவருமே தோற்றுத்தான் போயினர். நாளடைவில் இவருடன் சூதாடுவதற்கு எவருமே வரவில்லை. இதனால் நாயனார் வெளியூர்களுக்குச் சென்று சூதாடிப் பொருள் பெற்றுப் பரமனுக்குப் பெருந்தொண்டாற்றி வரலானார். இவ்வாறு சூதாடிப் பொருள் நாடி பிறைசூடிப்பெருமானின் திருவடி நாடி, அவர்தம் அடியாரைக் கூடி வணங்கி வந்த மூர்க்க நாயனார் இறுதியில் எம்பெருமானின் திருவடித் தாளினைப் போற்றி வாழும் சிவபதியை அடைந்தார்.

தொண்டைவள நாட்டுவளர் வேற்காட் டூர்வாழ்
தொல்லுழவர் நற்சூதர் சூது வென்று
கொண்டபொருள் கொண்டன்பர்க்கு அமுத ளிக்குங்
கொள்கையினார் திருக்குடந்தை குறுகி யுள்ளார்
விண்டிசைவு குழறுமொழி வீணர் மாள
வெகுண்டிடலான் "மூர்க்கர்" என விளம்பும் நாமம்
எண்டிசையும் மிகவுடையார் அண்டர் போற்றும்
ஏழுலகும் உடனாளும் இயல்பி னாரே

திருச்சிற்றம்பலம்
-------------------------------------------------------------------------------------------------------------
60:மூர்த்தி நாயனார்
"மும்மையாலுல் காண்ட மூர்த்திக்கு மடியேன்"
No photo description available.
பூழியர்கோன் தென்னாடு முத்துடைத்து என்ற செம்மாப்புடைத்த செந்தமிழ் முதுமொழிக்கு ஏற்றபடி முத்தும், முத்தமிழும் தந்து முதன்மையைப் பெற்ற பழம்பெரும் பதியான பாண்டிய நாட்டின் தலைநகரம் மதுராபதி ! செந்தமிழ்க் கழகமும், சந்தனச் சோலையும் தெய்வ மணமும் கமழ்ந்தது. ஓங்கி விளங்கும் பொதியமலைத் தென்றலில் நின்று முத்தமிழ்ச் சங்கம் வளர்ந்தது. பாண்டிய நாடு, ஓங்கி உயர்ந்து நான்மாடங்களையும், கூட கோபுரங்களையும் கொண்டது. பாண்டிய நாட்டில் நிலையான செல்வமுடைய குடிகள் பல நிறைந்து வாழும் சீமையையும் சிறப்பினையையும் பெற்றிருந்தன. சோமசுந்தரக் கடவுளே சங்கப் புலவருள் ஒருவராய்த் திகழந்து, சங்கத் தமிழைத் தாலாட்டிய மதுரை மாநகர், திருமகள் குடியிருக்கும் தாமரை விதையாகவும், பாண்டிய நாடு செந்தாமரை மலராகவும் விளங்கிற்று எனலாம். எம்பெருமான் அரசோச்சி அறுபத்து நான்கு திருவிளையாடல்கள் புரிந்ததும் இம் மதுரையும் பதியிலேதானென்றால் அப்பதியின் புகழும், பெருமையும் சொல்லத்தக்கதன்றோ ! தெய்வத் திறனைப் பெற்று, மன்னும் இமய மலையினும் ஓங்கிய பெருமையை மதுரை மாநகர் பெற்று உயர்ந்ததென்றால் அஃது மிகையாகாது. இத்தகைய சீர்மிக்க பதியிலே, பரமனுக்குத் திருத்தொண்டு புரிந்துவரும் வணிகர் குலத்தில் - அக்குலம் செய்த மாதவத்தின் பயனாய் அவதரித்தவர்தான் மூர்த்தி நாயனார். பற்றற்ற எம்பெருமானின் திருவடிகளைப் பற்றி வாழ்வதே வாழ்க்கையின் பெரும் பேறாக பெற்றிருந்தார் இவர். ஆலயத்தில் தினந்தோறும் சந்தனத்தை அரைத்துக் கொடுக்கும் திருப்பணியைத் தமது கடமையாகக் கொண்டிருந்தார். வீரம் விளையாடும் பாண்டிய நாட்டிலே, கோழையொருவன் செங்கோலோச்சி வந்தான். இதுதான் சமயம் என்று பகையரசனான கர்நாடக மன்னன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து பாண்டியனை முறியடித்தான். மதுரையம்பதியைத் தனக்குத் தலைநகராகவும் கொண்டான். பகையரசன், சைவ நெறியில் செல்லாது சமண சமயத்தைச் சார்ந்தவன். சமண மதமே உய்யும் நெறிக்கு உகந்த தெய்வமதம் என்று எண்ணி அவன் சமண நெறியில் ஈடுபட்டு ஒழுகினான். சைவ அடியார்களுக்கு அடுக்கடுக்கான இடுக்கண் பல விளைவித்தான். சமணமத பிரச்சாரர்களையும், சமண குருமார்களையும் தன் நாட்டில் இருந்து வரவழைத்தான். சமணமதக் கொள்கையைப் பரப்பப் பல வழிகளைக் கையாண்டான் மன்னன். தனக்குத் தடையாக இருந்த சைவ சமயத்தவர்க்குப் பல வழிகளில் கொடுமைகள் புரிந்தான். சைவத்தை வளரவிடாமல் தடுத்தான். சைவ மதத்தினரது சிவாலயங்களுக்குத் திருப்பணிகள் நடவா வண்ணம் பல வழிகளில் துன்பத்தைக் கொடுத்தான்.

சொக்கநாதருக்குத் திருச்சந்தனம் அரைக்கும் மூர்த்தி நாயனாருக்கும் பல கொடுமைகளைப் புரியத் தொடங்கிணர் சமணர்கள். மூர்த்தி நாயனாருக்குச் சந்தனக் கட்டைகள் கிடைக்காதவாறு செய்து அவரது திருப்பணியைத் தடுக்க முயற்சித்தனர். இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் சிவனையே எண்ணிச் சிந்தை குளிர்ந்த மூர்த்தியார், இறைவனுக்குத் தாம் செய்யும் திருத் தொண்டினை மட்டும் தவறாமல் செய்து கொண்டே வந்தார். ஒரு நாள் சந்தனக் கட்டைக்காகப் பகலெல்லாம் மதுரையம்பதி முழுவதும் சுற்றி அலைந்தார். ஒரு பலனும் கிட்டவில்லை. பசியையும் பொருட்படுத்தாமல் எங்கும் தேடி இறுதியில் வேதனையோடு திருக்கோயிலுக்குள் வந்தார். சிவநாமத்தைத் துதிக்கத் தொடங்கினார். இச்சமயத்தில் தொண்டர்க்கு ஒரு எண்ணம் பிறந்தது. சந்தனக் கட்டைக்கு முட்டு வரலாம். அதனை அரைக்கும் என் முழங்கைக்குத் தட்டு வரவில்லையே. சந்தனக்கட்டை கிடைக்காவிட்டால் என்ன ? இந்தக் கட்டையின் முழங்கை இருக்கிறதே, இதையே அரைக்கலாம் என்று எண்ணினார். மகிழ்ச்சி மேலிட சந்தனக் கல்லில் தமது முழங்கையை வைத்துத் தேய்க்கத் தொடங்கினார். மனத்திலே அரனைத் தியானித்துக் கொண்டே கையை பலமாகத் தேய்த்துக் கொண்டேயிருந்தார். தோல் தேய்ந்தது. ரத்தம் பீறிட்டது ! எலும்பும் நரம்பும் நைந்து வெளிப்பட்டன. மூர்த்தி நாயனார் எதைப் பற்றியும் எண்ணாமல் வேதனையையும் பொருட்படுத்தாமல் அரைத்துக் கொண்டேயிருந்தார். ஆலவாய் அண்ணல், பக்தனின் பரம சேவையைக் கண்டு அருள் வடிவமானார். பக்திக்கு அடிமையானார். அதற்கு மேல் தொண்டரைச் சோதிக்க விரும்பவில்லை. அன்பும் பக்தியும் மேலிட எமக்குச் செய்த திருத்தொண்டு முன்போல் தடையின்றி நடைபெறும். கர்நாடக மன்னனை வென்று அரசு பெற்றுப் புகழ்பெறுவாய் ! இறுதியில் எமது திருவடி சேர்வாயாக என்று அருள்வாக்கு கூறினார். இறைவனின் திருவாக்கை கேட்டு, சித்தம் மகிழ்ந்து போன மூர்த்தி நாயனார் முழங்கையைத் தேய்ப்பதை நிறுத்தினார். குன்றாத குணக்குன்றாம், கோவாத மணியாம், மறைமுடிக்கு மணியாம், அற்புத பொன்னம்பலத்து ஆடுகின்ற அம்பலத்தரசன் அருட்கடாக்ஷத்தில் முன்போல் அவரது திருக்கரம் நன்னிலை எய்தியது. சைவத்தைத் தாழ்த்திச் சமணத்தைப் பரப்ப அரும்பாடுபட்ட கர்நாடக மன்னனின் ஆயுளும் அன்றோடு முடிவுற்றது. சமணரின் ஆதிக்கமும் அழிந்தது. முன்போல் சைவம் தழைத்தது. மன்னனுக்குச் சந்ததி இல்லாததினாலும், அரசமரபினோர் யாரும் இல்லாததினாலும், அமைச்சர்களே இருந்து மன்னனின் ஈமக் கடன்களைச் செய்து முடித்தனர். அதன் பிறகு நாட்டை ஆள்வதற்கு யாரை தேர்ந்தெடுப்பதென்று ஆலோசித்துக் கொண்டிருந்த அமைச்சர்கள், அவர்கள் மரபு வழக்கப்படி, பட்டத்து யானையைக் கண்ணைக் கட்டி அதன் துதிக்கையில் பூமாலையைக் கொடுத்து அனுப்புவது என்ற தீர்மானத்திற்கு வந்தனர். நன்னாள் பார்த்தனர்.

பொங்கி வரும் அப்பொன்னாளில் ஆலவாய் அண்ணலுக்கு ஆராதனை செய்தனர். பட்டத்து யானையை அலங்காரம் செய்து அதன் கண்களைக் கட்டிவிட்டு துதிக்கையில் பூமாலையைக் கொடுத்தனர். இம்மண்ணுலகை அறநெறியில் நிறுத்தி ஆள்வதற்கு ஏற்ற ஒரு ஏந்தலை ஏந்தி வருவாயாக என்று சொல்லி யானையை விடுத்தனர். பல இடங்களில் சுற்றித் திரிந்து, இறுதியில் திருவாலவாய்க் கோயிலை வந்து அடைந்தது பட்டத்து யானை. ஆலவாய் அப்பனை வணங்கி எழுந்து நின்ற மூர்த்தி நாயனார் கழுத்தில் பட்டத்து யானை துதிக்கையில் இருந்த மலர் மாலையைப் போட்டது. மூர்த்தி நாயானாரைத் தன் மீது ஏற்றிக் கொண்டது. மக்கள் ஆரவாரித்தனர். சங்குகள் முழுங்கின ! தாரைகள் ஒலித்தன ! பேரிகைகள் அதிர்ந்தன ! ஆலயத்து மணி ஒலித்தன ! வாழ்த்தொலி வானை முட்டியது. யானையின் கட்டப்பட்டிருந்த துணி அவிழ்க்கப்பட்டது. மூர்த்தி நாயனார் அரச மரியாதையுடன் அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அரண்மனை வாயிலை அடைந்த மூர்த்தி நாயனாரை அமைச்சர் முதலான மந்திரிப் பிரதானிகள் வாழ்த்தி வணங்கி வரவேற்று அவைக்கு அழைத்துச் சென்றனர். மூர்த்தி நாயனாருக்கு முடிசூட்டுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கின. அமைச்சர்கள் முழு மனதோடு முடிபுனையும் மங்கல விழாவில் ஈடுபட்டிருப்பதைக் கண்டு மூர்த்தி நாயனார் பெருமகிழ்ச்சி கொண்டார் என்றாலும் நாயனார் அவர்கட்கு ஒரு நிபந்தனை விதித்தார். நாட்டில் பரவியிருக்கும், சமண நெறியின் தீய சக்திகளை ஒழித்து சைவ சன்மார்க்கு நெறியை நிலைபெறச் செய்ய வேண்டும். அவ்வாறு மக்களிடம் சைவ சமயம் தழைத்த பின்னர் தான் நான் அரசு ஏற்பேன் என்றார். ஐயனே! தங்கள் ஆணை எதுவோ அதுபோலவே எல்லாம் நடக்கும். சமண மன்னன் மாண்டதோடு, சமணமும் இல்லாது போனது. அதைப்பற்றி ஐயன் அஞ்சற்க. அதுவும் இறை அருளைப் பரிபூரணமாகப் பெற்ற தங்களுக்கு எதிராக நிற்க எவரும் இரார் என்று பணிவோடு பகர்ந்தனர் அமைச்சர்கள். அவர்கள் மொழிந்ததைக் கேட்டு, நாயனார் அகமகிழ்ந்தார். அமைச்சர்கள் பொன் முடியும் மணிமாலையும், கலவைப் பூச்சும் கொண்டு வந்து, இவற்றை அணிந்து கொண்டு அரசபீடம் அமர்க என்று வேண்டிக் கொண்டனர். பொன் முடியும், மணிமாலையும், மூர்த்தி நாயனாருக்கு வெறுப்பைக் கொடுத்தன. அவர், அமைச்சர்களிடம், அமைச்சர்களே ! பொன்முடியும், மணிமாலையும், கலவைப் பூச்சும் எமக்கு எதற்கு ? யாம் அதை ஏற்றுக்கொள்வதாக இல்லை என்று கூறினார். அமைச்சர்கள் நாயனார் மொழிந்ததைக் கேட்டு மனம் உருகினர். நாயனார் தமது விருப்பதிற்கு விளக்கம் கூறினார். அமைச்சர்களே ! நான் பொன்னை அணிந்து மண்னை ஆள விரும்பவில்லை. இறைவனின் திருவடியே எனக்கு மணிமுடி. எனது சடைமுடியே எமக்குப் பொன்முடி. என் ஐயனின் உருத்திராட்ச மாலையே எனக்கு மணிமாலை. திருவெண்ணீறே எமது மேனிக்கு ஏற்ற கலவைப்பூச்சு. இவற்றை அணிந்துதான் நான் அரசு செய்வேன். மூர்த்தி நாயனார் எம்பெருமான் மீது கொண்டுள்ள பக்தியையும், நம்பிக்கையயும், அன்பையும் கண்டு அமைச்சர்களும், ஆன்றோர்களும், பெருங்குடி மக்களும், காவலர்களும் வியப்பில் மூழ்கினர். அவரைப் போற்றிப் புகழ்ந்தனர். அனைவரும், நாயனாரின விருப்பப்படியே அவருக்குத் திருமுடி புனைய இயைந்தனர். மூர்த்தி நாயனார், அரசு பெற்ற உடனேயே ஆலவாய் அழகனையும், அபிடேக வல்லியையும் தரிசிக்கத் திருக்கோயிலுக்குப் புறப்பட்டார். இறைவன் திருமுன்னால் முடிபட, அடிபணிந்து எழுந்தார். வெண் கொற்றைக் குடையின் கீழே, திருவெண்ணீரு அணிந்த மேனியோடு மூர்த்தி நாயனார், திருநீறு - கண்டிகை - சடைமுடி என்னும் மும்மையால் அறம் வழுவாது குடிகளைக் காத்தார். இவரது ஆட்சியில் சைவம் வளர்ந்தது. சமணம் தலைதாழ்ந்தது. மக்கள் வாழ்வு மலர்ந்தது. நில உலகில் நீடு புகழ் பெற்ற மூர்த்தி நாயனார், நெடுங்காலம் ஆண்டு இறைவனின் திருவடி நீழலை அடைந்தார்.

வழங்குபுகழ் மதுரைநகர் மூர்த்தி யாராம்
வணிகர்திரு வாலவாய் மன்னர் சாத்தத்
தழங்குதிர முழங்கைதரத் தேய்த்த வூறுந்
தவிர்ந்தமணர் வஞ்சனையுந் தவிர மன்ன
னிழந்தவுயி ரினனாக ஞால நல்க
வெழில்வேணி முடியாக விலங்கு வேட
முழங்குபுக ழணியாக விரைநீ றாக
மும்மையுல காண்டருளின் முன்னி னாரே

திருச்சிற்றம்பலம்
------------------------------------------------------------------------------------------------------
61:மெய்ப்பொருள் நாயனார்
“வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்”
No photo description available.
திருக்கோவிலூர் சோழவள நாட்டிற்கும், தொண்டை நாட்டிற்கும் இடையிலே அமைந்துள்ள நடு நாடு. இந்நடு நாட்டிற்குச் சேதி நாடு என்றும் மற்றொரு பெயர் உண்டு. இரு நாடுகளுக்கு நடுவிலே அமைந்திருப்பதால் நடு நாடு என்றும், சேதியர் என்ற ஒரு வகை மரபினர் வாழ்வதால் சேதி நாடு என்றும் பெயர் பெற்ற இந்நாட்டின் தலைநகரமாக அமைந்த நகரம் திருக்கோவிலூர். இஃது தென்பண்ணை ஆற்றின் தென்கரையில் சிறப்புடன் விளங்கியது. இந்நகரில் மலாடர் என்னும் மரபினோர் செங்கோலோச்சி வந்தனர். சிவநெறியில் சிறந்து நிற்போரும், அடியார்கள் கருத்தறிந்து ஏவல் புரியும் சுற்றமும் பெற்ற இம்மரபில் தான் மெய்ப்பொருள் நாயனார் தோன்றினார். அம்மன்னர் சிவனடியார்களின் திருவேடத்தையே மெய்ப்பொருள் என்று கருதி வந்ததால் மெய்ப்பொருள் நாயனார் என்னும் திருநாமத்தைப் பெற்றார். இவர் திருக்கோவிலுரைத் தமது ராஜதானியாகக் கொண்டு அறநெறி வழுவாது மக்களைக் காத்து அரசாட்சி புரிந்து வந்தார். மெய்ப்பொருளார் அரசியல் நெறி பிறழா அரும்காவலன். மக்களுக்காக, நன்னெறியில் வாழ்ந்து காட்டும் குடிமன்னன்! வாள் வலிமையும், தோள் வலிமையும் கொண்ட அஞ்சாநெஞ்சன். இம்மன்னன் அடியார்களை அல்லும் பகலும் போற்றிப் பணியும் சிவநேசச் செல்வன் ! ஞானத்தவக் கொழுந்து. இம்மன்னனின் மனதில் சிவனடியார்களின் தோற்றப் பொலிவு, கல் மேல் எழுத்துப் போல் நிலைத்திருந்தது. மன்னவரின் செல்வக் குவியல் கோவில் திருப்பணிக்கும் பயன்பட்டு வந்தது ! இவ்வாறு பண்போடும் பக்தியோடும் வாழ்ந்து வரும் புரவலனுக்கு ஓர் சோதனை ஏற்பட்டது ! இம்மன்னனின் பகை அரசனான முத்தநாதன், பன்முறை போர் புரிந்து புறமுதுகு காட்டி ஓடியவன் ! இவன் சூழ்ச்சியால் மெய்ப்பொருளாரைப் பழிவாங்க எண்ணம் கொண்டான்.

முத்தநாதன் சைவ வேடம் பூண்டான். திருநீற்றை விதிமுறைகளோடு, எந்தெந்த அங்கங்களில் எவ்வாறு பூசிக்கொள்ள வேண்டும் என்பதை அறியாத அந்நாத்திகன், திருநீற்றை மேனி முழுவதும் வாரிப் பூசிக் கொண்டான். கையிலே ஓலைக்கட்டு ஒன்றை ஏந்திக்கொண்டான். அந்த ஓலைக் கட்டுக்குள் எவரும் காண முடியாதவாறு கத்தி ஒன்றையும் மறைத்து வைத்துக் கொண்டான். இத்தகைய, போலித் தோற்றத்துடன் முத்தநாதன் திருக்கோவிலூர் நகரத்தை அடைந்தான். மன்னவனைப் போலவே, பக்தி மிகுந்த குடிமக்கள், இக் கபட வேடதாரியை, உண்மையான சைவ சன்மார்க்கத் தவசி என்று எண்ணிக் கைகூப்பி வணங்கினர். காண்போர் அனைவரும் உள்ளெழுந்தருள்க என்று வாழ்த்தி வழி காட்டியதால், தங்குதடை ஏதுமின்றி முத்தநாதன் மன்னரின் மாளிகையை அடைந்தான். பள்ளியறை வாயிலிலே மன்னவனின் மெய்க்காப்பாளன் தத்தன் என்பவன் வாளோடு நின்று கொண்டிருந்தான். முத்தநாதன், மன்னனை உடனே பார்க்க வேண்டும் ! என்ற எண்ணம் முகத்திலே பிரதிபலிக்க, தத்தனை ஏற இறங்கப் பார்த்தான், குறிப்பால் அப்பொருளை உணர்ந்த தத்தன், முத்தநாதனை நோக்கி, என் தலைவர் அகத்தே துயில்கின்றார். காலம் அறிந்து தேவரீர் உள்ளே எழுந்து அருளுதல் வேண்டும் என்றான். தத்தன் வார்த்தைகளை அம்மூடன் செவிமடுப்பதாக இல்லை. அவன் தடையையும் மீறி மன்னவர்க்குத் தருமத்தை அருளிப் போகவே இங்கு எழுந்தருளியுள்ளோம் என்று கூறியவாறே கதவைத் திறந்து கொண்டு உள்ளே புகுந்தான். மலர் மஞ்சத்திலே மன்னவன் அருகே அமர்ந்திருந்த அரசியார், சப்தம் கேட்டுத் திரும்பி, சிவனடியார் ஒருவர் வருகிறாரே என்று அஞ்சியவராய், சட்டென்று மஞ்சத்தினின்றும், துணுக்குற்று எழுந்தாள். தம் தலைவரையும் எழுப்பினாள். திடுக்கிட்டு எழுந்தார் மன்னர்.

சிவாயநம என்று குரல் கொடுத்தான் முத்தநாதன். அடியவர் குரல்கேட்டு மன்னர் அகம் மகிழ்ந்தார். திரும்பிப் பார்த்தார். தம் எதிரில் சிவனடியார் நிற்பதைக் கண்டார் ! கள்ளங்கபடமற்ற வெள்ளை உள்ளம் கொண்ட அரசர், திருநீறு அணிந்து வந்த முத்தநாதனை, முக்கண்ணன் அடியார் என்றெண்ணி, தமது முடிபட அவனது கால்களிலே விழுந்து வணங்கினார். ஐயனே தாங்கள் எழுந்தருளியது யாது கருதியோ ? என்று மலையமநாட்டு மன்னர் பணிவுடன் வினவினார். முத்தநாதன் நா கூசாமல் சிவபெருமான் பண்டைகாலத்தில் திருவாய் மலர்ந்தருளிய ஆகம நூல் ஒன்று எம்மிடம் உள்ளது. அதனை உனக்கியம்பி உமக்கு மோட்ச பதவியை அளிக்கவே யான் வந்துள்ளேன் என்று கூறியபடியே தன் கையிலிருந்த ஏட்டுச் சுவடிக்கட்டைக் காண்பித்தான். முத்தநாதனின் கபட வார்த்ததைகளை உண்மை என்று நம்பி மோசம் போன மன்னர் முகம், பகைதனை வென்ற வீரனின் முகம்போல் மலர்ந்தது. அரசியாரின் முகமும் கதிரவனைக் கண்ட கமலம் போல் பூரித்தது. அரசர், இரு கை கூப்பி வணங்கியபடியே, இம்மையில் இவ்வடியேனுக்கு இதனினும் <உயர்ந்த பேறு வேறு எதுவுமே இல்லை, தேவரீர் அம்பலவாணர் அருளிச் செய்த ஆகம நூலை வாசித்து அடியேனுக்கு அதன் பொருளையும் அருளிச் செய்தல் வேண்டும் என்று கூறினார். முத்தநாதனுக்கு உயர்ந்த ஆசனத்தை அளித்து, அரசியுடன் தாம் தரையில் அமர்ந்து கொண்டார் மன்னர். உயர்ந்த ஆசனத்தில், தாழ்ந்த உள்ளத்தோடு அமர்ந்திருந்த முத்தநாதன் வஞ்சகப் புன்னகையை உதட்டிலே நெளியவிட்ட வண்ணம், மன்னரையும், அரசியாரையும் மாறி மாறிப் பார்த்தான். எதைப்பற்றியோ சிந்திப்பவன் போல் பாசாங்கு செய்தான். முத்தநாதனின் செயலைக் குறிப்பால் உணர்ந்த மெய்ப்பொருளார், தேவரீர் ! யாது சொல்லத் தயங்குகிறீர் ! என்று கேட்டார் மன்னர் !

பக்தா ! இவ்வாகம நூலைப் போதிக்கும் போது, மலர் மாலை சூடிய கூந்தலையுடைய தங்கள் அரசியார் பக்கத்தில் இருக்கக்கூடாது. இதை நான் சொல்லவில்லை. ஆகம நெறிதான் இவ்வாறு எடுத்து இயம்புகிறது. என்று முத்தநாதன் சொன்னான். உடனே மன்னர். திருமகளைப் போல் அருகே நின்று கொண்டிருந்த அரசியாரைப் பார்த்தார். கணவரின் கட்டளையைக் குறிப்பால் உணர்ந்து கொண்ட கற்புடைச் செல்வியான அரசியார், அரசரையும், முத்தநாதனையும் தொழுதுவிட்டு, அந்தப்புரம் நோக்கிச் சென்றாள். முத்தநாதன் சங்கரா சிவ ! சிவா! என்று பலமாக இறைவனின் திருநாமத்தை ஓதியபடியே, திருவெண்ணீற்றை எடுத்த உடம்பிலும் நெற்றியிலும் தேய்துக் கொண்டு மன்னனுக்கும் கொடுத்தான். திருவெண்ணீற்றை வாங்கி, பயபக்தியோடு நெற்றியிலும், மேனியிலும், முறையோடு விதிப்படி ஐந்தெழுத்தை மனதில் நினைத்தபடியே அணிந்து கொண்டார் மன்னர் ! ஐயனே ! இவ்வடியேனுக்கு அருள் செய்தல் வேண்டும் என்று பணிவுடன் வேண்டி நின்றார் மன்னர். மன்னவர் சிரம் தாழ்த்தி முத்தநாதனை வணங்கிய போது அப்பகையரசன் ஏட்டுச் சுவடியைப் பிரிப்பது போல் அதனுள் இருந்த உடைவாளை வெளியே எடுத்தான். மன்னர் தலைவணங்கி நின்ற தருணம் பார்த்து அந்த வஞ்சகன் தான் நினைத்தபடியே செய்தான். அந்நிலையிலும், மன்னர் மனம் அவன் மீது சற்றுகூட வெறுப்போ, வேதனையே, கோபமோ, கொள்ளவில்லை. மெய்ப்பொருளார், மெய்த்தவ வேடமே மெய்ப்பொருள் என்று கூறி அவனைத் தொழுதார். குருதி வெள்ளத்திலே மிதந்த நாயனார் அக்கொடியவனின் திருநீறு அணிந்த உடம்பைப் பார்த்துச் சிவனையே நினைத்தார். முத்தநாதன் வாளெடுத்து மன்னரைத் தாக்கியதை மறைந்திருந்து பார்த்து மெய்க் காப்பாளன் தத்தன் நொடிப் பொழுதில், உள்ளே நுழைந்து, முத்தநாதனைக் கொல்லத் தன் உடைவாளை உருவினான். குருதி கொட்ட, தரையில் சாய்ந்து வீழ்கின்ற மெய்பொருளார் அந்த நிலையிலும் தமது வீரக்கரங்களை உயர்த்தி அவனைத் தடுத்து தத்தா நமர் என்று கூறிச் சாய்ந்தார்.

தத்தா ! இவர் நம்மைச் சேர்ந்தவர் என்ற பொருளை உணர்ந்த தத்தா நமர் என்று பகர்ந்து, நிலத்தில் சாய்ந்த மன்னனின் அன்பின் ஆழத்திற்கும், பக்தியின் உயர்விற்கும் அடிபணிந்தான் தத்தன், தலை வணங்கினான். அவன் உள்ளம் கோபத்தால் துடிதுடித்த போதும், தாபத்தால் உள்ளம் உருக, கண்கள் நீரைச் சொரியத்தான் செய்தன. கைகள் தளர, உடைவாளை உறையில் போட்டபடியே அரசரைத் தாங்கிப் பிடித்தான் தத்தன். மன்னர் தாங்க முடியாத வேதனையையும் தாங்கிக் கொண்டு, தத்தனிடம், தத்தா ! இவ்வடியார்க்கு எவ்வித இடரும் நேராவண்ணம் நம் எல்லை வரைக் கொண்டு போய் விட்டு விட்டு வருவாயாக ! என்று ஆணையிட்டார். மறுமொழி பேசாது, அப்படியே ஆகட்டும் வேந்தே ! என்றவாறே அரசரை வணங்கிவிட்டு அந்த அரக்கமனம் கொண்ட பகையரசனோடு புறப்பட்டான் தத்தன். மன்னர்க்கு ஏற்பட்ட துன்பம் காட்டுத் தீபோல் நாடு நகரமெங்கும் பரவியது. அரசியார் செய்தியறிந்து அந்தப்புரத்தில் இருந்து உள்ளம் பதைபதைக்க ஓடோடி வந்தாள். ஐயனை மடிமீது தாங்கி பலவாறு புலம்பி அழுதாள். முத்தநாதனின் கொடிய செயலைக் கேள்வியுற்றுக் கொதித்தெழுந்தனர் மக்கள். தத்தன் மக்களிடம் மன்னர் ஆணையை எடுத்துக் கூறினான். அனைவரும் வேதனையோடு மன்னரைக் காண அரண்மனைக்கு வெள்ளம் போல் திரண்டு சென்றனர். தத்தனும் முத்தநாதனை நகரின் எல்லையைக் தாண்டி கொண்டு போய் சேர்த்தான். காற்றிலும் கடுகி அரண்மனை விரைந்தான். தத்தன் வரும்வரை மன்னர் <உயிர் துடித்துக் கொண்டேதான் இருந்தது. மன்னரது கவலை எல்லாம் முத்தநாதனுக்கு எவ்வித பேராபத்தும் நேரக்கூடாதே என்பதுதான் ! தத்தன், விரைந்து வந்து, மன்னரை வணங்கி, அரசே ! தங்கள் ஆணைப்படி அத்தவசியை நல்ல முறையில் ஆபத்து எதுவுமின்றி எல்லையைக் கடந்து அனுப்பி வைத்தேன் என்றான். மன்னர் நாக்குழற, இன்றைக்கு என் ஐயன் செய்தது யாரே செய்யவல்லார் என்று கூறியவாறே தலையைச் சாய்த்தார். அவரது ஆவியும் பிரிந்தது. அப்பொழுது அவ்வறையிலே பேரொளி பிறந்தது. இடபத்தின் மேல் எம்பெருமான் சக்தி சமேதராய் எழுந்தருளினார். எம்பெருமான் திருவருளால் மெய்பொருளார் புதுப்பொலிவுடனும், இளமையுடனும் உயிர் பெற்று எழுந்தார். அரசியார் அகம் மகிழ்ந்தார்கள். தத்தன் ஆனந்தத்தால் தத்திக் களித்தான். மக்கள் மனம் மகிழ்ந்தனர். மெய்ப்பொருளார்க்கு ஆனந்தக் காட்சி அளித்த அம்பலத்தாண்டவன் அச்சிவனருட் செல்வர்க்கும், அவரது அருமை மனைவியர்க்கும் எப்பொழுதும் தம்மோடு வாழும் சிவப்பேற்றினை அருளினார். உயிர் போகின்ற சமயத்திலும் கூட, சிவனடியார்களிடத்தும், வெண்ணீறு அணிந்தவர்களிடத்தும் பக்தியுடையவராய் வாழுங்கள் என்று வாழ்ந்து காட்டி, உயிர் நீத்தார் மெய்ப்பொருளார் என்றால் அவரது பக்தி எத்துணைச் சிறப்பு மிக்கது என்பதனை அளவிடயாரேவல்லார்!

சேதிபர்நற் கோவலூர் மலாட மன்னர்
திருவேட மெய்ப்பொருளாத் தெளிந்த சிந்தை
நீதியனா ரூடன்பொருது தோற்ற மாற்றா
னெடுஞ்சினமுங் கொடும்பகையு நிகழா வண்ண
மாதவர்போ லொருமுறைகொண்ட டணுகி வாளால்
வன்னமபுரிந் திடமருண்டு வந்த தத்தன்
காதலுற நமர்தத்தா வென்று நோக்கிக்
கடிதகல்வித் திறைவனடி கைகொண் டாரே.

திருச்சிற்றம்பலம்
--------------------------------------------------------------------------------------------------------------------
62:வாயிலார் நாயனார்
"தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்"
No photo description available.
வாயிலார் என்னும் பெயர் பெற்ற நாயன்மார் சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்தவர். இவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் 63 நாயன்மார்களில் ஒருவர் ஆவார். இவர் எப்பொழுது வாழ்ந்தார் என்று திட்டவட்டமாகத் தெரியவில்லை. இவரைப்பற்றி 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சேக்கிழார் அவர்கள் தம்முடைய பெரியபுராணத்திலும், 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயன்மார், அவருடைய திருத்தொண்டத் தொகையில் "தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்" என்று கூறியிருப்பதாலும், இவர் 8 ஆம் நூற்றாண்டுக்கும் முன்னர் வாழ்ந்த சிவனடியார் என்பது புலப்படும். இவர் வாழ்க்கையின் வரலாறு மிகவும் சுருக்கமானது. இவர் சிவபெருமானையே எப்பொழுதும் மனத்திலே வைத்துத் தொழுது ஏதும் பேசாமலே அன்பு செய்து இறைபதம் எய்தினார் என்பதே. இவர் சூத்திரத் தொல்குடியில் பிறந்த வேளாளர் என்பதை பெரிய புராணத்தில்,
கூறுகின்றார். இதில் "தன்மை வாயிலார் என்னும் தபோதனர்" என்னும் தொடர் மிகவும் இன்றியமையாதது. வாயிலார் என்னும் பெயர் அவர் பேசாமல், மௌனமாய் சிவன் பால் அன்பு வழிபாடு செய்தவர் என்னும் பொருளோடு, அவர் என்றும் "நான்" என்னும் அகந்தை எழாத அரும் தன்மையைப் பெற்றிருந்தார் என்பதை "தன்மை வாயிலார்" என்பது குறிக்கும். தன்மை என்பது "நான்" என்பதைக் குறிப்பது.

மன்னு சீர்மயி லைத்திரு மாநகர்த்
தொன்மை நீடிய சூத்திரத் தொல்குல
நன்மைசான்ற நலம்பெறத் தோன்றினார்
தன்மை வாயிலார் என்னும் தபோதனர்

திருச்சிற்றம்பலம்.
------------------------------------------------------------------------------------------------------------------
63:விறன்மிண்ட நாயனார்
“விரிபொழில்சூழ் குன்றையர் விறன்மிண்டர்க் கடியேன்”
No photo description available.
சேரநாட்டுச் செங்குன்றூரில் வேளான்குடி விளங்க அவதரித்தவர் விறன்மிண்டர். அவர் சிவனடியே பற்றாகப் பற்றி ஏனையபற்றெல்லாவற்றையும் முற்றாகத் துறந்தவர். சிவனடியாரிடத்தே பெரும் பக்தி பூண்டவர்.
திருத்தலம் தோறும் சென்று வழிபாடாற்றும் வழக்கமுடைய இப்பக்தர் முதலில் திருக்கூட்டத்தை வணங்கிப் பின்னரே கோயிலுட் சென்று வழிபடும் நியமத்தினர். இக்கொள்கையை விடாதுபின்பற்றும் விறன்மிண்டர் சேரநாட்டுத் தலங்களை வழிபட்டு சோழநாட்டுத் திருத்தலங்களையும் வணங்கும் காதலால் திவாரூர்த்தலத்தை அடைந்து அங்கு சில நாள் தங்கினார். அந்நாளில் திருவாரூர்த் தேவாசிரிய மண்டபத்தில் வீற்றிருந்த திருக்கூட்டத்தைக் கண்டு ஒருவாறு ஒதுங்கிச் சென்ற சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் கண்ணுற்றதும், ‘இவன் திருக்கூட்டத்தாரை வழிபடாது கோயிலுட் செல்கின்றாதானதால் திருக்கூட்டத்திற்கு இவனும் புறகு; இவனையாண்ட சிவனும் புறகு என்று கூறினார். விறன்மிண்டரது அடியார் பக்தித் திறத்தை அறிந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள், திருவாரூர்க் கோயிலுட் புகுந்து தியாகராசப் பெருமானைக் கும்பிட்டு நிற்கும்போது “அடியேன் இவ்வடியார்க்கெல்லாம் அடியானாகும் நாள் என்று” வேண்டுதல் செய்தார். அப்பொழுது பெருமான் “நாம் அடியாருடன் உளோம்; அடியாரைப்பாடு என்றருளி “தில்லைவாழந்தணர்” என அடியெடுத்துக் கொடுத்தார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேசமெல்லாம் உய்வதற்கு காரணமானதும், சைவநெறியின் சீலம் விளங்கச் செய்வதுமான திருத்தொண்டத் தொகைத் திருப்பதிகத்தை “தில்லைவாழந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என்பதை முதலாகக் கொண்டு பாடியருளினார்.
இவ்வண்ணம் சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத்தொகை பாடுவதற்குக் காரணமாய் அமைந்த விறண்மிண்டநாயனார், பெருமாள் அருளால் திருவடி நிழலை அடைந்து கணநாதராய் விளங்கும் பேற்றினைப் பெற்றார்.

விளங்குதிருச் செங்குன்றூர் வேளாண் டொன்மை
விறன்மிண்டர் திருவாரூர் மேவு நாளில்
வளங்குலவு தொண்டரடி வணங்கா தேகும்
வன்றொண்டன் புறகவனை வலியே வாண்ட
துளங்குசடை முடியோனும் புறகென் றன்பாற்
சொல்லுதலு மவர்தொண்டத் தொகைமுன் பாட
வுளங்குளிர வுளதென்றா ரதனா லண்ண
லுவகைதர வுயர்கணத்து ளோங்கி னாரே

திருச்சிற்றம்பலம்
----------------------------------------------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment